வசிம் தாஜுதீனின்உடல் பாகங்களை காணவில்லை - CID அதிர்ச்சி தகவல்
ரகர் வீரர் வசிம் தாஜூடீனின் உடல் பாகங்களைக் காணவில்லை என புலனாய்வுப் பிரிவினர் நேற்று (22) கொழும்பு நீதிமன்றில் அறிவித்துள்ளனர்.
சித்திரவதைக்கு உட்படுத்தப்பட்டு கொலை செய்யப்பட்டதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ள வசீம் தாஜூடீனின் சடலத்திலிருந்து முன்னதாக பெற்றுக்கொள்ளப்பட்ட உடல் பாகங்களைக் காணவில்லை என தகவல்கள் கிடைத்துள்ளதாக புலனாய்வுப் பிரிவினர், கொழும்பு மேலதிக நீதவான் நிசாந்த பீரிஸிடம் தெரிவித்துள்ளனர்.
தாஜூடீனின் சடலத்தை முதலில் பிரேதப் பரிசோதைனக்கு உட்படுத்திய முன்னாள் சட்ட வைத்திய அதிகாரி ஆனந்த சமரசேகர, உடல் பாகங்களை குளிரூட்டியில் சேமித்து வைத்திருந்தார் என குறிப்பிடப்பட்டுள்ளது.
எனினும், உடல் பாகங்களை ஒப்படைத்தமை குறித்து எவ்வித ஆவணங்களும் இல்லாத காரணத்தினால் உடல் பாகங்களை பெற்றுக்கொள்ள முடியவில்லை என பிரதான சட்ட வைத்திய அதிகாரி அஜித் தென்னக்கோன் தெரிவித்துள்ளார்.
2012ம் ஆண்டு மே மாதம் 17ம் திகதி நாரஹேன்பிட்டிய சாலிகா வீதியில் வாகனமொன்றில் எரியுண்ட நிலையில் தாஜூடீனின் சடலம் மீட்கப்பட்டது.
முன்னதாக இந்த மரணம் ஓர் விபத்து என விசாரணைகளின் மூலம் அறிவிக்கப்பட்ட போதிலும், தற்போது இந்த மரணம் ஓர் திட்டமிட்ட கொலை என சந்தேகம் வெளியிடப்பட்டுள்ளது.
முன்னதாக பிரேதப் பரிசோதனை நடத்திய சட்ட வைத்திய அதிகாரியிடம் சடலத்தின் எக்ஸ்ரே படம் இருப்பதாகவும் இதனை புதிதாக பிரேதப் பரிசோதனை செய்யும் குழுவிடம் ஒப்படைக்குமாறும் தற்போதைய சட்ட வைத்திய அதிகாரி அஜித் தென்னக்கோன் கோரியுள்ளார்.
எக்ஸ்ரே படம் மற்றும் முன்னதாக பரிசோதனைக்கு உட்படுத்திய உடற் பாகங்கள் பற்றிய தரவுகளையும் உள்ளடக்கியே இறுதி அறிக்கையை தயாரிக்க முடியும் என அவர் குறிப்பிட்டுள்ளார் என புலனாய்வுப் பிரிவினர் நீதிமன்றில் அறிவித்துள்ளனர்.
இதற்கு மேலதிகமாக முன்னதாக பிரேதப் பரிசோதனை நடத்திய வைத்தியர் குழாமில் அங்கம் வகித்த டாக்டர் ராஜகுரு, உடற் பாகங்களை பாதுகாப்பாக பேணுமாறு முன்னாள் சட்ட வைத்திய அதிகாரி ஆனந்த சமரசேகரவிடம் கோரியிருந்தார் என புலனாய்வுப் பிரிவினர் நீதிமன்றில் தெரிவித்துள்ளனர்.
வசீம் தாஜுதீன் கொலை செய்யப்பட்டவர் சுதன்ரமாக உல்லாசமாக நடமாடுகிறார் .இந்த அரசோ எந்த கோட் சட்டமொமோ தத்போது யாருக்கும் நம்பிக்கை இல்லை.வசீமின் உடலை வைத்து நாட்டில் முஸ்லிம் மக்களை ஐக்கிய தேசிய கட்சி ஏமாற்றிவிட்டது. இந்த அரசாங்கம் இப்படியே போனால் மீண்டும் மகிந்த ராஜபச வருவதுக்கு சாத்தியம் இருக்கிறது.இந்த அரசாங்கம் தேர்தலின் பிறகு முஸ்லிம்களை மதிப்பது இல்லை.
ReplyDeleteஇது யாரோ யாரையோ காப்பாற்றுகின்ற ரகசிய நாடகத்தின் ஓர் அங்கமாக இருப்பதற்கு வாய்ப்பு நிறையவே உள்ளது.
ReplyDelete