முஸ்லிம் சமூகத்தின், இளம்வயது பாடசாலை அதிபர்
(எஸ்.அஷ்ரப்கான்)
திறந்த போட்டிப்பரீட்சை மூலம் இலங்கை கல்வி நிர்வாக சேவை (தரம்-lll) உத்தியோகத்தராக அக்கரைப்பற்றைச் சேர்ந்த ஏ.எம். முஹம்மத் றிஷாட் தெரிவுசெய்யப்பட்டு, களனி கல்வி வலயத்தின் பிரபல்யமான பாடசாலையான மல்வானை அல்- முபாறக் தேசிய பாடசாலையின் புதிய அதிபராக கடந்த 14.09.2015 திங்கட்கிழமை முதல் கடமையேற்றுக் கொண்டார்.
அச்சி முஹம்மது லைலா தம்பதிகளின் புதல்வரான இவர் தனது ஆரம்பக் கல்வியினை அக்கரைப்பற்று அல்-பாதிமியா வித்தியாலயத்திலும், உயர் கல்வியினை அஸ்-ஸிராஜ் மகா வித்தியாலயத்திலும் பயின்று, பேராதனை பல்கலைக்கழகத்தில் தனது பட்டப்படிப்பினை நிறைவு செய்தார்.
29 வயதான இவர் இளம் வயதில் அதிபராக நியமனம் பெற்றிருப்பதுடன், அக்கரைப்பற்று பிரதேசத்தில் சுமார் 25 வருடங்களுக்குப் பிறகு திறந்த போட்டிப்பரீட்சை மூலம் இலங்கை கல்வி நிர்வாக சேவைக்கு தெரிவு செய்யப்பட்ட ஒருவராகும். அகில இலங்கை ரீதியில் இப்பரீட்சைக்குத் தோற்றி 140 பேர் இலங்கை கல்வி நிர்வாக சேவை (தரம்-lll) தெரிவாகியிருந்தனர். இவர்களுள் 10 முஸ்லிம்களும், 20 தமிழர்களும் அடங்குவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Alhamdulillah
ReplyDelete