Header Ads



சிறைச்சாலையில் பரபரப்பை, ஏற்படுத்தியுள்ள தொப்பி (வீடியோ இணைப்பு)


(வீடியோ இணைப்பு)

பிரபல போதைப் பொருள் கடத்தல் மன்னன் முஹம்மத் சித்தீக்கிற்கு விசேட வரப்பிரசாதங்களை வழங்கிய சிறைச்சாலை உத்தியோகத்தர்கள் மூவர் இன்று இடைநிறுத்தம் செய்யப்பட்டுள்ளனர்.
போதைப் பொருள் கடத்தல் மன்னன் வெலே சுதாவின் முக்கிய சகாக்களில் ஒருவரான முஹம்மத் சித்தீக் என்பவர் பாகிஸ்தானில் மறைந்திருந்த நிலையில் கைது செய்யப்பட்டு இலங்கைக்கு அழைத்து வரப்பட்டிருந்தார்.

கடந்த ஆறுமாதகாலமாக போதைப்பொருள் தடுப்புப் பிரிவினரால் தடுத்து வைக்கப்பட்டு விசாரணைக்குட்படுத்தப்பட்டிருந்த சித்தீக், நேற்று முன்தினம் கொழும்பு பிரதான மாஜிஸ்திரேட் கிஹான் பிலப்பிட்டிய முன்னிலையில் ஆஜர் செய்யப்பட்டார்.

அவரை எதிர்வரும் அக்டோபர் 02ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

இந்நிலையில் சந்தேக நபரான சித்தீக் நீதிமன்ற தடுப்புக்கூடத்தில் இருந்த நிலையில் அவருடன் பேச வெளியார் ஒருவருக்கு சிறைச்சாலை உத்தியோகத்தர்கள் இடமளித்திருந்தனர்.

மேலும் குறித்த வெளிநபரையும் சிறைக்கூடத்திற்குள் அனுப்பி சித்தீக்குடன் பேசிக்கொண்டிருக்க வசதி ஏற்படுத்திக் கொடுத்திருந்தனர். 

இதுகுறித்து ஊடகங்களில் வெளியான செய்தியைத் தொடர்ந்து சிறைச்சாலைகள் திணைக்களம் விரைவான விசாரணை ஒன்றை மேற்கொண்டிருந்தது.


விசாரணையில் கிடைக்கப்பெற்ற பரிந்துரைகளின் அடிப்படையில் சம்பவத்துடன் தொடர்புடைய ஜெயிலர் ஒருவர், சிறைச்சாலை சார்ஜண்ட் மற்றும் வார்டன் என மூவர் இன்று முதல் பணியிலிருந்து இடைநிறுத்தம் செய்யப்பட்டுள்ளனர்.

5 comments:

  1. குடுக்காரனுக்கு உதவுகின்றவன் கூட தொப்பி, தாடி, ஜுப்பா என்கின்ற சூரத்தில் தானா இருப்பான்?

    ReplyDelete
  2. Are yiu still baby?ISIS wearing muslums dress.wuthjubba dhadi??

    ReplyDelete
  3. குடுயாவாரிகள் அனேகர் இபாதத்தாரி தோற்றத்தில்தான் இருக்கிறார்கள். ஜுப்பாவும் தாடியும் தொப்பியும் அவர்களைவிட்டு பிரிக்கமுடியாது. மேலும் சதகா, தான தர்மங்களிலும் அவர்களை மிஞ்ச யாராலும் முடியாது. ஹஜ்ஜுக்கு போகாமலேயே பல குடு வியாபாரிகள் ஹாஜியார் அந்தஸ்தை பெற்றிருக்கிறார்கள். குமரிகளை கரைசேர்க்க சவடி செய்துகொடுப்பதும் இவர்களின் வாடிக்கையான உதவிகளில் ஒன்று... தீமைகளைவிடவும் நன்மைகள் அதிகம் செய்கிறோம் என்று தனக்கு தானே சமாதானம் சொல்லிக்கொண்டு இப்படியான படு கேவலமான காரியங்களை செய்கிறார்கள் என்பதை மறுக்கமுடியாது.

    ReplyDelete
  4. எங்கே தவ்ஹீத் ஜமாத்இற்கு திட்டிய சகோதரர்கள்?

    ReplyDelete
  5. Irukkuraanugale....intha putti ketta jenmangal...
    Kaasukkaga...pinattaum tinnum in tha paalaappona paavigalaala....Muslim samoohattukke...talai kunive....

    ReplyDelete

Powered by Blogger.