''இஸ்லாமிய குழந்தை நீரில் மூழ்கத்தான் முடியும்'' சார்லி ஹெப்டோவின் இனவெறி...!
கடலில் மூழ்கி உயிரிழந்த சிறுவனின் புகைப்படம் குறித்து கேலி சித்திரம் ஒன்றை வெளியிட்டு பிரான்ஸ் நாளிதழான சார்லி ஹெப்டோ சர்ச்சையில் சிக்கியுள்ளது.
சிரியாவில் நடைபெற்று வரும் போர்ச்சூழலால் ஆயிரக்கணக்கானோர் ஐரோப்பிய நாடுகளில் தஞ்சம் புகுவதற்காக, கடல் வழியாக பாதுகாப்பற்ற பயணம் மேற்கொள்கின்றனர்.
அப்படி துருக்கியில் இருந்து கிரீஸ் நாட்டுக்கு 23 பேர், 2 படகுகளில் பயணம் மேற்கொண்டனர். அப்போது படகு கவிழ்ந்ததில் 12 பேர் கடலில் மூழ்கி உயிரிழந்தனர்.
இதில் 5 பேர் பச்சிளம் குழந்தைகள். இந்த விபத்தில் இருந்து 9 பேர் மட்டுமே உயிருடன் மீட்கப்பட்டனர்.
அதில் மூன்று வயது மட்டுமே ஆன ஐலான் என்ற சிறுவனின் மரணம் கல் மனதை கரைக்கும் நிகழ்வாக அமைந்துள்ளது.
இக்குழந்தை இறந்துகிடப்பது போன்று வெளியான புகைப்படம் உலக நாடுகளை அதிர்ச்சியில் ஏற்படுத்திய நிலையில், இந்த புகைப்படத்தி கேலி செய்யும் விதமாக கேலி சித்திரம் ஒன்றை சார்லி ஹெப்டோ பத்திரிகை வெளியிட்டுள்ளது.
அதில், ஏசு கிறிஸ்து போன்ற தோற்றத்தில் ஒருவர் கடல் நீரின் மீது நடந்து வருவதைபோலவும், அருகே, சிரியா நாட்டு குழந்தை கடலில் மூழ்கிய போட்டோவும் வரையப்பட்டுள்ளது.
மேலும், கிறிஸ்தவர்கள் நீரில் மேல் நடக்கும் வல்லமை கொண்டவர்கள் என்றும், இஸ்லாமிய குழந்தை நீரில் மூழ்கத்தான் முடியும் என்றும் அந்த கேலி சித்திரம் விளக்க குறிப்பு கொடுத்துள்ளது.
இந்த கேலி சித்திரத்திற்கு சமூக வலைதளங்களில் கண்டனங்கள் எழுந்துள்ளது.
நபிகள் நாயகத்தை பற்றி கேலி சித்திரத்தை வெளியிட்டு இஸ்லாமியர்களின் கண்டனங்களுக்கு ஆளானதோடு மட்டுமல்லாமல் தீவிரவாதிகள் சிலர் சார்லி ஹெப்டோ அலுவலகம் புகுந்து 12 ஊழியர்களை சுட்டு கொலை செய்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
கிறிஸ்தவர்களும் கடலில் மூழ்கித்தான் ஆவார்கள். சிறுவனின் மரணம் மதங்களுக்கு அப்பால் பட்டது. அதனை மனிதாபிமான நோக்குடன் பார்க்க வேண்டும்.
ReplyDeleteஅடுத்தவனிடம் எச்சு வாங்கியே புகழ் பெறுவது சிலருக்கு வாடிக்கை ஆகிவிட்டது.