Header Ads



சேயா செதவ்மியின் படுகொலைக்கு, எதிர்ப்பு தெரிவித்து முஸ்லிம்கள் ஊர்வலம் (படங்கள்)


-முஸாதிக் முஜீப்-

அக்கரங்க பிரதேசத்தைச் சேர்ந்த சிறுமி சேயா செதவ்மி (5 வயது) என்ற சிறுமி பாலியல் வல்லுறவு செய்யப்பட்டு படுகொலை செய்யப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்தும் குற்றவாளியை உடனடியாக கைது செய்து உரிய தண்டனை வழங்குமாறு வற்புறுத்தியும் நீர்கொழும்பு பெரியமுல்லையில் இன்று வெள்ளிக்கிழமை ஜும்மா தொழுகையின் பின்னர் அமைதி ஊர்வலம் ஒன்று இடம்பெற்றது.

நீர்கொழும்பு பெரியமுல்லை ஜும்மா பள்ளிவாசல் நிருவாக சபையின் ஆலோசனையுடன் நீர்கொழும்பு முஸ்லிம் இளைஞர் அமைப்பு இந்த எதிர்ப்பு நடவடிக்கையை ஏற்பாடு செய்திருந்தது.

இந்த அமைதி ஊர்வலத்தில் பங்கு பற்றிய பல நூற்றுக்கணக்கான பொது மக்கள் கண்டன வாசகங்கள் எழுதப்பட்ட சுலோக அட்டைகளை ஏந்தியிருந்து அமைதியான முறையில் தமது எதிர்ப்பைத் .தெரிவித்தனர்.

இந்த எதிரப்பு நடவடிக்கையில் மேல் மாகாண சபை உறுப்பினர் சாபி ரஹீம்> நீர்கொழும்பு மாநகர சபை உறுப்பினர்களான பரீஸ், ஹீஸான் ஆகீயோரும் பங்கு பற்றினர். 



8 comments:

  1. I appreciate this effort conducted by our Muslim community. Because, it will show our integrity to this country. We must give the voice against crime ever

    ReplyDelete
  2. நல்லது, நல்லது, முஸ்லிம்களும் இந்த நாட்டின் ஒரு அம்சமே.

    ReplyDelete
  3. நல்ல முன்மாதிரி. இது மகட ரீதியான அணுகுமுறையாக அல்லாமல், தேசியி ரீதியான தேவைக்கான முஸ்லிம்களின் பங்களிப்பாக பார்க்கப்படல் வேண்டும்.

    ReplyDelete
  4. கட்டயம் குற்றவாளிகளை சட்டத்திற்கு முன் நிறுத்தி பகிரங்கமாக மரணதண்டனை அளிக்கவேண்டும்

    ReplyDelete
  5. Namma naatlaya nadakuma

    ReplyDelete
  6. நடக்காவிட்டால் இன்னும்பல கொலை கற்பழிப்புகளை எதிர்பார்க்க வேண்டியதுதான்

    ReplyDelete
  7. எதிர்க்கச்சி தலைவரின் அறிக்கை ஒன்றையும் காணவில்லை.இப்படிப்பட்ட நேரத்தில்தான் தமது எதிகட்சி தலைவர் என்ற பொறுப்பை பேரினவாத மக்களுக்கு காட்ட வேண்டும்.அப்போதுதான் நல்லன்னம் ஏற்படும்.

    ReplyDelete
  8. A good initiative. Itis necessary that Muslims should get involved and make public their concerns issues that concern people of other communities and on issues such as democratic rights, education and other similar issues related to people of all the communities.

    ReplyDelete

Powered by Blogger.