Header Ads



அமைச்சர்கள் கடமையேற்பின் போது, நடைபெற்ற கூத்துக்கள் (வீடியோ)

மீன்பிடி மற்றும் நீரியல்வள இராஜாங்க அமைச்சர் திலிப் வெதாரச்சி இன்று (16) தமது கடமைகளைப் பொறுப்பேற்றுக் கொண்ட பின்னர் எச்சரிக்கையொன்றை விடுத்தார்.

அவர் குறிப்பிட்டதாவது;

தங்காலையில் கூட்டமைப்பின் அமைப்பாளர் மஹிந்த அமரவீரவிற்கு அமைச்சரவை அந்தஸ்த்துள்ள அமைச்சுப் பதவியை வழங்கிவிட்டு தங்காலையின் ஐக்கிய தேசியக் கட்சி அமைப்பாளரான எனக்கு இராஜாங்க அமைச்சுப் பதவியை வழங்கியுள்ளனர். நாம் எவ்வாறு இதனைச் செய்வது? எம் இருவரையும் அழைத்துச் சென்று பிரத்தியேக வகுப்பு நடத்த வேண்டும். அவ்வாறு வகுப்பு நடத்தி எவ்வாறு செயற்பட வேண்டும் என்பதனைக் கூற வேண்டும். இல்லாவிடின் சண்டையிட்டுக் கொண்டு, குறை கூறிக்கொண்டு மக்களுக்கு பணியாற்ற முடியாது. அதனை உரிய முறையில் செயற்படுத்தாவிடின் நான் இந்த அமைச்சுப் பதவியில் இருந்து இராஜினாமா செய்வேன். பாராளுமன்ற உறுப்பினராக மக்கள் மத்தியில் இருப்பேன் என்றார்.


No comments

Powered by Blogger.