ஊர் மக்கள் என்னை, மிருகத்தைப் போன்று பார்க்கின்றார்கள் - சிறுமியின் தாய்
கொட்டாதெனியாவ சிறுமியின் கொலையுடன் எனது மகனுக்கு தொடர்பு கிடையாது என சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ள 17 வயதான சந்தேகநபரின் தாய் தெரிவித்துள்ளார்.
சம்பவம் இடம்பெற்ற வெள்ளிக்கிழமை இரவு குறித்த பாடசாலை மாணவர் வீட்டிலேயே இருந்ததாகக் குறிப்பிட்டுள்ளார். மகன் சம்பவம் இடம்பெற்ற போது வீட்டில் இருந்தார், கொலையுடன் அவருக்கு தொடர்பு கிடையாது.
பொலிஸாரை மகனை கைது செய்த காரணத்தினால் ஊர் மக்கள் என்னை மிருகத்தைப் பார்ப்பது போன்று பார்க்கின்றார்கள். சிறுமியின் கொலையை வன்மையாக கண்டிக்கின்றோம். கொலையாளியை கண்டிக்க ஒத்துழைப்பு வழங்குவோம் என தெரிவித்துள்ளார்.
இதேவேளை, சிறுமி சேயா கொலையுடன் தொடர்புடைய சந்தேக நபர்களில் ஒருவர் பாடசாலை மாணவர் என்பதனை பொலிஸார் கருத்திற் கொள்ளவில்லை என இலங்கை ஆசிரியர் சங்கத்தின் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
உயிரிழந்த சிறுமியைப் போன்றே, சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்ட மாணவரும் சிறுவரே. பொலிஸார், மாணவரின் அடையாளத்தைப் வெளிப்படுத்தியிருக்கக் கூடாது.
விசாரணைகளின் மூலம் மாணவர் குற்றமற்றவர் என தெரியவந்தால், மாணவர் தொடர்ந்தும் கல்வியைத் தொடரவோ அல்லது சமூகத்தில் வாழ்வதற்கோ முடியாத நிலைமை ஏற்படும்.
இவ்வாறான விசாரணைகளின் போது பொலிஸார் மிகுந்த பொறுப்புணர்ச்சியுடன் செயற்பட வேண்டும். ஒருவர் குற்றவாளி என நிரூபிக்கப்படும் வரையில் அவர் குற்றமற்றவராகவே கருதப்பட வேண்டுமென ஜோசப் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
இதேவேளை, குறித்த பாடசாலை மாணவரின் மடிக் கணனியில் நூற்றுக் கணக்கான ஆபசப் படங்கள் சேமிக்கப்பட்டிருந்தமை விசாரணைகளின் மூலம் தெரியவந்துள்ளது.
இந்த மடிக் கணனி மேலதிக விசாரணைகளுக்காக கொழும்புப் பல்கலைக்கழக கணனிப் பிரிவிற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
இன்னும் சில தினங்களில் கொலையாளி யார் என்பதனை அம்பலப்படுத்த முடியும் என பொலிஸ் மா அதிபர் என்.கே. இளங்கக்கோன் தெரிவித்துள்ளார்.
Post a Comment