Header Ads



கால்பந்தாட்டம் பார்க்க போவதாக கூறிவிட்டு, குளிக்கச்சென்ற சிறுவர்கள் சடலங்களாக மீட்பு

யாழ்ப்பாணம், அருமைக்குட்டி குளத்திலிருந்து சிறுவர்கள் இருவரின் சடலங்களை ஊர்காவற்துறை பொலிஸார் ஞாயிற்றுக்கிழமை மாலை மீட்டுள்ளனர். 

ஊர்காவற்றுறை நாராந்தனை பகுதியைச் சேரந்த் ஒன்றுவிட்ட சகோதரர்களான டெனிஸ்கரன் தனுசன் (வயது 11), சுரேஷ்குமார் விதுஷன் (வயது 8) ஆகிய இருவருமே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டனர். 

மேற்படி இருவரும் ஞாயிற்றுக்கிழமை (20), கால்ப்பந்தாட்டம் பார்க்க போவதாக கூறிவிட்டு குளத்தில் குளிக்கச் சென்றுள்ளதுடன் அங்கு நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளதாக தெரியவருகிறது. இருவரது சடலங்களும் யாழ்.போதான வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதாகவும், மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக பொலிஸார் தெரிவித்தனர். 

No comments

Powered by Blogger.