“வெள்ளைக்காரனின் நீதிமன்றில் தேசத்தின் பொய் வழக்கு”
ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையின் ஹைபிரைட் நீதிமன்ற யோசனைக்கு எதிராக விமல் வீரவன்ச தலைமையிலான தேசிய சுதந்திர முன்னணி நாடு முழுவதிலும் போராட்டம் நடத்த உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
ஹைபிரைட் நீதிமன்றின் பாதக விளைவுகள் குறித்து நாடு முழுவதிலும் உள்ள மக்களை தெளிவுபடுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என கட்சி அறிவித்துள்ளது.
கருத்தரங்ககுகளை நடாத்தி அதன் ஊடாக மக்கள் தெளிவுபடுத்தப்பட உள்ளதாகத் தெரிவித்துள்ளது.
இதன் முதல் கட்டமாக எதிர்வரும் 27ம் திகதி பிற்பகல் 3.00 மணிக்கு கொழும்பு மக்கள் கலை கேந்திர நிலையத்தில் விசேட கருத்தரங்கு ஒன்று நடைபெறவுள்ளது.
கட்சியின் தலைவர் விமல் வீரவன்ச இந்த கருத்தரங்கிற்கு தலைமை தாங்கவுள்ளார்.
“வெள்ளைக்காரனின் நீதிமன்றில் தேசத்தின் பொய் வழக்கு” என்ற தொனிப்பொருளில் கருத்தரங்கு நடத்தப்படவுள்ளது.
நாட்டின் அனைத்து மாவட்டங்களினதும் முக்கிய நகரங்களை உள்ளடக்கி இந்த கருத்தரங்குகள் நடத்தப்பட உள்ளதாக தேசிய சுதந்திர முன்னணி கட்சி ஊடகங்களுக்கு அறிவித்துள்ளது.
Post a Comment