ஐலான் குர்தியும் + காலிப் குர்தியும், பதிலளிக்க வேண்டியவர்களும்
அஷ்ஷெய்க் எஸ்.எச்.எம்.பழீல் (நளீமி)
ஐலான் குர்தி (வயது 3), காலிப் குர்தி (வயது 5). துள்ளித்திரியும் பருவத்தில் கடலில் விழுந்து வபாத்தாகி அலைகளால் கரையில் ஒதுக்கப்பட்ட இரண்டு சிட்டுக்கள். மழலை ஐலானின் உடல் கடற்கரையில் ஒதுங்கி முகங்குப்புறப்படுத்துக் கொண்டிருப்பது போன்ற அந்தக் காட்சியைக் கண்ட, மனசாட்சி விழிப்புடன் இருக்கும் எவரது உள்ளமும் குலங்கியது, கதறியது.
ஜாஹிலிய்யாக் காலத்தில் பெண் குழந்தைகள் உயிருடன் மண்ணில் புதைக்கப்பட்டதைப் பற்றி அல்லாஹ் ''எந்தக் குற்றத்துக்காக அது கொல்லப்பட்டது என்று அந்த உயிருடன் புதைக்கப்பட்ட பெண் குழந்தை விசாரணைக்கு உள்ளாக்கப்படும் போது'' என்று குர்ஆனில் கூறுகிறான். அந்தப்பிள்ளைக்கு பேசும் ஆற்றல் வழங்கப்பட்டு ஏன் கொல்லப்பட்டாய் என்று அந்தப்பிள்ளையிடம் கேட்பான். தான் கொல்லப்படுவதற்கான காரணங்களையும் நபர்களையும் பற்றிக் கூறவேண்டும் என்றும் அதனுடைய வாயிலிருந்தே அநியாயக் காரர்கள் பற்றிய தகவல்கள் வெளிவரவேண்டும் என்றும் அல்லாஹ் எதிர்பார்ப்பான். அல்லாஹ்வுக்கு எல்லாம் தெரியும் என்றாலும் கோடான கோடி மக்கள் மஹ்ஷர் மைதானத்தில் விசாரணைக்காக நின்று கொண்டிருக்கையில் அந்தக்குழந்தை பேச ஆரம்பிக்கும். ஐலானும், காலிபும் அவர்களைச் சுமந்து பாலூட்டி சீராட்டி வளர்த்து பிள்ளைகள் பற்றி கனவுகளை வரித்துக் கொண்டு வாழ்ந்த அருமைத்தாயும் மறுமையில் சாட்சியமளிப்பார்கள்.
அவர்களுக்கு தம் நாட்டில் பாதுகாப்பிருக்கல்லை; தாம் வாழும் அரபு இஸ்லாமிய உலகிலும் பாதுகாப்பில்லை. கிறிஸ்தவ உலகிலாவது பாதுகாப்பிருக்கும் என நம்பிய பெற்றாரின் ஆலோசனையை தட்டிவிட்டு அபிப்பிராயம் சொல்லும் வயதில் ஐலானும் காலிபும் இருக்கவில்லை.
பாவம் பச்சிளம் பாலகர்கள், அவர்கள் அல்லாஹ்வின் நாட்டப்படி மரணித்துவிட்டாலும் அவர்களுக்கு நிகழ்ந்த
இந்த சோக முடிவுக்கு காரணமாக அமைந்தவர்கள் முதலில் சிரியாவை அணுங்குப்பிடிக்குள் இரும்புப் பிடிக்குள் வைத்திருக்கும் கொடுங்கோலன் பஷ்ஷாருல் அஸத்.
இரண்டாவது குற்றவாளி, புரட்சியானது பல்லாயிரம் உயிர்களைக் காவுகொள்ளும் என்று தெரிந்திருந்தும் போராடும் அபூபக்கர் பக்தாதி உள்ளிட்ட ஐ.எஸ்.தீவிரவாதிகள். கிளர்ச்சிக்கு நியாயங்கள் இருக்கலாம். ஆனால் அதனை மேற்கொள்பவர்களுக்கு இஸ்லாம் கூறும் குறைந்தபட்ச தகைமைகள் இருக்க வேண்டும். கையாளப்படும் அணுகு முறைகள் இஸ்லாம் அங்கீகரித்தவையாக இருக்க வேண்டும். ஆனால், அவற்றை தவிர்ந்து போராடும் கும்பல்தான் ஐ.எஸ் காரர்கள். குளிக்கப்போய் சேறு பூசியவர்கள். சட்டியிலிருந்த மக்களை அடுப்புக்குள் தள்ளியவர்கள். ஐலானின் சோக முடிவுக்கு நேரடியாகப் பதில் கூறவேண்டிய இரண்டாவது பொறுப்புதாரிகள்.
மூன்றாவதாக சிரியாவின் அயலிலுள்ள அரேபிய, இஸ்லாமிய நாடுகளது கதிரைகளில் அமர்ந்து ஆட்சிச் சுகம் அனுபவிக்கும் ஆட்சியாளர்கள். சிரியாவின் அகதிகளுக்கு இஸ்லாமிய நாடுகள் எதுவுமே ஒன்றுமே செய்யவில்லை என்று நாம் கூறவில்லை. செய்திருக்கிறார்கள். ஆனால், பொருளாதார உதவி, அகதிகளுக்கான இல்லிடவசதி மட்டுமல்ல இப்படியான ஐ.எஸ். கிளர்ச்சிகள் உருவாகுவதற்கான சூழ்நிலைகளைத் தோற்றுவித்தவர்கள் இந்த அரபு நாட்டு ஆட்சியாளர்கள்தான். எனவே ஐலான், காலிப் மட்டுமன்றி பல இலட்சம் அபலைகளுக்கு பதில் சொல்ல வேண்டியவர்கள் அவர்களும்தான்.
நான்காவது பொறுப்பாளர்கள் மேற்குலக ஆட்சியாளர்களாவர். பெற்றோலிய வளத்தை சுரண்டும் நோக்கிலும் ஆயுத சந்தைகளைத் தக்கவைத்துக் கொள்ளவும் மிதவாத இஸ்லாமிய எழுச்சிக்கு அணை போடவும் முயற்சிக்கும் மேற்குலகம் இஸ்லாமிய நாடுகளிலுள்ள பொதுமக்களை பலிக்கடாக்களாக்கி அங்குள்ள தீவிரவாதத்துக்கு நேரடியாகவும் மறைமுகைமாகவும் துணை போகின்றன.
எனவே ஐலான் குர்தி போன்ற பாலகர்கள் மறுமையில் வழக்காடும் போது இவர்கள் அனைவரும் கூனிக் குறுகி நின்று திரு திருவென முழித்து பதிலளிக்க வேண்டியிருக்கும்.
Masha Allah,,, This brother knows the knowledge of UNSEEN...
ReplyDeleteHe knows very well, from whom and which order Allah is going to Question about this incident.
May Allah guide us in the path of Muhammed (sal) and his companions and save us from other manhajs.