Header Ads



"சவூதி அரேபியாவை தாக்குதல்"

- M.JAWFER .JP-

மனித இனம் அன்று முதல் இன்று வரை பிறப்புச்சுதந்திரம் வாழ்வுச்சுதந்திரம் எழுத்துச் சுதந்திரம் பேச்சு சுதந்திரம் என்றல்லாம் பலவகையான சுதந்திரம் மனித வாழ்வுக்கு தேவை என்ற உரிமையோடு வாழ்ந்துகொண்டு பலவகையான உரிமைகளைப்பெற்று வாழும் மனிதன் இந்த சுதந்திரங்கள் சில வேலை அத்துமீறிப்போய் பாதாள குழியில் விழுந்து விடும் அளவுக்கு மனிதன் சென்று  கொண்டு இறக்கிறான் என்பது இக்கால உண்மையாக உள்ளது.

இப்போது விடயத்துக்கு  வருகிறேன். கடந்த வாரம் மக்காவில் புனித ஹரம் ஷரிபில் யாரும் எதிபாராத விபத்தொன்று நடந்து முழு உலகத்தையும் திரும்பிப்பார்க்க வைத்தது. இந்த விபத்து பற்றி பலதரப்பட்ட கருத்து மோதல்களையல்லாம் தாண்டி இப்போது ஒரு அமைதி நிலைக்கு வந்துள்ளது. இந்த விடயம் சம்மந்தமாக பலதரப்பட்ட கட்டுரைகளும் மீடியாக்களை துளைத்து காரசாரமான அழல் காற்றை வீசியது.

இதில் அதிகமாக மனிதாபிமான அடிப்படையிலும் இறைவனின் ஏற்பாட்டில் நடந்து முடிந்த ஒரு விபத்தாக ஏற்றுக்கொண்டு பொறுமைகாக்க வேண்டிய விடயத்தில் ஈமான் உள்ள முஸ்லிம்கள் என்ற அடிப்படையில் முஸ்லிம்கள் மத்தியில் ஒரு வகையான  அமைதி நிலவுகிறது. அல்ஹம்துலில்லாஹ். அதிகமான கட்டுரையாளர்கள் மக்கள் மத்தியில் அமைதி ஏற்படும் வண்ணமும் முஸ்லிம்களின் ஈமான் பாதிக்கப்படாத விதமாகவும் தங்களின் கருத்துக்களை பகிர்ந்து கொண்டார்கள்.

இவ்விடத்தில் வியப்புக்குரிய விடயம் கட்டுரைகளுக்கு பின்னூட்டம் எழுதும் சில வாசகர்கள் உண்மையிலேயே அளவுகடந்து இஸ்லாத்துக்கும் அவர்களுக்கும் சம்மந்தமில்லாதவர்கள் போல் இவர்கள் ஏன் இவ்வாறு பின்னூட்டம் எழுதுகிறார்கள் இவர்கள் இஸ்லாத்தை இழிவுபடுத்தும் வகையில் மறைமுகமாக செயல்படுகிறார்களா என்ற சந்தேகம் எழுகின்றது.

சவுதி என்பது ஒரு இரமைமிக்க நாடு. அந்த நாட்டுக்கும் சில சுதந்திரம் உண்டு. அதையும் தாண்டி வல்ல அல்லாஹ் அங்கு புனித தளங்களான மக்கா மதினா போன்ற இடங்களையும் சிறப்பாக வைத்துள்ளான். இது உலக முஸ்லிம்களின் பொதுவான இடமாக இருந்தாலும் அதை பராமரிக்ககூடிய பொறுப்பு சவுதி அரசிடம் உள்ளது. அவர்களும் பல்நாட்டிலுள்ள முஸ்லிம் புத்திஜீவிகளின் ஆலோசனையின் பிரகாரம் பலதரப்பட்ட அபிவிருத்தி வேலைகளை செய்து கொண்டு இருக்கிறார்கள். அதில் நடக்கும் தப்புத்தவருகளை நேரடியாக சவுதி களையும் சவுதி அரசையும் நேரடியாக தாக்கிப்பேசுவது எவ்வகையிலும் நியாயமாகாது.

இருந்தாலும் மனிதன் என்ற வகையில் பொறுப்புள்ளவர்கள் அவர்கள்தான் என்ற கொள்கைக்காக வேண்டி அவர்களை சாடுகிறோம்.நியாயம்தான் யாரும் அதை ஏற்றுக்கொள்வார்கள். காய்த்த மரமே கல்லறி படும். இதையல்லாம் தாண்டி நாகரிகமில்லாமல் சிலர் கருத்துச்சுதந்திரம் என்ற போர்வையில் நாகரிகமில்லாமல் வார்த்தைகளை அள்ளிவீசி ஒட்டுமொத்த சவுதிகள் ஏன் மொத்த அரபிகளையும் காட்டரபிகள், புத்தி இல்லாத மடையர்கள், வஹபிகள் என்றல்லாம் சம்மதமில்லாத விடயங்களையல்லாம் இந்த இடத்துக்கு கொண்டுவந்து திட்டித்தீர்க்கும் ஒரு சந்தர்ப்பமாக இந்த விபத்துடைய காரணத்தை பயன்படுத்துவதை காணமுடிகிறது.

நான் சவூதிக்கு வக்காலத்து வாங்கவில்லை. இவ்வளவு அசிங்கமாக பின்னூட்டம் எழுதும் அதுவும் சொந்த பெயரில் வரமுடியாத இவர்கள் ஒன்றை மட்டும் சிந்திக்க வேண்டும். இவர்கள் குறைகூறும் அரபிகளின் பொருளாதாரத்தில் வாழவில்லையா இவர்கள் நேரடியாக உதவிகளை பெற்றுக்கொள்ளா விட்டாலும் மறைமுகமாகவாவது அனுபவித்தே இருப்பார்கள். நம்நாடு போன்ற வறிய நாடுகளுக்கு எத்தனை பாரிய திட்டங்களுக்கு இந்த அரபிகள் நிதி ஒதுக்கீடு செய்துள்ளார்கள்.

கொஞ்சமாவது மனசாட்சியோடு நடக்க வேண்டும். குறைகளை கூறுங்கள் சுட்டிக்காட்டுங்கள் நாகரிகமாக எழுதுங்கள் அந்நிய மதத்தவர்களும் நம்முடைய கருத்துக்களை பார்த்துக்கொண்டுதான் இருக்கிறார்கள். சவூதிக்கு ஒரு விரலை நீட்டி  நாம் சுட்டிக்காட்டினால் மற்றைய நாலு விரலும் நம்மை சுட்டிக்காட்டும். எழுதமுடியும் என்றால் எல்லாவற்றையும் எழுத முடியாது. பேச முடியும் என்றால் எல்லாவற்றையும் பேசமுடியாது. எதிலும் ஒரு நடு நிலை கொள்கை வேண்டும்.

கடந்த காலங்களையும் நாம் கொஞ்சம் திரும்பி பார்க்க வேண்டும்.1980 Pஇன் பின் அரபு நாடுகள் நம்முடைய நாடு போன்ற வரிய நாடுகளுக்கு நேசக்கரம் நீட்டாமல் இருந்திருந்தால். பின்னூட்டம் எழுதும் அடாவடிகளின் கல்வி நிலை என்னவாக இருந்திருக்கும். இப்போது மேற்கத்திய நாடுகளில் உள்ளவர்கள் அரபு நாடுகளில் பணம் சம்பாரித்து விட்டுதான் அந்த பணத்தில்தான் அதிகமானவர்கள் மேற்கத்திய நாடுகளுக்கு போனார்கள். அதே நேரம் மேற்கத்திய நாடுகள் கல்வியரிவற்றவர்களை வேலைக்கு எடுக்க வில்லை. மாறாக நன்கு படித்தவர்களைத்தான் எடுத்தார்கள் ஆனால் அரபு நாடுகள் கல்வி அறிவு இல்லாத பாமர மக்களை வேலைக்கு அமர்த்தியது.

இவ்வாறான படிப்பறிவு இல்லாத பண வசதி இல்லாத ஏழைகள் மேற்கத்திய நாடுகளுக்கு போக முடியுமா..? அந்த இடத்தில் கை கொடுத்ததும் இந்த அரபுலகம்தான் என்பதை இந்த சொந்த பெயர் போடவிரும்பாத பின்னூட்டக்காரர்கள் புரிந்துகொள்ள வேண்டும். குறைகளை சுட்டிக்காட்டுங்கள் ஆனால் நன்றி மறவாதீர்கள்.

26 comments:

  1. உண்மையான கருத்துகளை கூறி இருந்தால் இந்தளவு அழுது வடியத் தேவையில்லை.

    இது போன்ற முற்றுமுழுதான ஒரு பக்கச் சார்பான ஆக்கங்களை பிரசுரிப்பதை ஜப்னா முஸ்லிம் தவிர்த்துக் கொள்வதே நல்லது, இல்லாவிட்டால் அது ஜப்னா முஸ்லிமுக்கே இழுக்காக அமையும்.

    ReplyDelete
  2. எழுத்துச் சுதந்திரம், கருத்துச் சுதந்திரம் என்பவை, இவரே வக்காலத்து வாங்கும் சவூதி அரேபியாவில் இல்லை.

    மக்காவையும், மதீனாவையும் அல்லாஹ் சவுதியில் வைக்கவில்லை, மக்காவையும் மதீனாவையும் ஆக்கிரமித்துத்தான் சவூது குடும்பத்தினர் சவூதி அரேபியாவை உருவாக்கினர். இந்த உண்மையை மறைக்க வேண்டாம்.

    சவுது என்கின்ற ரியாதை (நஜ்தை) மையமாகக் கொண்ட ஒரு குடும்பம், இஸ்லாமிய கிலாபத்தின் ஒரு பெரும் மாகாணமான இஜாசை பிளவுபடுத்தி, ஆக்கிரமித்து சவூதி என்கின்ற நாட்டை உருவாகினார்கள்.

    துருக்கியின் தலைமையில் இருந்த கிலாபத், இஜாசை இஸ்லாமிய உலகின் ஏனைய பாகங்களுடன் இணைக்கும் புகையிரதப் போக்குவரத்தையும் நிறுவி இருந்தது. ஆனால் சவுது குடும்பத்தினர் இஜாசை ஆக்கிரமித்து, சவூதி அரேபிய என்று பிரகடனம் செய்ததும், முதல் வேலையாக அந்த புகையிரத பாதையை சிதைத்து இஸ்லாமிய உலகுடனான தொடர்பை துண்டித்து, இஜாசை தனிமைப் படுத்தினர்.

    அதே குடும்பம்தான் இன்றும் ஆட்சி செய்கின்றது.
    இவற்றையெல்லாம் மறைத்துவிட்டு கதை எழுத வேண்டாம்.

    ReplyDelete
  3. அரபு நாட்டில் ஒரு அமெரிக்கன் பெற்றோலிய வளத்தை கண்டு பிடிக்காமல் இருந்து இருந்தால்? அதையும் கொஞ்சம் யோசித்துப் பார்க்க வேண்டாமா?

    இன்று சவுதிக்கு சார்பாக கட்டுரை எழுதுகின்றவர்கள், அமெரிக்காவுக்கு சார்பாக கட்டுரை எழுதிக் கொண்டு இருந்திருப்பார்களோ அல்லது கல்வி அறிவே இல்லாமல் இருந்து இருப்பார்களோ? யார் கண்டது.

    ReplyDelete
  4. அடுத்த மனிதனின் கருத்துச் சுதந்திரத்தைக் கூட பொறுக்க முடியாத இவர்கள் இங்கே வந்து கருத்து கட்டுரை எழுதுவது மிகவும் நகைப்பானது.

    வாங்கிற காசுக்கு ஆடுகிண்றீர்களோ? சொந்தப் பெயர், பாஸ்போர்ட் நம்பர் என்று யாரும் இங்கே கேட்பதில்லை. இங்கே எதோ பெயரைப் போட்டுவிட்டு எழுதுகின்றவர்கள் எல்லாம் உண்மையா, பொய்யா என்பதை யார் அறிவார்?

    எனக்கும் "அப்துல் ஹமீது சாதிக்கின்" என்று ஒரு பெயரை போட்டுக்கொண்டு வருவது ஒன்றும் சீன வித்தை கிடையாது. ஒரு நிமிட வேலை.

    கருத்தை கருத்தால் சந்தியுங்கள், அதை விட்டு கட்டுரை எழுதி அழுது வடியவும் வேண்டாம், கருத்துக்களை அனுமதிக்க வேண்டாம் என்று சொல்லி ரவுடித்தனம் பண்ணவும் வேண்டாம்.

    உங்களுக்கு இருக்கின்ற சுதந்திரமே மற்றவர்களுக்கும் உள்ளது. சவூதி என்பது இறைவனின் நாடு அல்ல, அதுவும் அமெரிக்க, இஸ்ரவேல், ஈரான், இந்தியா போன்ற ஒரு நாடு. அதனை மட்டும் விமர்சிக்கக் கூடாது என்று நீங்கள் எப்படி எதிர்பார்க்க வேண்டும்?

    கஹ்பாவை, மஸ்ஜிதுல் நபவியை, குர்ஆணை, சஹீகாண ஹதீஸை விமர்சிக்கக் கூடாது என்றால் நியாயம். சவுதியை விமர்சிக்காதே என்றால்?

    ஆகவே நியாயமாக மற்றவர்களையும் மதித்து நடந்து கொள்ள கற்றுக் கொள்ளவும்.

    நன்றி.

    ReplyDelete
  5. Ungaluku yenne nadenthe ,,,,,saudi arabia vil nadanthathu oru accident athai yaarum plan panni saiyavumille,,,so yen eppadi yellam think panreenge,,,,konjem yosinge pa

    ReplyDelete
  6. For the last 20 years it was giant transformation of our poor villagers into shining villagers saudi government helping hand huge and numerous writer aptly said that western world only treated high qualified and certain refugees but even our labourer who was given a opportunity to work was ksa You can't compare their contribution to the developing countries including ours there maybe some shortcomings so i appreciate the writer who's pen shed some ink to write a good productive one

    ReplyDelete
  7. நான் அரிந்த மட்டில் இவ்வாரு பின்னூட்டம் எழுதும் அதிகமானவர்கள் சவ்தி அரசால் தடை செய்யப்பட்ட இயக்கங்களை சேர்ந்தசவர்கள் அதனால் தனோ சொந்தபபெயரில் வருவதில்லை
    சிலர்களின் நகரீகம் எழுதப்பட்டத வாசிக்கம விமர்சிக்கிரங்க உ சௌதியில் நடைபெறும் ஹஜ் பயான் விள்மபரத்தை இலங்கையில் நடப்பதாக எண்ணி கிண்டல் பண்ணிய அறிவாழி போல

    ReplyDelete
  8. நான் உங்கள் கருத்தை முழுமையாக ஏற்றுக்கொள்கிறேன். ஏதோ ஒருவகையில் சவுதியிலிருந்து பேரிச்சப்பழ உதவியையாவது பெற்றுள்ளேன். ஆகவே இனிமேல் சவுதிக்கு எதிராக பேசமாட்டேன்.
    ஒரு நாட்டிடமிருந்து உதவி பெற்று இருந்தால் அவர்கள் எந்த தவறை செய்தாலும் வாய் திறக்கக்கூடாது என்பதைதானே உங்கள் கட்டுரைக்கூடாக சொல்லவருகிறீர்கள். சரி நான் அப்படியே செய்கிறேன்.
    இனிமேல் அமெரிக்கா, இஸ்ரவேல் செய்யும் அடாவடித்தனங்களைப்பற்றி நீங்களும் பேசக்கூடாது. ஏன் தெரியுமா? அவர்கள் கண்டுபிடித்து தந்த கணணியையும் இணையத்தையும் வைத்துதானே உங்கள் கட்டுரைகளை பிரசுரிக்கிறீர்கள்!!!
    என்ன, உங்கள் நியாயம் உங்களுக்கே புரிகிறதா?
    குறுகிய மனப்பான்மை முஸ்லீம்களாக இருக்காதீர்கள். பரந்த சிந்தனையுள்ளவர்களாக எழுதுங்கள்.

    ReplyDelete
    Replies
    1. மேற்கத்தைய நாகரீகத்தை நிராகரித்தால் ஒட்டகத்தில்தான் பயணம் செய்யவேண்டும்

      Delete
  9. ஏன் சவுதியை விமர்சித்தல் சிலருக்கு உச்சியில் ஏறுது?

    சவூதி ஒன்றும் புனிதம் கிடையாது. மக்கா, மதீனா சவூதி ஆக்கிரமித்து வைத்துள்ளது.

    well said Laviox & உண்மைக்காக குரல் கொடுப்ப்போம்.

    ReplyDelete
  10. I don't need to say my real name, here what we say - our opinions valid, not our individual names.

    If you are in payroll of someone, then you need your real name published in order to get your wages, otherwise name does not rally matter.

    Well said Unmaikkaka Kuralkoduppom and La Voix, BRAVO!

    ReplyDelete
  11. enna madaththanamaana pechchu?
    Saudi sallikku ippidi aadanumaa?

    Housemaide pona evlovu penkalukku aniyaayam nadakkuthu?
    athaiyum eluthungo.

    madaththanamaana pechchu.
    very true, vakkaalaththu vaangi irukkura.

    ReplyDelete
  12. முதலில் விமர்சனம் செய்பவர்களுக்கு தேவையானது தைரியம், அது இல்லாதவருக்கு எதைப்பற்றியும் விமர்சனம் செய்ய தகுதியே இல்லை. தன்னுடைய பெயரையே வெளிப்படுத்த தைரியம் இல்லாதவர்கலெல்லாம் மூடிக்கொண்டு அடங்கி ஒதுங்கி இருக்க வேண்டும். மொட்டைக் கடிதம் போடும் முட்டாள்கலெல்லாம், அறிவாளியாக முடியாது.

    ReplyDelete
  13. உலகம் அறிந்த விடயம் கள்ளன் சொந்த பெயர் கொடுக்க மாட்டான் நேர்மையானவனாக இருந்தால் ஏன் பெயரை மறைக்க வேண்டும் அழகாக பெற்றோர் நமக்கு பெயர் வைத்தது எதற்கு அதை மறைத்து விட்டு முனாபிக்தனமாக வேறு பெயரில்இயங்கவா ?இப்போதைய உலகில் கள்ளன் கொலைகாரன் பயங்கரவாதிகள் தான் கள்ளபெரில் கள்ளப்பாஸ்போர்ட்டில் தப்பிச்சல்வாது இதற்க்கு உங்கள் பதில் என்ன.வேறு பெயரில் மறைந்திருந்து கருத்து வெளியிடுவது கருத்தால் தாக்குவது இஸ்லாம் அனுமதித்ததா?கருத்து சுதந்திரம் யாருக்கு நேர்மையாலர்களுக்குத்தான் இவ்வாறான வேறு பெயரில் ஒளிந்திருக்கும் இரட்டை வேடமிடுபவர்களுக்கு அல்ல .

    ReplyDelete
  14. உலகம் அறிந்த விடயம் கள்ளன் சொந்த பெயர் கொடுக்க மாட்டான் நேர்மையானவனாக இருந்தால் ஏன் பெயரை மறைக்க வேண்டும் அழகாக பெற்றோர் நமக்கு பெயர் வைத்தது எதற்கு அதை மறைத்து விட்டு முனாபிக்தனமாக வேறு பெயரில்இயங்கவா ?இப்போதைய உலகில் கள்ளன் கொலைகாரன் பயங்கரவாதிகள் தான் கள்ளபெரில் கள்ளப்பாஸ்போர்ட்டில் தப்பிச்சல்வாது இதற்க்கு உங்கள் பதில் என்ன.வேறு பெயரில் மறைந்திருந்து கருத்து வெளியிடுவது கருத்தால் தாக்குவது இஸ்லாம் அனுமதித்ததா?கருத்து சுதந்திரம் யாருக்கு நேர்மையாலர்களுக்குத்தான் இவ்வாறான வேறு பெயரில் ஒளிந்திருக்கும் இரட்டை வேடமிடுபவர்களுக்கு அல்ல .

    ReplyDelete
  15. முஸ்தபா நானா, உங்களுக்கு என்ன நடந்து விட்டது?
    சொல்வதை பார், சொல்பவனை பார்க்காதே.
    கள்ளன், கொலைகாரன் என்று உங்களுக்கு பிடிக்காதவர்களை சொல்வது, உங்களை நீங்களே கேவலப் படுத்துகிறீர்கள்.

    உங்கள் கட்டுரையில் ஒரு லொஜிக் உம் இல்லை, எதோ காரணத்துக்காக சவுதியை காப்பாற்ற முயற்சி செய்து இருக்கின்றீர்கள், அதற்கு எதிர் கருத்து பதிந்தால், அவர்களை கள்ளன், கொலைகாரன் என்று சொல்வது, முகவும் இழிவான பண்பு.

    ReplyDelete
  16. பெயரை போடுவதுதான் முக்கியம் என்று அலுத்து வடிந்தால் பெயரை போட்டாச்சு. இப்பொழுது என்ன சொல்லப் போகின்றார் மிஸ்டர் முஸ்தபா ஜவ்பர்?

    பெயர் இல்லாதவன் கள்ளன், கொலைகாரன் என்றார், இப்பொழுது தான் பொய்யர் என்பதை ஏற்றுக் கொள்ள ரெடியா?

    வெறுமனே அலுத்து வடியாமல், உருப்படியாக ஏதாவது சொல்லப் பார்க்கவும். சவுதிக்கு வக்காலத்து வாங்கினால் இப்படித்தான் கேவலப்பட நேரிடும்.

    ReplyDelete
  17. புனைப் பெயரில் எழுதுகின்றவன் எல்லாம் கள்ளன், கொலைகாரன் என்கிறன மாதிரி சிந்திப்பது, "நரி நினைக்கின்றது எல்லோரும் தன்னைப் போன்று கள்ளக் கோழி தின்கின்றார்கள் என்று" என்கின்ற பழமொழியை நினைவு படுத்துகின்றது.

    சொந்தப் பெயரில் வந்துவிட்டால், சொல்வதெல்லாம் உண்மை ஆகிவிடுமா? இல்லை என்பதற்கு முஸ்தபா ஜவ்பாரின் கருத்துக்களே நல்ல உதாரணம்.

    இதன் பிறகு என்ன கேட்கப் போகின்றாரோ? பாஸ்போர்ட் நம்பர், குடும்ப போட்டோ, மேரேஜ் செர்டிபிக்கட் என்று பிகு பண்ணாமல், தனது தவறான கருத்துக்களை ஏற்றுக்கொண்டு திருந்தி வாழட்டும்.

    ReplyDelete
  18. யாருப்பா இந்த லாவ்வோய்க்ஸ் உன்மைக்கு குரல் கொடுப்போம் என் கேள்விக்கென்ன பதில் அப்பாடாக்கா ஈரானின் ஏஜெண்டுகளோ?

    ReplyDelete
  19. தனது அற்ப அறிவை மட்டும் வைத்துக்கொண்டு உலகை பார்க்கக் முயன்றால் மனப்பான்மை எவ்வளவு குறுகியதாக் இருக்கும் என்பதற்கு இந்த மடத்தனமான கருத்தே நல்ல உதாரணம்.

    புனைப்பெயர் என்பது இஸ்லாத்தில் தடை செய்யப்பட்ட ஒன்றல்ல.
    அபூ ஹுரைரா (ரலி) அவர்களின் உம்மா வாப்பா வைத்த பெயர் அதுவல்ல, அது ஒரு புனைப்பெயர் மட்டுமே, அது மட்டுமா, இமாம் புஹாரி அவர்களின் இயற்பெயர் அது அல்ல, அதுவும் புனைப்பெயர் மட்டுமே.

    அடுத்தவனை கள்ளன், கொலைகாரன் என்று சொல்லி கொக்கரிக்க முன்னர் இருக்கின்ற சின்ன மூளையை பயன்படுத்தி சிந்திக்க முடியாவிட்டால், எழுத முன்னர் யாரிடமாவது கேட்டுவிட்டு எழுதினால் நல்லது.

    ReplyDelete
  20. Assalamu alaikum, , masha ALLAH very good article Dr brother jawfer. May ALLAH bless you. Don't worry about shouting kind people coz they are ergent of Iran. We can find this kind of people in everywhere not only in Sri Lanka, thay can say "bow wow " to everything. May ALLAH gide them.

    ReplyDelete
  21. கருத்துகள் நாகரீகமற்ற வார்த்தைகள் பிரதிபலிக்கும் படியாக அமையக்கூடியதாக இருக்க வேண்டும் ஒரு வகையில் பார்க்கும் போது நாம் அரேபியர்களை தூற்றுவது தவறு ஏன் என்றால் அவர்களின் முன்னோர்கள் செய்த தியாகத்தின் காரணமாக நாம் எல்லோரும் முஸ்லிமாக வாழுகின்றோம் எனவே பேசும்போது வார்த்தைகளை கவணமாக கையாளவும்

    ReplyDelete
  22. Dear Brothers, We should support, advice, refute an issue not form the angle of our organisational policy or hates toward another person/country, Rather Islamically we should write. For this we should learn Islam, but not from the scholars fo Hawarij ideology or westernized one, Rather fro the Scholars who stick to the way of Muhammed (sal) and his campanions.

    All what we write,,, will be questioned on the day of judgment by Allah, We can not simply say... " I really did not know the reallity, if known I would not have commented like this and that" If we do not know the reallity of a situation.. we should keep silent ... since keeping silent in matter that is unknown is good for us.

    ReplyDelete
  23. thurki... iranin islamiyaa aatchiya pathi(shia atchi ) kattura eluzakappa appa ......
    appadi eluzina unmaikku kural koduppom. la vox.. support pannuwanuhal

    ReplyDelete

Powered by Blogger.