'மேன் ஒப்த மெச்'
-JM.Hafeez-
தேர்தல் ஆணையாளர் என்பவர் ஒரு ஒட்டுண்ணியல்ல. அவர் மெ.கோ. வே தவிற மெக்கொவல்ல என்று தேர்தல் ஆணையாளர் மகிந்த தேசப்பிரிய தெரிவித்தார்.
தேர்தல் ஆணையாளர் என்பவர் ஒரு ஒட்டுண்ணியல்ல. அவர் மெ.கோ. வே தவிற மெக்கொவல்ல என்று தேர்தல் ஆணையாளர் மகிந்த தேசப்பிரிய தெரிவித்தார்.
(21.9.205) கண்டி செயலக கேட்போர் கூடத்தில் இடம் பெற்ற ஒரு கலந்துரையாடலில் அவர் இதனைத் தெரிவித்தார்.அவர் அஙகு மேலும் தெரிவித்ததாவது-
கடந்த பாராளுமன்றப் பொதுத் தேர்தலின் போது ஊடகங்களும் சமூக வளைத் தளங்களும் மேற்கொண்ட முயற்சிகாரணமாக தேர்தலின் நன்பகத்தன்மை அதிகரித்தது. ஊடகங்களும் சமூக வலைத்தளங்களும் சுட்டிக்காட்டிய சில விடயங்களை பொது மக்கள் முறையாகப் பின்ப்றறினர். ஆதில் பிரதானமாக அதிகள் மக்கள் இம்முறை வாக்களிப்பில பங்கு கொண்னர். வாக்களிப்பு விகிதம் உயர்வாகக் காணப்பட ஊடகங்களும் இணையங்களும் ஒரு தூண்டுகோளாக இருந்தன.
அதேபோல் தேர்தல் சட்டங்களை மீறும் சம்பசங்கள் குறைவாக இருந்தன. இதற்குறிய கௌரவத்தை சிலர் எனக்குத் தருகின்றனர். ஆனால் அதற்கு பொதுமக்களை சிறந்த முறையில் விழிப்படையச் செய்த ஊடகங்களும் சமூக வலைத்தளங்களுமே காரணமாகும்.
ஒரு கிறிகட் போட்டியில் ஒரு அணி வெற்றி பெற்றால் பொதுவாக் முழு அணிக்கும் கௌரவம் ஒன்று கிடைக்கும். ஆனால் தனியாக ஆட்டநாயகன் ஒருவன் தெரிவாகி பாராட்ப்படுவான். அதற்காக மற்றவர்கள் சரியாக விளையாடவில்லை என்று பொருள்படாது.
அதாவது சில சந்தர்பங்களில் சில துடுப்பாட்டக் காரர்கள் தட்டித்தட்டி தடுத்து விளையாடுவர். அவ்வாறு ஆரம்ப கட்ட விக்கட்களை காப்பாற்றிக் கொடுப்பதால் இறுதிக்கட்டத்தில் விளையாடுபவர்களுக்கு கைகால்களை உயர்த்தி தைரிய மாக அடித்தாடி முடியும்.
இங்கும் அப்படியே நடந்தது. சிலர் அவர்களது கடமைகளை சரியாக நிறைவேற்றிச் சென்றனர். எனவே இறுதி நேரத்தில் எனக்கு வேகமாக அடித்து ஆட சந்தர்ப்பம் கிடைத்தது. நான் 'மேன் ஒப்த மெச்' ஆக பாராட்டப்பட்டாலும் மற்ற முனையில் ஆடியவர்கள் தமது விக்கட்டுக்களை இழந்திருந்தால் தனியாக என்னால் மட்டும் விளையாடி இருக்க முடியாது. அவர்கள் தட்டித் தட்டி விளையாடியது எனக்கு சாகமானது போலாகும் என்று நகைச்சுவையாகக் கூறினார்.
தேர்தல் முறை தொடர்பாக இன்று பெரிய ஆதங்கள் ஏற்பட்டுள்ளன. இதற்கு ஒரு சிறிய விடைதான் உண்டு. சட்டவாக்கத் துறையினர் கையில்தான் எல்லாம் உண்டு. அதனை நடைமுறைப் படுத்துவதே எமது திணைக்களத்தின் பொறுப்பாகும். நாம் நேரடியாக பொறுப்புச் சொல்ல வேண்டியவர் உள்ளுராட்சி மாகாண சபைகள் அமைச்சருக்காகும். உள்ளுராட்சி மாகாண சபைகள் அமைச்சு எதனை வர்தமாணியில் வெளியிடுகிறதோ அதனை நாம் நடைமுறைப் படுத்துவோம். உள்ளுராட்சி மாகாண சபை அமைச்சிற்கான ஆலோசனைகள் மற்றும் வழிகாட்டல்களை அவர்களை வழிநடத்தும் பாராளு மன்றம் மேற்கொள்ளும். பாராளுமன்றத்தை ஜனாதிபதி வழி நடத்துவார். எனவே புதிய தேர்தல் முறை பற்றியோ, புதிய தொகுததி முறை பற்றி நாம் அலட்டிக் கொள்ள மாட்டோம். அது உள்ளுராட்சி மாகாண சபை அமைச்சையும் அமைச்சரையும் சார்ந்த விடயமாகும்.
இலத்திரனில் வாக்களிப்பு பற்றி பேசப்படுகிறது. கடந்த தேர்தல்களில் பாரிய கால விரையம் மற்றும் பண விரையம் என்பன ஏற்பட்டது பற்றி நாம் அடிக்கடி பேசுகின்றோம். ஒரு தேர்தல் வந்தால் வாக்குச் சீட்டுக்கள் அச்சிட வேண்டும். அதற்கு பௌதீக வளங்கள் விரையமாகின்றன. அதிகளவு கடதாசிகள் விரையமாகின்றன. கூடிய காலம் தேவைப் படுகிறது. ஆனால் இலத்திரனியல் வாக்களிப்பு முறை கொண்டு வரப்பட்டால் காகிதம் அச்சிடும் பணி தேவையில்லை. வாக்கெண்ணும் காலம் தேவைப்படாது. நித்திரை விழித்து முடிவுகளை அறியத் தேவையில்லை. உடனுக்குடன் எல்லாவற்றையும் தெரிந்து கொள்ளலாம். அதற்கான ஆரம்பச் செலவு மட்டுமே உண்டு காலப்போக்கில் அதனையும் குறைத்துக் கொள்ள முடியும். எனவே இலத்தரனில் வாக்களிப்பு முறை அறிமுகப் படுத்தி வீண் விரையத்தைக் குறைப்பது நல்லது.
கடந்த தேர்தலின் போது செலவிட்ட 350 கோடி ருபாயை மீதப் படுத்தி சுமார் 150 கோடி ரூபாவில் எல்லாவற்றையும் முடித்துக் கொள்ளலாம். வுhக்குப் பெட்டிகளை காவல் காக்கும் தேவை ஏற்படாது என்றார்.
இப்படியான பணிகளுக்கு கீழ் மட்டம் முதல் உயர் மட்டம் வரை ஒரேவிதமான ஒத்துழைப்புத் தேவை. உயர் அதிகாரிகள் மட்டும் பாடுபடுவதாலோ, அல்லது கீழ் மட்டத்தில் உள்ளவாகள் மட்டும் பாடுபடுவதாலோ குறிப்பி;ட இலக்கை அடைந்து கொள்ள முடியாது. முழுத் திணைக்களமும் குழுவாக இயங்குதல் வேண்டும். முன்னர் அவ்வாறான ஒரு கூழு;நிலை இல்லாத காரணத்ததால் நம்கபத்தன்மை குறைந்து காணப்பட்டது என்றார்.
அதனை அடுத்து தேர்தல் ஆணையாளர் மல்வத்தை மகாநாயககத் தேரர் திப்பட்டுவாவே ஸ்ரீ சுமங்கள சித்தார்த்த தேரரை சந்தித்து நல்லாசி பெற்றுக் கொண்டார். அதனை அடுத்து அஸ்கிரிய பீடத்தின் மகாநாயக்கரான கலகம ஸ்ரீ அத்தடஸ்சி தேரரை சந்தித்து நலாசி பெற்றார். இங்கு தேரருடன் மிக சுவாரஸ்யமாகவும் நற்புறவுடனும் உரையாடல் இடம் பெற்றது.
இங்கு தோர் ஒரு கட்டத்தில் தெரிவத்ததாவது-
தேர்தல் ஆணையாளர் மகிந்த தேசப்பிரியவை யாரும் அறிமுகம் செய்யத் தேவையில்லை. ஏனென்றால் அவரை கண்டவுடனே இனம் காணமுடியும். ஓன்று அவரது உடல் தோற்றம். அடுத்த அவரது தாடி மீசை, அதனை விட அவர் பேசும் போது சட் டென்று கூறும் பதில். இவை அனைத்தும் இலங்கை மக்களது மனதில் பதிந்துள்ளன. தேர்தல் ஆணையாளரை சிங்களத்தில் 'மெத்திவரன கொமசாரிஸ்' என்பார்கள். இதன் சுருக்கம்தான் 'மெ.கோ' என்பதாகும். எனவே ஒருமுறை தேரர் உங்களை மெகோ (உண்ணி) என்று குறிப்பிட்டதாக செய்தி வந்திருந்தது. நீங்கள் அந்த மெக்கோ வல்ல. நீங்கள் மெ.கோ. என்று கூறிய போது யாவரும் வாய்விட்டுச் சிரித்தனர்.
இந்த சகாப்தத்தின் சிறந்த மனிதராக இவரை குறிப்பிடலாமா?
ReplyDelete