"சூடான உருளைக்கிழங்கு"
-தமிழில் gtn-
இலங்கையில் இடம்பெற்ற யுத்த குற்றங்கள் குறித்து ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளர் அலுவலகம் மேற்கொண்ட விசாரணை அறிக்கையின் பிரதியை இலங்கைக்கு அனுப்பும் நடவடிக்கைக்கு ஓப்பரேஷன் ஹொட் பொட்டட்டோ என பெயரிடப்பட்டிருந்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இது குறித்து மேலும் தெரிவிக்கப்படுவதாவது
ஐக்கிய நாடுகளின் விசாரணை அறிக்கை வெளியாவதற்கு முன்பிருந்தே மனித உரிமை ஆணையாளரும், இலங்கை வெளிவிவகார அமைச்சரும் தொடர்ச்சியாக தொலைபேசி தொடர்புகளை பேணிவந்தனர்.
அவ்வாறான ஓரு தொலைபேசி உரையாடலின் போது விசாரணை அறிக்கையை உத்தியோகபூர்வ வெளியிடுவதற்கு ஐந்து நாட்களிற்கு முன்னர் அதனை இலங்கை அரசாங்கத்திடம் கையளிக்கவுள்ளதாக ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளர் இலங்கை வெளிவிவகார அமைச்சரிடம் தெரிவித்தார். (ஜிரிஎன்) அரசாங்கம் அதிலுள்ள விடயங்கள் கசியாமல் பார்த்துக் கொள்ளவேண்டும் என்பதே தனது உடனடி கவலை எனவும் அவர் தெரிவித்தார்.
மிகநீண்ட நேரம் இடம்பெற்ற அந்த உரையாடலின்போது தங்களுடைய பேச்சுக்களில் கூட ஐ.நா அறிக்கை குறித்து எதனையும் தெரிவிப்பதில்லை என்பதை அவர்கள் ஏற்றுக்கொண்டனர்.
ஐக்கிய நாடுகளின் விசாரணை அறிக்கையின் பிரதியை இலங்கைக்கு அனுப்பும் நடவடிக்கைக்கு ஓப்பரேஷன்’ ஹொட் பொட்டட்டோ “ என ஐ.நா பெயரிட்டது. அறிக்கையின் இரு பிரதிகள் மாத்திரமே தன்னிட முள்ளதாகவும் அதில் ஓன்றை அரசாங்கத்திற்கு அனுப்புவதாகவும் மனித உரிமை ஆணையாளர் தெரிவித்தார். (ஜிரிஎன்) ஐக்கிய நாடுகள் மனித உரிமை செயலகத்தை சேர்ந்த உறுப்பினர் ஓருவர் அந்த பிரதியை இலங்கைக்கு எடுத்துவந்தார். ஹொட் பொட்டட்டோ வெள்ளிக்கிழமை உங்கள் கைகளிற்கு வரும் என்ற செய்தி மங்களவிற்கு வெள்ளிக்கிழமை தெரிவிக்கப்பட்டது.
வெள்ளிக்கிழமை காலை 8.45ற்கு குறிப்பிட்ட நபர் துபாயிலிருந்து வந்த ஈகே450 விமானம் மூலம் கொழும்பு விமானநிலையத்திற்கு வந்துசேர்ந்தார். (ஜிரிஎன்) நேரம் போதமை காரணமாக அந்த அதிகாரியை கொழும்பிற்கு செல்வதற்கே அரசாங்கம் அனுமதிக்கவில்லை, மாறாக வெளிவிவகார அமைச்சரின் பிரதிநிதியொருவர் விமான நிலையத்திலிருந்தே 261 பக்க ஆவணத்தை பெற்றுக்கொண்டார்.
குறிப்பிட்ட அறிக்கை தனது கையில் கிடைத்ததும் மங்கள சமரவீர அவசர அவசரமாக அந்த ஆவணத்தை திறந்தார், ஐக்கிய நாடுகள் விசாரணை அறிக்கை மூலம் தெரிய வந்த விடயங்களையே அவர் முதலில் படித்தார். (ஜிரிஎன்) அவ்வேளை அவருடன் வெளிவிவகார செயலளார் சித்திராங்கனி வசிஸ்வர, ஐக்கிய நாடுகளிற்கான இலங்கையின் நிரந்தர வதிவிடப்பிரதிநிதி ரவிநாத் ஆரியசிங்க ஆகியோர் காணப்பட்டனர்.
நாங்கள் எதிர்பார்த்தது போல இது காரமாக இல்லை, இதில் பெயர்கள் எவையும் குறிப்பிடவில்லை, என தெரிவித்த மங்கள சமரவீர பின்னர் பல தொலைபேசி அழைப்புகளை மேற்கொண்டார்.
இதன் தொடர்ச்சியாக வெள்ளிக்கிழமை மதியம் உயர்மட்ட கூட்டமொன்று ஐனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் இடம்பெற்றது. (ஜிரிஎன்) முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்க, பிரதமர் ரணில்விக்கிரமசிங்க, உட்பட முக்கியமானவர்கள் கலந்துகொண்டனர். இதன் பின்னரே வெளிவிவகார அமைச்சர் தலைமையிலான குழு ஜெனீவா பயணமானது.
Post a Comment