Header Ads



பாராளுமன்றத்தில் சீறிய அநுரகுமார

நாடாளுமன்றம் இன்று கூடியபோது எதிர்க்கட்சியின் பிரதான அமைப்பாளர் அனுரகுமார திசாநாயக்கவின் கேள்விகளால் ஆளுங்கட்சி கடுமையாகத் திணறியது.

நாடாளுமன்ற நிலையியற் கட்டளைகளின் பிரகாரம் இன்று அவர் பத்துக்கேள்விகளை ஆளுங்கட்சி அமைச்சர்களிடம் முன்வைத்தார்.

எனினும் அவரது கேள்விகளில் பெரும்பான்மையான கேள்விகளுக்குப் பதிலளிக்கப்படவில்லை. இதுகுறித்து அனுரகுமார கடுமையாக விமர்சித்தார்.

ஆளுங்கட்சியினர் தனது கேள்விகளைத் தவிர்த்துச் செல்ல முயற்சிப்பதாகவும், மோசடிக்காரர்களுக்குத் தண்டனை அளிப்பது குறித்த அரசாங்கத்தின் வாக்குறுதி காற்றில் பறக்கவிடப்பட்டுள்ளதாகவும் அவர் குற்றம் சாட்டினார்.

இதற்குப் பதிலளித்துள்ள ஆளுங்கட்சியின் பிரதான அமைப்பாளர் லக்ஸ்மன் கிரியெல்ல, அனுரகுமாரவின் கேள்விகளை அரசாங்கம் உதாசீனப்படுத்தவில்லை என்றும், எதிர்வரும் நாட்களில் அது தொடர்பாக விரிவான பதில்களை அளிக்க நடவடிக்கை எடுப்பதாகவும் உறுதியளித்துள்ளார்.

No comments

Powered by Blogger.