அப்துல் காதர் புலவரும், அறிஞர் சித்திலெவ்வையும் இன்று இருந்திருந்தால்..?
-JM.Hafeez-
மலையகத்தில் வாழ்ந்து மனம் பரப்பி மறைந்த மூத்த புலவர் அருள்வாக்கி அப்துல் காதர் மற்றும் அறிஞர் சித்திலெவ்வை மறைக்கார் ஆகியோரின் ஐந்தாவது தலைமுறையில் பிறந்துள்ள கண்டியைச் சேர்ந்த செல்வி.ஹாலா மரிக்கார் மற்றும் அவர் சகோதரர் பிலால் மறைக்கார் ஆகிய இருவரும் இலக்கியத்துறையில் தமது பரம்பரையின் புகழை எடுத்தியம்பும் விதமான சிறு வயது முதலே எழுதுகோலால் தமது திறனை வெளிப் படுத்தி சர்வதேச ரீதியில் இடம் பிடித்து வருகின்றனர்.
இதற்கு முன்பும் இவர்கள் பற்றி பத்திரிகைகளில் செய்திகள் வெளியாகி இருந்தன. இவர்கள் இருவரையும் பற்றி அவர்களது தந்தை ஹசன் மரைக்கார்(தொலைபேசி இல-077 2664679) தெரிவித்ததாவது-
இளைஞர் பாராளுமன்றம் என்ற ஒன்று ஏறத்தாழ இலங்கைப் பாராளு மன்றத்தை அடிப்படையாகக் கொண்டு இயங்கி இளைஞர்கள் மத்தியில் பல்வேறு திறன்களை வளாத்து வந்துள்ளன. அதே பாணியில் சர்வதேச ரீதியில் இளைஞர் யுவதிகளது திறமைகளை வளர்க்கும் விதத்தில் யுனெஸ்கோ நிறுவனத்தின் அனுசரணையில் ஐக்கிய நாடுகள் சபையின் மாதரியில் அமைந்த மாகா நாடு ஒன்று அண்மையில் நடத்தப்பட்டது.
இதுவரை சர்வதேச ரீதியில் 8 முறை நடத்தப்பட்ட போதும் இலங்கையில் முதன் முதலாக கடந்த ஆகஸ்ட் மாதம் 14ம் திகதி முதல் 16ம் திகதி வரை நடத்தப்பட்டது . ஐ.நா. சபையின் மாதரி சர்வதேச மகாநாடு பண்டாரநாயக்கா சர்வதேச மகாநாட்டு மண்டபத்தில் இடம் பெற்றது.
இதில் மொத்தம் 7000 பேர் உலகலாவிய ரீதியில் பாடசாலைகள் மட்டத்தில் பங்களிப்புச் செய்த போதும் இலங்கையில் 55 பாடசாலை மாணவர்கள் இதில் பங்கு கொண்டனர். அதில் ஒருவராக கண்டி திருத்துவக் கல்லூரி மாணவன் பிலால் மரிக்காருக்கு (வயது 15) ஹைட்டி நாட்டின்;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;; நிரந்தர மாதிரிப் பிரதிநிதி என்ற வகிபாகம் வழங்கப்பட்டது.
அதன் படி ஹைட்டியின் கல்வி, பொருளாதார, கலாச்சார, சமூக மற்றும் சமகாலப்பிரச்சினைகள் பற்றி விவாதத்தில் பங்கு கொண்டார். அங்குள்ள முக்கிய பிரச்சினையான எய்ட்ஸ் மற்றும் சுகாதார வீட்டுப் பிரச்சினைகள் பற்றி அவர் ஆற்றிய உரை முக்கிய மானதாகும். இது பலரது கவனத்தை ஈர்த்தது.
இதனை விட அவர் மேற்கொண்ட சர்வதேச ரீதியிலான ஆக்கப்பணிகள் தொடர்பாக முன்னர் ஒரு ஆக்கத்தில் பிசுரமானது.
இதே விதமாக அவரது சகோதரியான ஹாலா மரிக்கார் பல்வேறு எழுத்தத்துறைகளில் தடம் பதித்து வருகிறார். கண்டி பதியுதீன் மஹ்மூத் மகளிர் கல்லூரியில் 10ம் தரத்தில் கல்வி கற்று வருகிறார். கம்பன் வீட்டுக் கட்டுத்தறியும் கவிதை பாடுமாம் என்பதற்கு ஒப்ப இவரும் சிறுவயது முதல் கலை இலக்கியத் துறையில் சர்வதேச பாராட்டுக்கள் பலவற்றைப் பெற்றுள்ளார். இது பற்றியும் முன்னர் பல முறை எழுதப்பட்டுள்ளது.
அண்மையில் 'ரோயல் கொமன்வெல்த் சொசைட்டி' ஒழுங்கு செய்த காமன்வெல்த் நாடுகளின் (பொதுநலவய நாடுகள்) மகாராணி கட்டுரைப் போட்டியில் (த குயீன் கொமன்வெல்த் எஸ்ஸே கொம்பெடிஷன்) 49 சர்வதேச நாடுகளைச் சோந்த 13000 போட்டியாளர்கள் பங்கு கொண்டனர். இதில் 240 பேர் மட்டுமே இறுதித் தேர்வுக்கு தெரிவு செய்யப்பட்டனர். பாராட்டப்பட்ட இலங்கையர்கள் ஏழு பேரில் கண்டி பதியுதீன் மஹ்மூத் மகளிர் கல்லூரியைச் சேர்ந்த செல்வி ஹாலா மரிக்காhரும் ஒருவராவார்.
இப்போட்டியில் பின்வருவோர் தெரிவாகினர்-
1. அச்சினி பெரேரா- லேடி விக்டோரியா கொன்வென்ட. மொரட்டுவ.
2. சேனியா ஆரியநந்த- கேட்வே கல்லூரி, கொழும்பு.
3. கயான் ஜயவர்தன- கேட்வே கல்லூரி. நீர்கொழுமபு.
4. மரியம் சிமாக்- இல்மா சர்வதேசப் பாடசாலை.
5. டெவின் ஜினதாச – தனியார் பாடசாலை.
6. ஹாலா மரிக்கார். பதியுதீன் மஹ்மூத் மகளிர் கல்லூரி;- கண்டி.
7. சிக்ரா சரூக்- தனிப்பட்ட விண்ணப்பதாரி
மேற்படி வெற்றியாளர்களில் ஒருவரான ஹாலா மரிக்கார் தற்போது 10ம் ஆண்டில் கல்வி கற்று வருகிறார். மேற்படி போட்டியில் இவர் தங்க விருதுப்பிரிவில் தெரிவு செய்யப்பட்டார். இவர் தனது 9வது வயதிலே சர்வதேச கவிதைப் போட்டி ஒன்றில் பங்கு கொண்டு முதற் பரிசு பெற்றுள்ளார்.
மேற்படி ஹாலா மரிக்காரும் அவர் சகோதரர் பிலால் மரிக்காரும் பிரபல தமிழ் புலவரான அருள்வாக்கி அப்துல் காதர் புலவரின் நேரடி ஐந்தாவது வாரிசாகும். அருள்வாக்கி அப்துல் காதர், இஸ்மாபீபி, நூருல் பவுசியா, ஸஹிலா மொகிதீன் என்ற தொடரில் அடுத்ததாக ஹாலா மரிககாரும், பிலால் மரிக்காரும் பிறந்துள்ளனர்.
அதே விதமாக நாடறிந்த அறிஞர் சித்தி லெவ்வை மரைக்காரின் அடுத்த வாரிசுகளான அப்துல் கரீம் மரிக்கார், கரீம் மரிக்கார், ஹஜன் மரிக்கார் என்ற தொடரில் பிலால் மரிக்காரும், ஹாலா மரிக்காரும் பிறந்துள்ளனர்.
இவ்வாறு தாய்வழியான வாரிசாக அருள் வாக்கி அப்துல் காதர் புலவரும், தந்தை வழி வாரிசாக அறிஞர் சித்திலெவ்வையும் கிடைக்கப் பெற்றமை இவர்களது பேரதிஷ்டம் என அவர்களது தந்தை ஹசன் மரிக்கார் தெரிவித்தார்.
ஹாலா மரிக்கார், பிலால் மரிக்கார் ஆகியோர்களையும்; மாதிரி பொதுநலவய நாடுகள் கூட்டத்தில் பிலால் மரிக்கார் உடன் பங்கு கொண்ட கோஷ்டியையும் படங்களில் காணலாம்.
Post a Comment