Header Ads



"முஸ்லிம் சமூகம், தன்னை மாற்றவேண்டிய தேவை"

-M.S. Mohamed Ikrima-

கருத்து வேறுபாடு என்பது மனித வாழ்வின் இயல்பும் இயற்கையுமாகும். இது குறித்த சமூகத்திற்கோ நாட்டிற்கோ மனிதக் குழுமத்திற்கோ அல்லது பிரதேசத்திற்கோ குறிப்பானதல்ல. இது இஸ்லாத்தைப் பொறுத்தவரையிலும் அந்நியமான ஒன்றல்ல. அதன் அடிப்படை மூலாதாரமான குர்ஆனும் இறை தூதர் முஹம்மது அவர்களது அறிவுறைகளும் ஏற்றுக்கொள்கின்றன. 

குர்ஆனிய வாசகங்களைப் படிக்கும்போது தெரியும் அவற்றில் சில வசனங்கள் பல கருத்துகளுக்கு இடம்பாடான வகையில் அமையப்பெற்றுள்ளன என்பது. அதேபோன்று தூதர் முஹம்மது அவர்கள் தனது சமூகம் கருத்து வேறுபாடுகளால் பிரியும் என்றார்கள். எனவே கத்துவேறுபாடுகள் என்பது புதியதோர் விடயமல்ல. ஆனாலும் குருத்துவேறுபாடுகளை நாம் கையாளும் அல்லது அனுகும் முறைகள் பற்றித்தான் நாம் சற்று ஆற அமரப் பேச வேண்டியுள்ளது. முஸ்லிம் சமூகத்தைப் பொறுத்தவரை கருத்துவேறுபாடுகள் பின்வரும் மூன்று முறைகளில் விளக்கப்படலாம். 

1. இஸ்லாத்தின் அடிப்படைக் கோட்பாட்டு விடயங்களில் உள்ள கருத்து வேறுபாடுகள்.

2. இஸ்லாத்தின் கிளைப்பிரச்சினைகளில் அல்லது இஸ்லாமிய பிரச்சார வழிமுறைகளில்    தோன்றிய கருத்து வேறுபாடுகள். 

3. அதி தீவிரவாதத்திற்கும் தாறாளவாதத்திற்குமிடையிலான கருத்து முரண்பாடுகள். 

முதலாவது தலைப்பிற்கு மிகவும் சிறந்த உதாரணமாக உலகில் தற்போது இஸ்லாமிய நாடுகளை இரண்டு அணியாக ஆக்கியுள்ள சீயா - சுன்னா முறன்பாட்டைக் குறிப்பிடலாம். இப்போது இஸ்லாமிய உலகில் நிகழும் யுத்தமேகம் இதனைச் சுற்றியே சழல்வதை நுனுக்கமாக ஆராயும் எவரும் புரிந்து கொள்வர். இரண்டாவது வகையைப் பொறுத்தவரை பல்வேறு காலகட்டங்களில் தோற்றுவிக்கப்பட்ட இஸ்லாமிய பிரச்சார நிறுவனங்கள் அல்லது இயக்கங்களைக் குறிப்பிடலாம். இவர்களிடையே உள்ள கருத்துவேறுபாடுகள் புறக்கணிக்கத்தக்கவை. 

இந்த இரண்டுவகையான கருத்து வேறுபாடுகளின் நிலை என்ன? இவை இரண்டையும் எவ்வாறு கையாள வேண்டும் என்பதுபற்றி தற்போதுள்ள முஸ்லிம் சமூகம் ஓரளவு தெளிவு பெற்றுள்ளது போல ஒரு தோற்றத்தைக் காண முடிகின்றது. ஆனாலும். நாம் இங்கு வாதிக்க எடுத்தவிடயம். மூன்றாம் வகையானது. இது மிகவும் நுனுக்கமாக அனுகப்படவேண்டிய ஒரு கருத்து முறன்பாடாகும். இஸ்லாத்தில் அதீத தாராளத்தன்மைகளை கடைப்பிடிக்கச்சென்று அதன் அடிப்படைகளையும் தாண்டிச் செல்லும் நிலைக்கும், அதி தீவிரப்போக்கில் சென்று பயங்கரவாதத்திற்குச்செல்லும் நிலைக்கும் இடையிலானது இந்த விடயம். இதில் சரியான ஒரு தெளிவின்மையே யுத்தங்கள் வரை முஸ்லிம் சமூகத்தை இழுத்துச்சென்றுள்ளது. அல்லது மாற்று மத வழிபாடுகளைக்கூட தாராளமாக கலந்து நிறைவேற்றக்கூடிய நிலைக்கு கொண்டு சென்றுள்ளது. 

அதிதீவிர நிலைக்கு உதாரணமாக தாலிபான், மற்றும் Isis அமைப்புகளைக் குறிப்பிடலாம். இதற்கு தாராளவாத சிந்தனைக்கு மிக எளிமையான பொதுவான  உதாரணமாக இலங்கை மற்றும் இந்தியா போன்ற நாடுகளில் உள்ள அரசியல்வாதிகளைக் குறிப்பிடலாம். குறிப்பாகக் கூறுவதாயின் அன்மையில் எம்மைவிட்டுப்பிரிந்த அறிவியல் மேதை டாக்டர் அப்துல்கலாம் அவர்களது அனுகுமுறையைக் குறிப்பிடலாம். 

அப்துல்கலாம் அவர்கள் மரணித்தபோது முஸ்லிம் உலகு காட்டிய மனோ நிலைதான் இந்த கட்டுரையை இந்தத்தலைப்பில் எழுதத் தூண்டியது. அப்துல்கலாம் அவர்களது இழப்பு பற்றி முழு உலகும் குறிப்பாக பாரத தேசமே இரங்கிக்கோண்டிருந்த வேளையில் முஸ்லிம் சமூகம், அதன் சமூக அரசியல் தலைமைகள் மற்றும் ஊடகங்கள் அதனை அடக்கிவாசித்ததனைக் காணக்கூடியதாக இருந்தது. அதனிடமுள்ள ஓரிரு ஊடகங்களில் கூட உட்பக்கத்தில் எங்கோ ஒரு மூலையில் அவரது இழப்பு பற்றிய விடயத்தைக் காணக்கூடியதாக இருந்தது. முஸ்லிம்களின் பல்கலைக்கழகங்களில்கூட அது பெரியதொரு இடத்தைப் பிடிக்கவில்லை என்பதுதான் அவதானம்!. உண்மையில் அவருக்கு உலகமே இரங்கியதற்குக் காரணம் அவரது அறிவு முதிர்ச்சியும் கல்விச்சேவையும் நாட்டுப்பற்றும் மட்டுமே தவிவர வேறு ஏதும் கிடையாது. என்னைப் பொருத்தவரை முஸ்லிமகளாகிய நாம் அவருக்கு இரண்டு அடிப்படைகளில் இரங்கியிருக்கவேண்டும். 

1. அறிவியலுக்குப் பங்களிப்புச் செய்தவர், ஒரு முஸ்லிம், அவர் எமது இனம் என்ற அடிப்படையில். 
2. அவர் பொதுவாக அறிவியலுக்கும் நாட்டுக்கும் சேவையாற்றிய மகான் என்பதன் அடிப்படையில். 

நாம் முதலாவதன் அடிப்படையில் அவருக்கு இரங்குவதற்கு எமது மார்க்கக் கோட்பாடுகளை அவர் மீறினார் என்பதனால் தவறினோம். உண்மையில் இது மார்க்கத்தில் என்ன தீர்வு என்பது எனதறிவிற்குத் தெரியாது. அதை நாம் மதிப்பிடவும் முடியாது. அது அவரையும் அள்ளாஹ்வையும் (இறைவனையும்) சார்ந்தது. எனவே முதலாவதன் அடிப்படையில் முஸ்லிம்கள் இரங்கத்தவறியிருந்தாலும். இரண்டாவது அடிப்படையிலாவது அவருக்கு இருங்கியிருக்க வேண்டுமென்பது எனது சொந்த அபிப்ப்pராயமாகும். காரணம் இந்நிலை முஸ்லிம்கள் அறிவியலையும் அறிவார்ந்த செயற்பாடுகளையும் மதிக்கத்தெரியாதவர்கள் எனும் அவப் பெயரை சர்வதேச அரங்கில் தந்துவிடும். 

   இந்த இடத்தில் நாம் முறன்பட்டவர்களையும் அறவணைத்துச் செல்லும், அவர்களை மதிக்கும் நல்ல பண்பைக் காட்டியிருக்கவேண்டும். முஹம்மது நபி அவர்கள் ஒருபோதும் மனிதர்களை கொள்கைக்காக மாத்திரம் மதிக்கவில்லை. சிலரை அவர்களது அறிவிற்காக மதித்தார்கள். சிலரை அவர்களது நற்பண்புகளுக்காக மதித்தார்கள். இன்னும் சிலரை அவர்களுக்கு அவர்களது சமூகத்தில் இருந்த நன்மதிப்பிற்காக மதித்தார்கள். எனவே இங்கு ஒரு மனிதன் விடும் தவறுகளை மாத்திரம் வைத்துக்கொண்டு அவரை புறந்தள்ளி சமூகத்தைவிட்டும் தூரப்படுத்தும் வழிமுறையை விடுத்து அவர்களையும் அறவணைத்துச் செல்லும் வழிமுறையை நாம் எம்மில் வளர்த்துக்கொள்ளவேண்டும். 

ஒரு மனிதன் நிருவாக ரீதியாகக் கொண்டுள்ள கருத்துவேறுபாடுகளுக்காகக் கூட அவன் சமூகத்துறோகியாகப் பார்க்கப்படுவது அல்லது காட்டப்படுவது ஆபத்தானது. தங்களோடு சார்ந்து நின்று செயற்படும்போது மூஸாவாக (மோஸஸ்) மதிக்கப்பட்ட ஒருவன் தங்களோடு சிறிய முறன்பாடு ஒன்றை வெளிப்படுத்தும்போது பிர்அவுனாகப் (பார்வோன் மன்னன்) பார்க்கப்படுகின்றான். அவன் மேல் இல்லாத பழிகள், புனைவுகள் எல்லாவற்றையும் சுமத்தி சமூகத்தளத்தைவிட்டே ஓரங்கட்டுவதற்கான முயற்சிகள் நடைபெறுகின்றன. ஒருவனில் 90 நல்ல பயனுள்ள விடயங்கள் இருந்தாலும் 10 மறுவிய விடயங்களை மாத்திரம் தூக்கிப்பிடித்து அவனை புறத்தொதுக்கும் வழிமுறையை கையாள்வதன் மூலம் அவனது 90 வீத சமூகப் பங்களிப்பையும் இழந்துவிடுகின்றோம். 

இதுதான் இன்றைய முஸ்லிம் உலகு அறிவியல், சமூக, பொருளாதார, கலாசார விடயங்கள் எல்லாவற்றிலும் பின்தங்கியிருக்கக் காரணமாகும். சகல விடயங்களையும் நாம் செய்தால்தான் சரி மற்றவர்கள் செய்தால் அது பிழை என்று கருதுவது தவிர்க்கப்படவேண்டும். நாம்தான் 100 வீதம் சரி என்று மற்றவர்களது பங்களிப்பை புறக்கணிப்பது அவர்களை அந்நிய தீய எதிர் சக்திகளுடன் நெருக்கமாக்கிவிடும். அறபுலகில் தோன்றிய நம்பிக்கையூட்டிய அறபு வசந்தம் இப்போது எகிப்திலிருந்து சிரியாவரை அறபுலகில் அணற்காற்றாய் வீசி சகோதரப்படுகொலைகளை மலிவாக்கியுள்ளமைக்கும் இந்த அணுகுமுறைதான் காரணம். 

எனவே முஸ்லிம் சமூகம் தன்னை அவசரமாக மாற்றிக்கொள்ளவேண்டிய தேவை உணரப்படுகிறது. புறத்தொதுக்கும் அணுகுமுறையை (Exclusive approach)  த் தவிர்த்து அறவணைக்கும் அனுகுமுறையை (Inclusive Approach)  நாம் பின்பற்றவேண்டும். கருத்து வேறுபாடுகள் ஒருபோதும் ஒருவரை ஒருவர் புறந்தள்ளுவதற்கு இட்டுச்செல்லக்கூடாது மாறாக முறன்பட்டவர்களையும் அறவணைத்து அவர்களிடமிருந்து எமது சமூகத்திற்கு குறைந்தபட்சம் எதைப்பெறமுடியுமோ அதனைப் பெற்றுக்கொடுப்பதே எமது சமூகத்தின் அறிவியல் பொருளாதார வளர்ச்சிக்கு இட்டுச்செல்ல முடியும். இதற்கு மாற்றமாக நாம் செயற்படுவது எம்மை சர்வதேச அறிவியல் சதுரங்கத்திலிருந்து ஓரங்கட்டிவிடும்.!!!!   

2 comments:

  1. well written article and I totally agree. but our people do not such a broader understanding at all. let us pray Allah guide them all .

    ReplyDelete
  2. Wetumail othumai

    ReplyDelete

Powered by Blogger.