Header Ads



"பாலியல் குற்றவாளி, கொலைகாரர்களை தூக்கிலிடு"

 சிறுவர் மற்றும் பெண்கள் மீதான துஷ்­பி­ர­யோகம், கொலை­க­ளுக்கு எதி­ர்ப்பு தெரிவித்தும் அவ்வாறான குற்றவாளிகளுக்கு மரணதண்­டனை வழங்குமாறு வலி­யு­றுத்தியும் ஐக்­கிய சமா­தான முன்­னணி ஏற்­பாட்டில் கவ­ன­யீர்ப்புப் போராட்டம் இன்று காலை 10 மணிக்கு கொழும்பு புதுக்­கடை நீதி­மன்ற வளாக முன்­றலில் நடை­பெ­ற்றது.

'நேற்று வித்தியா.. இன்று சேயா.. நாளை..?" 'சிறுவர் மற்றும் பெண்கள் துஷ்­பி­ர­யோகத்துக்கு மரண தண்டனை வழங்கு.!" 'பாலியல் குற்றவாளிகளை கொலைகாரர்களை தூக்கிலிடு" போன்ற வாசகங்கள் அடங்கிய பதாதைகளை ஏந்திய வண்ணம் கவ­ன­யீர்ப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

நாட்டில் நாளுக்கு நாள் சிறுவர் துஷ்­பி­ர­யோகம், பெண்­க­ளுக்கு எதி­ரான பாலியல் வன்­மு­றைகள் அதி­க­ரித்துச் செல்­வ­தோடு கொலை­களும் அதி­க­ரித்­துள்ளதாகவும் இதற்­கெ­தி­ரான தண்­ட­னைகள் கடு­மை­யாக்­கப்­பட வேண்டும் எனவும் ஐக்­கிய சமா­தான முன்­ன­ணியின் தலைவர் மொஹமட் மிப்லார் தெரிவித்தார்.

தண்டனை வழங்கப்படுவதில் உள்ள சட்ட குறைப்பாடுகள் காரணமாகவே இவ்வாறான துஷ்பிரயோகங்கள் தொடர்ச்சியாக நடைபெற்ற வண்ணம் உள்ளதாகவும் கடந்த 4,5 வருடங்களில் இக்கொடூர செயல்கள் அதிகரித்துள்ளதாகவும் தெரிவித்தார்.

இவ்வாறான கொடூர செயல்கள் இடம்பெறுவதற்கு போதைப்பொருள் பாவனையும் ஒரு முக்கிய காரணமாகும். இது போன்ற சம்பவங்கள் தொடர்ந்து இடம்பெறாமல் இருப்பதற்கு பொலிஸ் அதிகாரிகளும் நீதிவான்களும் ஒத்துழைப்பு வழங்கவேண்டும் என மேலும் தெரிவித்தார்.

இதேவேளை போராட்டத்தில் கலந்துகொண்டிருந்த பாராளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான், நல்லாட்சிக் காலத்தில் இதுபோன்ற கொடூரங்கள் மேலும் இடம்பெறாமல் இருப்பதற்கு புதிய சட்டம் பாராளுமன்றத்தில் கொண்டு வரப்படப்பட வேண்டும் என தெரிவித்தார்.

போராட்டத்தின் பின்னர் நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக்ஷவிடம் கோரிக்கைகள் அடங்கிய மனு கையளிக்கப்பட்டது.


2 comments:

Powered by Blogger.