Header Ads



நிந்தவூரில் டெங்கு ஒழிப்பு ஊர்வலம்


-மு.இ.உமர் அலி-

இம்மாதம்   பத்தாம் திகதியில் இருந்து   பதினாறாம் திகதி வரை  தேசீய தேங்கு ஒழிப்பு வாரம்  நாடுமுழுவதும் அனுஸ்டிக்கப்பட்டது. பாதுகாப்புப்படையினர்,சமுர்த்தி  அதிகாரிகள் ,பொதுச்சுகாதார  உத்தியோகத்தர்கள் உட்பட  பலதரப்பினரின் உதவியோடு இந்நிகழ்வுகள் நடந்துமுடிந்தன.

நிந்தவூர்  சுகாதார வைத்திய அதிகாரி  காரியாலயம்  ஏற்பாடுசெய்த  டெங்கு விழிப்புணர்வு  ஊர்வலம் இன்று காலை (2015  SEP  18 ,வெள்ளிக்கிழமை)  எட்டுமணியளவில்  கமு/அல் மஸ்கர்  பெண்கள் உயர்தர பாடசாலையின்    முன்னால் இருந்து ஆரம்பமாகி  முதலாம் குறுக்குத்தெருவினூடாக   சென்று   ஹாஜியார்  வீதியினூடாக  பிரதான வீதியை அடைந்து   ,மீண்டும்  ஜூம்மா  பெரிய பள்ளிவாசலின் முன்றலில்  முடிவடைந்தது.இவ்வூர்வலத்தில்  சுகாதார  போசாக்கு,மற்றும் சுதேச வைத்தியத்துறை  பிரதி அமைச்சர்  பைசால் காசீம்  அவர்களும் கலந்து கொண்டார்.

இந்த நிகழ்வில்  பாடசாலை மாணவர்கள்  டெங்கு விழிப்புணர்வு  சுலோகங்களை  ஏந்தியவாறு, சுலோகங்களை கோசித்தவண்ணம்  நடைபயின்றனர். தேங்கு நோயினால்  பாதிக்கப்பட்டவரின் அவல நிலையை  சித்தரிக்கும் வகையிலான பொம்மைகள், நோயாளர் காவு வண்டி ,இறந்த உடல்  போன்றவையும்  ஊர்வலத்தில்  மக்களை கவர்பொருளாக  இருந்தன.

கல்முனை  பிராந்திய சுகாதார சேவைகள்  பணிப்பாளர் டாக்டர் AL  அலாவுதீன் ,நிந்தவூர்  ஆதார வைத்தியசாலையின்   பதில்  வைத்திய அத்தியட்சகர் டாக்டர் M  ஹம்மாம் , கல்முனை பிராந்திய  மேற்பார்வை செய்யும் பொதுச்சுகாதாரப்பரிசோதகர்  திரு பேரம்பலம். நிந்தவூர்  பிரதிக்கல்விப்பணிப்பாளர்  SL சலீம்,அம்பாறை மாவட்ட சுற்றாடல்  ஆணையாளர்  MT நௌபல் அலி அதிபர்களான  திருமதி  ஹானியா   AL  நிசாமுடீன்,உட்பட இன்னும் பலர்   இவ்வூர்வலத்தில்  கலந்துகொண்டனர்.

நிந்தவூர் பிரதேசத்தில்  குறித்த சில  பிரதேசங்களில்  அதிகளவான டெங்கு தாக்கம் காணப்படுவதாக குறிப்பிட்ட  சுகாதார  வைத்திய அதிகாரி,அப்பிரதேசங்களைச் சேர்ந்த மக்களுக்கு  பிரத்தியேக  விழிப்பூட்டல்களை மேற்கொண்டிருப்பதாக  கருத்துத் தெரிவித்தார்.


No comments

Powered by Blogger.