சடலத்தை பணயமாக வைத்த, லங்கா ஹொஸ்பிடல்ஸ்
வைத்தியசாலைக் கட்டணத்தை செலுத்தாமலேயே சடலத்தை உறவினர்களிடம் ஒப்படைக்குமாறு வைத்தியசாலைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில் இவ்வாறு வைத்தியசாலைக்கு சடலத்தை ஒப்படைக்க உத்தரவிடப்பட்டுள்ளது.
வைத்தியசாலைக் கட்டணத்தை செலுத்தாத காரணத்தினால் பிரபல தனியார் வைத்தியசாலை ஒன்றினால், வைத்தியசாலையில் உயிரிழந்த நபர் ஒருவரின் சடலத்தை பணயமாக வைத்துக் கொண்ட சம்பவம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
நாரஹேன்பிட்டி லங்கா ஹொஸ்பிடல்ஸ் நிறுவனம் இவ்வாறு சடலமொன்றை பணயமாக வைத்திருந்ததாகக் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
பணயமாக வைக்கப்பட்டிருந்த இந்த சடலத்தை உடனடியாக விடுவிக்குமாறு கொழும்பு மேலதிக நீதவான் நிசாந்த பீரிஸ் உத்தரவிட்டுள்ளார்.
சடலத்தை விடுவிக்க வைத்தியசாலைக் கட்டணமாக 14 லட்சத்திற்கும் அதிகமான தொகையை செலுத்துமாறு கோரியுள்ளது.
இருதய நோயினால் பாதிக்கப்பட்ட நபர் ஒருவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சத்திரசிகிச்சை மேற்கொண்ட போது, கடுமையாக சுகவீனமுற்று வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
தலுவத்தே பாலபட்டபந்திகே திலுக் தலுவத்தே என்ற 62 வயதான நபர் ஒருவரின் சடலத்தையே இவ்வாறு விடுவிக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
உயிரிழந்தவரின் சகோதரர் ஒருவரினால் பொலிஸ் நிலையத்தில் செய்த முறைப்பாட்டை அடுத்து இந்த விடயம் நீதிமன்றில் வழக்குத் தொடரப்பட்டிருந்தது.
நபர் ஒருவரின் சடலத்தை பலவந்தமான அடிப்படையில் தடுத்து வைக்க எவருக்கும் உரிமை கிடையாது என நீதிமன்றம் அறிவித்துள்ளது.
ஐந்து லட்சம் ரூபாவிற்கு இருதய சத்திர சிகிச்சை மேற்கொள்வதாக உறுதி மொழி அளித்து நோயாளியை வைத்தியசாலையில் அனுமதித்த வைத்தியசாலை, மூன்று லட்சம் ரூபா முற்பணமாக செலுத்தியிருந்தனர்.
சத்திர சிகிச்சையினால் ஆபத்தான நிலைக்கு தள்ளப்பட்ட குறித்த நபரை தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்குமாறு விடுக்கப்பட்ட கோரிக்கையை லங்கா ஹொஸ்டபிடல்ஸ் நிர்வாகம் உதாசீனம் செய்து, தொடர்ந்தும் வைத்தியசாலையில் சிகிச்சை அளித்து வந்தததாகவும் இறுதியில் அவர் உயிரிழந்ததாகவும் தெரிவிக்கப்படுகிறது.
கடந்த ஒரு வார காலமாக இந்த சடலத்தை வைத்தியசாலை நிர்வாகம் பலவந்தமான அடிப்படையில் பணயமாக வைத்திருந்தததாகக் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

ப்ரைவேட் ஹோஸ்பிடல் மாபியா.
ReplyDeleteதைரியமாக ஹோஸ்பிடலின் பெயரை வெளியிட்டமைக்கு மிக்க நன்றி.
சாதாரணமாக இருதய அறுவைச் சிகிச்சைக்கு செல்லும் ஒருவர், வைத்தியர்களின் தவறால் மரணிக்கும் பொழுது, சடலத்தை கப்பமாக வைத்து முழு கட்டணத்தையும் செலுத்தி முடிக்க தனியார் வைத்தியசாலைகள் நிர்ப்பந்திக்கின்றன. வைத்தியர்களின் தவறால் மரணம் நிகழ்ந்தாலும் வைத்தியசாலைகள் அதனை பொறுப்பு எடுப்பதில்லை, அதற்காக நஷ்ட ஈடு கொடுப்பதும் இல்லை.
இந்த முறையில் மாற்றம் வேண்டும்.
தனியார் வைத்தியசாலைகள் லாப நோக்கத்தை கொண்டவை, வைத்தியத் தொழில் என்பது அதிக வருமானம் ஈட்டும் முக்கிய தொழில், அதன் காரணமாகவே அதிகமானவர்கள் தங்கள் பிள்ளைகள் வைத்தியராக வர வேண்டும் என்று ஆசைபப்டுகின்றனர். உண்மையில் இங்கே சேவை மனப்பான்மை மிகவும் குறைவு, (இல்லை என்று சொல்ல முடியாது.)
ReplyDeleteநோயாளியை சிகிச்சைக்காக அனுமதிக்கும் பொழுது அட்மிசன் போம் என்று சில போம்களில், எதையுமே வாசித்துப் பார்க்காமல் கையெழுத்து போட்டு விடுகின்றோம், அங்கேதான் தவறு நடக்கின்றது.
"சிகிச்சையின் முடிவு எத்தகையதாக அமைந்தாலும், முழுப் பணத்தை கட்டாமல், நோயாளியை உயிருடனோ, பிணமாகவோ விடுதலை செய்ய முடியாது" போன்ற நிபந்தனைகளையும் அங்கே நாகரீகமான வார்த்தைகளில் போட்டு இருப்பார்கள், அதனை பார்க்காமல் கையெழுத்து போட்டு விட்டு, பின்னர் வெள்ளம் தலைக்கு மேலே போன பின்னர் சண்டை பிடித்து பயனில்லை.
முஸ்லிம்கள் என்றால், போலிஸ் நீதிமன்றத்திற்கும் போக மாட்டார்கள், லேட் ஆகாமல் உடனே மையத்தை எடுக்கக் வேண்டும், அடக்க வேண்டும் என்கின்ற அவசரம்.
மெளனமாக நடக்கும் இந்த அநியாயத்திற்கு எதிராக முறையான் நடவடிகை மேற்கொண்டு, இதனை ஒரு கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர வேண்டும்.
Government should think of taking over the so called private hospitals and adopt a mechanism similar to that practiced in Thailand. They charge fee according to the income of the patient. This could prevent the innocent people from the Private Hospital Mafiya.
ReplyDeleteஅவசரமாக நோயாளியை அனுமதிக்கும் பொழுது நோயாளியின் உயிரும், விரைவ்ல் சுகமாக வேண்டும் என்ற டென்சனும் தான் இருக்கும், அப்ளிகேசனில் என்ன இருக்கு என்று வாசிக்க நேரம் இருக்காது. அரசாங்கம் சட்டம் இயற்றி, பிணத்தை வைத்து கப்பம் எடுப்பதை தடை செய்வதுதான் ஒரே வழி. இல்லாவிட்டால் கவர்ன்மென்ட் ஹோஸ்பிடல் விரிவு படுத்த வேண்டும், எல்லோரும் ஒழுங்காக டெக்ஸ் கட்ட வேனும்.
ReplyDelete