'தேசியப் பட்டியலை உலமாக்களுக்கு பிரித்து வழங்குவது, மர்ஹும் அஷ்ரபுக்கு செய்யும் கௌரவம்'
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசின தேசிய பட்டியலில் ஒன்றை முஸ்லிம் காங்கிரசின் வளர்ச்சிக்காக உழைத்த மூத்த உலமாக்களுக்கு வருடத்தில் ஒருவர் என்ற வகையில் பிரித்து வழங்குவதே மறைந்த தலைவருக்கு செய்யும் கௌரவமாகும் என உலமா கட்சித்தலைவர் கலாநிதி முபாறக் மௌலவி தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவித்ததாவது, முஸ்லிம் காங்கிரசை வளர்த்தெடுப்பதில் பாரிய பங்கு வகித்த மூத்த போராளிகள் மற்றும் உலமாக்கள் அக்கட்சியினால் சரியாக கௌரவப்படுத்தப்படவில்லை என்ற ஆதங்கம் பலருக்கும் உண்டு. ஐக்கிய தேசிய கட்சியின் அதிகாரம் கிழக்கில் காலூன்றியிருந்த வேளையில் தலைவர் அஷ்ரபுடன் இணைந்த பலர் இந்த சமூகத்துக்கான கட்சி தேவை என்பதற்காக பாரிய அர்ப்பணிப்புடன் செயற்பட்டனர். இதில் கணிசமான அளவு உலமாக்கள் மிகப்பெரிய பங்கை வழங்கியுள்ளனர்.
எந்த வித சுயநலனோ எதிர் பார்ப்போ இன்றி பாரிய உயிர் அச்சுறுத்தலுக்கு மத்தியில் அவர்கள் முஸ்லிம் காங்கிரசுக்காக உழைத்துள்ளார்கள். இதில் நாம் அறிந்த வரை நம்முடன் சம்மாந்துறை புகாரி மௌலவி, கொழும்பு அப்துல் மஜீத் ஆலிம், ஷேக் மசீஹுத்தீன் இனாமுள்ளா போன்றோர் கட்சிக்காக அரும்பாடுபட்டவர்கள் மட்டுமல்ல அக்கட்சியை தூக்கி நிறுத்தியவர்களில் முக்கியமானவர்கள். இவர்களது பங்களிப்பை அவ்வளவு எளிதாக இந்த சமூகமும் முஸ்லிம் காங்கிரசும் மறந்து விட முடியாது. எனினும் இத்தகைய உலமாக்களை முஸ்லிம் காங்கிரஸ் சரியாக கௌரவித்துள்ளதா என்பதை அக்கட்சியினர் அவசியம் சிந்திக்க வேண்டும்.
ஆகவே முஸ்லிம் காங்கிரசுக்காக 1990ம் ஆண்டுக்கு முன்பிருந்தே பாடுபட்ட மௌலவிமார் இனங்காணப்பட்டு அவர்களுக்கு மு. காவின் தேசிய பட்டியலில் ஒன்றை சுழற்சி முறையில் வழங்க இன்றைய தலைவர் அமைச்சர் ரஊப் ஹக்கீம் நடவடிக்கை எடுப்பார் என நாம் நம்புகிறோம். தலைவர் அஷ்ரப் உயிருடன் இருந்திருந்தால் நிச்சயம் அவ்வாறே செய்திருப்பார். இவ்வாறு உலமாக்களுக்கு வருடத்துக்கொருவர் என்ற வகையில் தேசிய பட்டியலை வழங்குவது தலைவர் அஷ்ரபுக்கு செய்யும் கௌரவமாகும்.
பெளத்த மதகுருமார் பாராளுமன்றம் வருவதை வெறுக்கும் நாம், இதவரை ஒரு கிறிஸ்தவ பாதிறியோ, ஐயரோ பாராளுமன்றம் வராத நிலையில், உலமாக்களை கொண்டு போனால், அந்நிய சமூகம் ஹாமதுரு மாரை சாரை சாரையாக அனுப்பும் நிலைதான் உருவாகும்.
ReplyDeleteஇல்லாத பிரச்சினையை உருவாக்க வேண்டாம், நம்மிடம் மெளலவிகள் இருப்பதை விட, பலமுள்ள பெளத்த தேரர்கள் அவர்களிடம் உள்ளனர். தேவையில்லாத முன்மாதிரிக்கு வழிகாட்டிவிட வேண்டாம்.
உலமாக்களா? பள்ளிவாசலில் இருக்கின்ற பிரச்சினை போதும், இவர்கள் வெள்ளிக்கிழமை ஜும்மா செய்கின்ற அளள்கைப் பார்த்தால் காதில் இரத்தம் வடியும், இந்த லட்சணத்தில் பாராளுமன்றமா? ஐயா வேண்டாம்.
ReplyDeleteஉங்களை பார்த்து ஹாமதுருமாரும் பாராளுமன்றம் வந்து குந்திக் கொண்டால், அது பாராளுமன்றமாக அல்லாமல், மடமாக மாறிவிடும்.
நாயின் வேலையை கழுதை செய்யக்கூடாது என்று சும்மாவா சொன்னார்கள்.
இலங்கையில் யார் அந்த மவ்லவிமார்? லெப்பைகளா?
ReplyDeleteThis mubarak always thinking how to create the problem among the peoples.
ReplyDeleteஏற்கனவே பல ஹாமதுருமார் பாராளுமன்றத்தில் இருந்துள்ளனர். தற்போதும் ஒருவர் இருக்கின்றர். ஆனைத்து ஹாமதுருமாருக்கும் அரசியல் தெரியாது. அது போல் அனைத்து மௌலவிகளுக்கும் அரசியல் புரியாது. 1 வீதமான மௌலவிமாரோ அரசியல் அறிவுள்ளவர்கள். அதில் ஈடு படுபவர்கள். மு. கா ஆரம்பிக்கப்பட்ட போது இந்த மௌலவிமார் பள்ளிக்குள் கத்பா ஓதிக்கொண்டிருக்கவில்லை. வெளியே மக்களிடம் பாடுபட்டனர். கள்ளனும் குடிகாரனும் அதிகம் இருக்கும் பாராளுமன்றத்தில் உலமாக்கள் இருக்க கூடாது என்பவன் யூதனாகத்தான் இருக்கும்.
ReplyDeleteyour right yaseer and before that we have to dissolve this ullama party first of all
ReplyDeleteஉலக்கை உலமாகளை உலக்கை என்று சொன்னால் அதகாக கோவம் வந்து ஒரு முஸ்லிமைப் பார்த்து யூதன் என்று சொல்பவன் எப்படி முஸ்லிம் ஆக இருக்க முடியும்?
ReplyDelete