வசீம் தாஜூடீனின் மரபணு, பரிசோதனை இன்னமும் பூர்த்தியாகவில்லையாம்..!
ரகர் வீரர் வசீம் தாஜூடீனின் உடற் பாகங்கள் தொடர்பிலான மரபணு பரிசோதனை இன்னமும் பூர்த்தியாகவில்லை என ஜீன்டெக் நிறுவனம் தெரிவித்துள்ளது.
மரபணு பரிசோதனை செய்ததன் பின்னர் அறிக்கை சமர்ப்பிக்கப்படும் என ஜீன்டெக் நிறுவனத்தின் சிரேஸ்ட விஞ்ஞானி ஜே.இளப்பெரும கொழும்பு மேலதிக நீதவான் நிசாந்த பீரிஸ் முன்னிலையில் தெரிவித்துள்ளார்.
கொழும்பு பிரதான சட்ட வைத்திய அதிகாரி டொக்டர் அஜித் தென்னக்கோன் உடற்பாகங்களை அனுப்பியதாகத் தெரிவித்துள்ளார்.
இரண்டாவது தடவையாகவும் சடலம் தோண்டி எடுக்கப்பட்டதன் பின்னர் இரண்டு எலும்புகள் மற்றும் பல் ஒன்று அனுப்பி வைக்கப்பட்டதாகத் தெரிவித்துள்ளார்.
தாஜூடீனின் தாய் பாதிமாவிடம் கடந்த 14ம் திகதி இரத்த மாதிரி எடுத்துக்கொள்ளப்பட்டதாகத் தெரிவித்துள்ளார்.
Post a Comment