Header Ads



சகல அமைச்சர்களும் ஜனாதிபதி மைத்திரி முன், திரும்பவும் சத்தியப் பிரமாணம்

அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் சகல அமைச்சர்களும் அமைச்சரவையின் கூட்டுப் பொறுப்பை பாதுகாப்பதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன முன்னிலையில் சத்தியப் பிரமாணம் செய்துக்கொண்டுள்ளனர்.

நாட்டின் நலனுக்காக துரிதமாக செயற்படுத்த வேண்டி இருந்த சில தீர்மானங்களை செயற்படுத்த ஏற்பட்ட தடைகளை கவனத்தில் கொண்டு, எதிர்காலத்தில் அவ்வாறான நிலைமை ஏற்படுவதை தவிர்க்க ஜனாதிபதி அமைச்சரவையில் முன்வைத்த யோசனைக்கு அமைய அமைச்சர்கள் இந்த சத்தியப் பிரமாணத்தை செய்துள்ளதாக அமைச்சரவைப் பேச்சாளர் ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார்.

கூட்டுப் பொறுப்பை பாதுகாத்து, அமைச்சரவையின் மகத்தான சம்பிரதாயங்களுக்கு மதிப்பளித்து, நல்லொழுக்கமுடைய அரசியல் கலாச்சாரத்தை ஏற்படுத்த அமைச்சரவையில் உள்ள அனைத்து உறுப்பினர்களும் அர்ப்பணிப்புடன் செயற்படுவதாக சத்தியப் பிரமாணம் செய்துக்கொண்டுள்ளனர்.

இலங்கை அரசாங்கத்தின் நிர்வாகத்தை நடத்துவது, அந்த நிர்வாகம் தொடர்பான துறைகளுக்கு பொறுப்பாக செயற்படும் அமைச்சரவை, நாடாளுமன்றத்திற்கு பொறுப்புக் கூறவும், பதிலளிக்கவும் கடமைப்பட்டுள்ளதாக அரசியலமைப்புச் சட்டத்தின் 42(2) பந்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

No comments

Powered by Blogger.