'ஜனாதிபதி மைத்திரி, எமக்கு அநீதி இழைத்துள்ளார்' - இடதுசாரி கட்சிகள்
ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் தேசிய பட்டியலுக்காக தோல்வியடைந்த வேட்பாளர்களை பெயரிட்டமை காரணமாக தமக்கு பாரிய அநீதி இழைக்கப்பட்டுள்ளதாக இடது சாரி கட்சிகள் குற்றம் சுமத்தியுள்ளனர்.
இதன்போது, கூட்டமைப்பின் தலைமைத்துவம் (மைத்திரிபால சிறிசேன) தமக்கு அநீதி இழைந்ததாக அவர்கள் தெரிவித்துள்ளனர்.
கொழும்பில் இன்று இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றிய இலங்கை கம்யூனிஸ்ட் கட்சியின் பொது செயாலாளர் இது தொடர்பில் கருத்து தெரிவித்தார்.
தேர்தலில் தோல்வியடைந்தவர்களுக்கு தேசிய பட்டியல் மூலம் நாடாளுமன்றத்திற்கு அனுப்பியமையானது தம்மைப்போன்றவர்களுக்கு தேசிய அரசியலில் இருந்து ஒதுக்கும் செயல்பாடென அவர் குற்றம் சுமத்தினார்.
இந்த ஊடகவியலாளர் சந்திப்பில் உரையாற்றிய லங்கா சமசமாஜ கட்சியின் பொதுச் செயலாளர் திஸ்ச விதாரண தோல்வியடைந்த வேட்பாளர்கள் தேசிய பட்டியலில் உள்வாங்கப்பட்டமை குறித்து தாம் அதிருப்தியடைவதாக அவர் குறிப்பிட்டுளளார்.
இதன்போது கருத்து தெரிவித்த ஜனநாயக இடதுசாரி முன்னணியின் செயலாளர் வாசுதேவ நாணயக்கார மக்களால் நிராகரிக்கப்பட்டவர்களை மீண்டும் நாடாளுமன்றம் கொண்டு வருவதாவது, மக்களின் ஆணையை அவமானப்படுத்தும் செயல் என அவர் குறிப்பிட்டார்.
இது குறித்து சட்ட நடவடிக்கை எடுப்பது குறித்து தமது கட்சி ஆராய்ந்து வருவதாகவும் அவர் தெரிவித்தார்.
Post a Comment