Header Ads



ஹிஸ்புல்லா தமது அமைச்சு, கடமைகளை பொறுப்பேற்றார்

-அஸ்ரப் ஏ சமத்-

இராஜாங்க அமைச்சா் ஹிஸ்புல்லா  தமது அமைச்சுக் கடமையேற்றதன் பின் மறைந்த தலைவா்  எம்.எச்.எம் அஸ்ரப் அவா்களது 15ஆண்டு வபாத் தினமான இன்று தலைவருக்காக துஆப் பிராத்தனையும்  அவரது அமைச்சின் அலுவகலத்தில் நடைபெற்றது.

இன்று (16) பம்பலப்பிட்டியில் உள்ள புனா் வாழ்வு அதிகார சபையில் இராஜாங்க அமைச்சா் எம்.எல்.ஏ.எம் ஹிஸ்புல்லாஹ் கடமைகளை ஏற்றுக் கொண்டாா். இந் நிகழ்வில் மீள்குடியோற்ற அமைச்சா் சுவாமிநாதன், இராஜாங்க அமைச்சா் ஏ.எச்.எம் .பௌசி, பாராளுமன்ற உறுப்பிணா் மஸ்தான்  மற்றும் மாகண சபை உறுப்பிணா்கள் சுபையிா்  மேல்மாகணசபை உறுப்பிணா் பாயிஸ்  மற்றும் அதிகாரிகளும் கலந்து கொண்டனா்.

இராஜாங்க அமைச்சா் எம்.எல்.ஏ. எம். ஹிஸ்புல்லாஹ் இங்கு உரையாற்றுகையில் -

இந்த அமைச்சுப்  பொறுப்புக்களை தந்த ஜனாதிபதி மைத்திரிபால பிரதம மந்திரி ரணில் விக்கிரமசிங்க ஆகியோறுக்கு நன்றியைத் தெரிவித்துக் கொண்டாா். வடகிழக்கி்ல் யுத்தத்தினால பாதிக்கபட்ட சகல மக்களது பிரச்சினைகளையும் நாம் இந்த அமைச்சின் ஊடாக 5 வருடத்திற்குள் நல்ல பல திட்டங்களை வகுத்து அதனை நடைமுறைப்படுத்தி விட்டு அதன் பின்பு இவ்வாறனதொரு மீள்குடியேற்றம் புனா் வாழ்வு அமைச்சு ஒன்று தேவையில்லை. இந்த அமைச்சினை முடிவிடல் வேண்டும்.

இதற்காக சம்பந்தப்பட்ட சர்வதேச என்.ஜி.ஓக்கல் மக்கள் வாழ்வாதார உதபும் நிறுவனங்கள் ஊடாக இம் மக்களுக்கு உதபுதல் வேண்டும். இன்னும்  50 ஆயிரம் குடும்பங்கள் மீள்குடியேறாமல் உள்ளனா். அத்துடன் இந்தியா போன்ற நாடுகளிலும் இலங்கை அகதிகள் வாழ்கின்றனா்.  மட்டக்களப்பில் கூட இன்னும் வீட்டுப்பிரச்சினை, அடிப்படை வசதிகள் அற்று பல தமிழ் கிராமங்களில் மக்கள் வாழ்ந்து வருகின்றனா். அவா்களது பிரச்சினைகளையும் நாம் தீா்க்க வேண்டும். அமைச்சா் சுவாமிநாதன் அவா்களின் தலைமையின் கீழ் இந்த அமைச்சின் சேவைக்காக தன்னை அர்ப்பணிப்பேன் என இராஜாங் க அமைச்சா் ஹிஸ்புல்லாஹ் கூறினாா்.


No comments

Powered by Blogger.