'அமெரிக்காவில் ஒரு இஸ்லாமியரை, ஜனாதிபதியாக தெரிவுசெய்ய அனுமதிக்க முடியாது'
கிறிஸ்த்துவ மதத்தினர் பெரும்பான்மையாக உள்ள அமெரிக்காவில் ஒரு இஸ்லாமியரை ஜனாதிபதியாக தெரிவு செய்ய அனுமதிக்க முடியாது என அந்நாட்டின் குடியரசு கட்சி வேட்பாளர் கூறியிருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
2017ம் ஆண்டில் நடைபெற உள்ள அமெரிக்க நாடாளுமன்ற தேர்தலில் குடியரசு கட்சியின் சார்பாக பென் கார்சன் என்பவர் வேட்பாளராக போட்டியிடுகிறார்.
அண்மையில் செய்தி நிறுவனம் ஒன்றிற்கு பேட்டி அளித்த இவர், அமெரிக்கா நாட்டின் உயரிய பொறுப்பில் ஒரு இஸ்லாமியரை நியமிக்க முடியாது. இதனை ஒருபோதும் தன்னால் ஏற்றுக்கொள்ள முடியாது என கருத்து கூறியுள்ளார்.
ஜனாதிபதி பதவிக்கு போட்டியிடும் டொனால்ட் ட்ரம்ப் என்ற தொழிலதிபர் சில தினங்களுக்கு முன்னர் ‘ஜனாதிபதி ஒபாமா ஒரு இஸ்லாமியர்’ என தவறுதலாக பிரச்சாரத்தில் கூறி சர்ச்சையை ஏற்படுத்தினர்.
இவரது கருத்துக்கு கண்டனங்கள் வலுக்கவே, தான் கூறிய கருத்திற்கு மன்னிப்பு கோருங்கள் என அவருக்கு எதிராக எதிர்க்கட்சியினர் எதிர்ப்பு தெரிவித்தனர்.
ஆனால், ஒபாமாவை காப்பாற்ற முயற்சி செய்வது என்னுடைய பணி அல்ல என கூறிய அவர் மன்னிப்பு கோர மறுத்துள்ளார்.
இதன் விளைவாகவே தற்போது பென் கார்சன் சர்ச்சைக்குரிய கருத்தை வெளியிட்டுள்ளார்.
அமெரிக்க நாட்டின் அரசியல் சாசனத்திற்கு முரணாக அந்நாட்டு ஜனாதிபதியின் மதநம்பிக்கை இருக்க கூடாது.
அமெரிக்க நாட்டிற்குள் ஏற்கனவே இஸ்லாமியர்கள் தொடர்பான கருத்து வேறுபாடுகள் நிலவி வரும் தருணத்தில் ஒரு இஸ்லாமியரை ஜனாதிபதியாக நியமிக்க கூடாது என பென் கார்சன் திட்டவட்டமாக கூறியுள்ளார்.
Muslim aatchi seydal ellamsariya muslim nadugalil madu maadu ellam open idu oru joak
ReplyDeleteபராக் ஒபாமா தனது இரண்டு தடவை ஆட்சிக்காலம் முடிந்தவுடன் அல்லது அவரின் வாழ்க்கையின் கடைசி காலத்திலாவது முஸ்லிமாகும் சாத்தியமே அதிகம் உள்ளது.சிலர் ஆட்சிக்காக பொறுத்திருப்பது.ரோம் ராஜ்ஜிய ஹர்கிலஸ் மன்னர் உதாரணம்.
ReplyDelete