'அநாகரிக தர்மபால பற்றி, ஜனாதிபதி மைத்திரி பொய் தகவல் வெளியிட்டுள்ளார்'
அநாகரிக தர்மபால சம்பந்தமாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பொய்யான தகவல் ஒன்றை வெளியிட்டுள்ளதாக தேசப்பற்றுள்ள பிக்கு முன்னணியின் செயலாளர் பொங்கமுவே நாலக தேரர் தெரிவித்துள்ளார்.
நாராஹென்பிட்டி அபயராம விகாரையில் இன்று (15) நடைபெற்ற சிங்கள தேசிய அமைப்புகள் ஒன்றியத்தின் ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இதனை கூறியுள்ளார்.
அநாகரிக தர்மபால சிங்களவர் குறித்து மாத்திரம் பேசிய ஒருவரல்ல எனவும் நாட்டில் வாழும் அனைத்து மக்களுக்காகவும் தேசிய ஐக்கியத்திற்காகவும் பேசியவர் என ஜனாதிபதி கூறியுள்ளார்.
ஜனாதிபதி என்ற வகையில் இவ்வாறு கூறினால், அது உலகத்தை சென்றடையும். ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, அநாகரிக தர்மபால அவர்களை பற்றி எதனையும் அறிந்து கொண்டு இதனை கூறவில்லை.
சிங்களவர்களே எழுந்திருங்கள், புத்தகாயாவை காப்பாற்றுங்கள் என்பதே அநாகரிக தர்மபாலவின் கோஷமாகும். சிங்கள இனத்தையும் சிங்கள பௌத்தர்களையும் மேம்படுத்தவே அவர் நடவடிக்கை எடுத்தார்.
அத்துடன் அநாகரிக தர்மபால சிங்கள பௌத்தயா என்ற பத்திரிகை ஒன்றையும் வெளியிட்டார் எனவும் நாலக தேரர் குறிப்பிட்டுள்ளார்.
முந்திய செய்தி
இந்த செய்தி பழசாகி விட்டது. நீங்கள் அப்லோட் பண்ணுவது ரொம்ப லேட் ஆகி விட்டது.
ReplyDeleteAvar kaburla kathurau in velila kathu
ReplyDeleteYou all thinking with narrow minded.because, you all are sinhala extremist
ReplyDelete