நீதித்துறைக்கே அவமானம்
ஜனாதிபதி தேர்தலின்போது 600 மில்லியன் ரூபாய்களை மோசடி செய்த குற்றச்சாட்டுக்கு உள்ளாகியுள்ள முன்னாள் ஜனாதிபதியின் செயலாளர் லலித் வீரதுங்கவை கைதுசெய்யாமைக்கு பின்னணியில் காரணம் ஒன்று இருப்பது குறித்து செய்தி வெளியாகியுள்ளது.
இலங்கையின் ஆங்கில இணையத்தளம் ஒன்று இதனை தெரிவித்துள்ளது.
மேல்நீதிமன்ற நீதிபதி குசலா சரோஜினி வீரவர்த்தனவின் இல்லத்தில் இடம்பெற்ற இரகசிய பேச்சுவார்த்தையே இதற்கான காரணம் என்று அந்த இணையத்தளம் குறிப்பிட்டுள்ளது.
இது நீதித்துறைக்கே அவமானம் என்று இணையத்தளம் சுட்டிக்காட்டியுள்ளது. எனினும் இந்த சந்திப்பின் போது லலித் வீரதுங்க பங்கேற்கவில்லை.
2015, ஜனாதிபதி தேர்தலின் போது தொலைத்தொடர்பில் ஆணைக்குழுவின் 600 மில்லியன் ரூபாய்களை ஜனாதிபதி செயலக கணக்குக்கு மாற்றி பௌத்த மத சில் அனுஸ்டானம் செய்வதற்கான ஆடைகள் கொள்வனவு செய்யப்பட்டுள்ளன.
இந்த அனுஸ்டானங்கள் மஹிந்த ராஜபக்சவுக்கு ஆசி வேண்டியே மேற்கொள்ளப்பட்டுள்ளன.
இந்தநிலையில் கொழும்பு மேல்நீதிமன்றத்தில் லலித் வீரதுங்க மற்றும் தொலைத்தொடர்பு ஆணைக்குழுவின் முன்னாள் பணிப்பாளர் அனுஷ பல்பிட்ட ஆகியோர் மீது குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்ட போதும் நீதிபதி சரோஜினி இன்னும் கைது உத்தரவை பிறப்பிக்கவில்லை என்று இணையத்தளம் தெரிவித்துள்ளது.
Post a Comment