ஊடகவியலாளர்கள் இப்படிச் செய்யலாமா..?
ஐரோப்பிய நாடுகளில் அகதிகள் என்ற போர்வையில் தீவிரவாதிகள் எவ்வாறு நுழைவார்கள் என்பதை நெதர்லாந்து நாட்டை சேர்ந்த நிருபர் ஒருவர் ஆதாரத்துடன் நிரூபித்துள்ளார்.
சிரியா நாட்டை சேர்ந்த Harald Doornbos என்பவர் நெதர்லாந்து நாட்டில் Nieuwe Revu என்ற பத்திரிகையில் நிருபராக பணியாற்றி வருகிறார்.
இவர் தான் ஒரு அகதி என்றும், ஐரோப்பிய நாட்டிற்கு சட்டவிரோதமாக செல்ல வேண்டும் என கூறி போலி கடவுச்சீட்டு ஒன்றை தயார் செய்து தரும்படி, அந்த பணியை செய்து வரும் நபர் ஒருவரிடம் கூறியுள்ளார்.
இதற்கு சம்மதித்த அந்த நபர் பெயர் மற்றும் புகைப்படம் ஒன்றை அளிக்குமாறு கூறியுள்ளார். பின்னர், அந்த நிருபர் நெதர்லாந்து நாட்டின் பிரதமரான மார்க் ரூட்டின் புகைப்படத்தையும் Malek Ramadan என்ற பெயரையும் அளித்துள்ளார்.
போலி கடவுச்சீட்டை தயாரிக்க 750 யூரோக்களும் அந்த நிருபர் அளித்துள்ளார். பணம் கட்டிய அடுத்த 40 மணி நேரங்களில் பிரதமரின் புகைப்படத்துடன் அவருக்கு போலி கடவுச்சீட்டு கிடைத்துள்ளது.
மேலும், இந்த கடவுச்சீட்டை பயன்படுத்தி எந்த பிரச்சனையும் இன்றி சைப்ரஸ் நாட்டிற்குள் நுழையலாம் என அந்த நபர் கூறியுள்ளார்.
கடவுச்சீட்டை பெற்றுக்கொண்டு அந்த நிருபர், அதனை தனது டுவிட்டர் தளத்தில் வெளியிட்டு போலி கடவுச்சீட்டு பெறுவது எவ்வளவு எளிதானது என கூறியுள்ளார்.
தன்னுடைய நோக்கம் இந்த போலி கடவுச்சீட்டை பெறுவது அல்ல. ஆனால். ஒரு நாட்டின் பிரதமரின் புகைப்படத்தை பயன்படுத்தி போலி கடவுச்சீட்டு எடுப்பது அவ்வளவு எளிதான காரியமாக உள்ளது.
இதே போல், சிரியாவிலிருந்து போலி கடவுச்சீட்டுகளை பயன்படுத்தி ஐரோப்பிய நாடுகளில் தீவிரவாதிகள் நுழைந்து பேரழிவுகளை ஏற்படுத்தும் வாய்ப்பும் அதிகமாக உள்ளது என்பதை நிரூபிக்கவே இவ்வாறு போலி கடவுச்சீட்டு எடுத்ததாக அவர் தனது வலைத்தளத்தில் விளக்கம் அளித்துள்ளார்.
கள்ளக் கடத்தல் பேர்வழிகள் பலரின் பிழைப்பில் மன்னி போட்டு விட்டார்.
ReplyDeleteஊடகவியலாளர் சரியாகவே செயல்பட்டுலாளர்.
patta weda. Kallan maatti.
ReplyDeleteElla naattilum kalla mafia ulladhu.