கொத்துரொட்டி விவகாரம் - அரசியல் வாதிகளும் தலையீடு
காலி பொலிஸ் நிலையத்தில் வர்த்தகர்கள் இருவர் மண்டியிட வைக்கப்பட்ட சம்பவத்தை மூடிமறைக்க பொலிசார் பெரும் முயற்சிகளை மேற்கொண்டுள்ளனர்.
இது தொடர்பாக மேலும் தெரியவருவதாவது,
காலி ஹிக்கடுவை, ஆரச்சிகந்த பிரதேச வர்த்தகர்கள் இருவர் அண்மையில் உணவகம் ஒன்றில் கொத்துரொட்டிகளை வீட்டிற்கு வாங்கிப் போயுள்ளனர்.

அதனை உட்கொண்ட அவர்களது குழந்தைகள் சுகவீனமுற்றதன் காரணமாக குறித்த உணவகத்தில் அது குறித்து முறைப்பாடு செய்யச் சென்றபோது உணவக உரிமையாளருக்கும், வர்த்தகர்களுக்கும் இடையில் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.
இதனையடுத்து உணவக உரிமையாளரின் தகவலின் பேரில் அங்கு வந்த பொலிசார், குறித்த வர்த்தகர்கள் இருவரையும் பொலிஸ் நிலையத்துக்கு அழைத்துச் சென்று மண்டியிட வைத்து தண்டனை அளித்துள்ளனர்.
மேலும் கடுமையான வார்த்தைகளால் தூற்றியும், தாக்கியும் மன உளைச்சலுக்கு ஆளாக்கியுள்ளனர்.
இதுகுறித்து பாதிக்கப்பட்ட இரண்டு வர்த்தகர்களும் காலி பிராந்திய பிரதிப்பொலிஸ் மா அதிபர் அலுவலகத்தில் முறைப்பாடு செய்துள்ளனர். மேலும் ஊடகங்களுக்கும் இது குறித்து தகவல் வழங்கியுள்ளனர்.
இந்த விவகாரம் குறித்து தற்போது பொலிஸ் திணைக்கள விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
இதற்கிடையே குறித்த விவகாரத்தை மூடி மறைக்க பொலிசார் பெரும் முயற்சிகளை மேற்கொண்டுள்ளனர். இதற்காக அப்பிரதேச அரசியல்வாதிகளின் உதவியும் பொலிசாருக்கு கிடைத்துள்ளதாக தெரிய வந்துள்ளது.

Post a Comment