Header Ads



பிரான்ஸை நிராகரிக்கும், முஸ்லிம் அகதிகள்..!

ஐரோப்பிய நாடுகளில் ஒன்றான பிரான்ஸ் நாட்டில் குடியேற பெரும்பாலான அகதிகள் விரும்பாததற்கான காரணங்களை பல்வேறு நாடுகளை சேர்ந்த அகதிகள் தங்களுடைய கருத்துக்களை பகிர்ந்துள்ளனர். 

ஆசியா, ஆப்பிரிக்கா மற்றும் மத்திய கிழக்கு ஆசிய நாடுகளிலிருந்து வெளியேறி ஐரோப்பாவில் குடியேற விரும்பும் பெரும்பாலான அகதிகளின் முக்கிய இலக்காக இருப்பது ஜேர்மனி, ஸ்வீடன், பிரித்தானியா மற்றும் ஃபின்லாந்து நாடுகள் மட்டுமே.

முன்னொரு காலத்தில் வெளிநாட்டினர்களின் முக்கிய தெரிவாக இருந்த பிரான்ஸ் நாட்டை தற்போது அகதிகள் ஒதுக்குவதற்கான காரணங்கள் என்ன?

ஈராக் நாட்டை சேர்ந்த எட்வர்ட் (24) கூறுகையில், பிரான்ஸ் நாடு என்னுடைய எதிர்க்காலத்துக்கு உகந்த நாடு அல்ல. இதற்கு மிக முக்கிய காரணம் இங்குள்ள மிக மோசமான வேலையில்லா திண்டாட்டம் தான்.

பிரான்ஸ் நாட்டில் தற்போது மட்டும் சுமார் 3.5 மில்லியன் நபர்கள் வேலையில்லாமல் அவதியுற்று வருகின்றனர்.

இதை விட மிக முக்கியமாக இருப்பது அகதிகளுக்கான அரசின் கொள்கை முடிவுகள்.

குறிப்பாக, பிரான்ஸ் நாட்டில் குடியிருப்பு அனுமதி (Resdence Permit) பெறுவது என்பது மிகச்சாதரணமான விடயம் அல்ல என கருத்து கூறியுள்ளார்.

சிரியா நாட்டிலிருந்து சுவீடன் நாட்டிற்கு சென்றுள்ள அப்துல்லா ரஹ்மான் (26) என்பவர் கூறுகையில், பிரான்ஸ் நாட்டிற்கு சுற்றுலாவிற்கு சென்று சுற்றிப்பார்ப்பதற்கு தான் தகுதியான நாடு.

ஆனால், வேலையை எதிர்ப்பார்த்து அந்நாட்டிற்கு செல்வது மிகவும் ஆபத்தானது. இந்நாட்டு மொழியை கற்பதும் மிகவும் சிரமான ஒன்று.

அகதிகளில் பெரும்பாலானவர்களுக்கு ‘அரைகுறையான’ ஆங்கிலம் மட்டுமே தெரியும். ஆனால், இந்த மொழிக்கூட இல்லாமல் பிரான்ஸ் நாட்டில் குடியேற தேவையான பெரும்பாலான விண்ணப்பங்கள் பிரெஞ்ச் மொழியில் மட்டுமே இருப்பது ஏற்புடையது அல்ல என அவர் கருத்து தெரிவித்துள்ளார்.

ஜேர்மனிக்கு வந்துள்ள அகதிகளில் சுமார் 1,000 நபர்களுக்கு குடியேற்ற அனுமதி வழங்க தயார் எனக்கூறி அதிபர் பிராங்கோயிஸ் ஹாலண்டே அதிகாரிகளை ஜேர்மனிக்கு அனுப்பி வைத்தார்.

ஆனால், அதிபர் எதிர்ப்பார்த்தைவிட குறைவாக 600 அகதிகளே பிரான்ஸ் நாட்டிற்கு வந்துள்ளனர்.

சூடான் நாட்டை சேர்ந்த கரீம் என்ற நபர் சுமார் 8 மாதங்களாக பாரீஸில் உள்ள ஒரு பூங்காவில் தங்க வந்ததன் விளைவாக அவருக்கு அரசு குடியேற்ற அனுமதி வழங்கியது.

இது குறித்து பேசிய அவர், ‘புகலிடம் கிடைத்தால் போதுமா? வருமானத்திற்கு வேலை கிடைக்க வேண்டுமே…! இந்நாட்டு மொழியை கற்றுக்கொண்டால் தான் அதிக வேலை வாய்ப்பு கிடைக்கிறது. ஆனால், அதற்கான வழிமுறைகள் குறைவாக இருக்கிறது’ என வேதனை தெரிவித்துள்ளார்.

சிரியா நாட்டை சேர்ந்த Sabreen Al-Rassace என்பவர் கூறுகையில், பிரான்ஸ் நாட்டில் ஒரு வீட்டை பார்த்து குடியேறுவது என்பது மிகவும் சிரமமானதாக இருக்கிறது.

குடியேற்ற அனுமதி பெற வேண்டும் என்றால், அதிகாரிகளுக்கு கட்டாயம் வீட்டு முகவரி அளிக்க வேண்டும். ஆனால், வீடே கிடைக்காதபோது வீட்டு முகவரியை எப்படி கொடுக்க முடியும்?

முழுவதுமாக, அகதிகளிற்கு குடியேற்ற அனுமதி வழங்கும் இந்நாட்டு அரசாங்க அதிகாரிகளின் வழிமுறைகள் அனைத்தும் மிகவும் கடினமானதாகவே உள்ளது என அவர் வேதனை தெரிவித்துள்ளார்.

தற்போதைய நிலையில், பிரான்ஸ் நாட்டில் குடியேற்ற அனுமதிக்காக காத்துக்கொண்டுருக்கும் 60 ஆயிரம் நபர்களுக்கு 30 ஆயிரம் படுக்கைகள் தான் இருக்கின்றன.

எஞ்சிய நபர்கள் நண்பர்கள் வீட்டில் அல்லது பூங்காக்களில், இன்னும் மோசமாக தெருக்களில் தங்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.

இதனை நன்கு உணர்ந்த சில அகதிகள், ‘பிரான்ஸ் நாடு அகதிகளுக்கான நாடு அல்ல’ என வெளிப்படையாகவே எச்சரிக்கை விடுக்கும் வகையில் சில நபர்கள் பேஸ்புக்கில் பக்கத்தை தொடங்கி பரப்பி வருகின்றனர்.

புலம்பெயர்தல் குறித்து ஆய்வு செய்து வரும் Francois Gemene என்ற நிபுணர் கூறுகையில், பிரான்ஸ் நாட்டில் குடியேற பெரும்பாலான அகதிகள் விரும்பாதது, இந்நாடு அவர்களை எந்தவிதத்திலும் கவரவில்லை என்பதையே காட்டுகிறது.

தற்போது உள்ள நடைமுறைகளை மறு ஆய்வு செய்து, அகதிகளுக்கு பயன்படும் வகையில் விதிமுறைகளை மாற்றி அமைப்பதில் பிரான்ஸ் அரசு அக்கறை செலுத்தினால் மட்டுமே எதிர்காலத்தில் அகதிகளுக்கான நாடாக பிரான்ஸ் திகழும் என Francois Gemene கருத்து தெரிவித்துள்ளார்.

1 comment:

  1. Islathuku hijrath seyavillai ivargal suganmana life madum marugirargal panathuku aduthan eroup pakam oaatam GCC nadugalin boader vanthaal kattayam visayam nadkum euro than kanavo seen illai

    ReplyDelete

Powered by Blogger.