Header Ads



அமைச்சுப் பதவிகள் பெறாத சுதந்திர கட்சியினர், எதிர்கட்சி வரிசையில் அமரலாம் - மைத்திரி

தற்போதைய அரசாங்கத்தில் அமைச்சர் பதவிகளை பெற்றுக்கொள்ளாத ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள், எதிரணியில் அமர்வதற்கும் எதிரணி குழுவாக செயற்படுவதற்கும் எவ்விதமான தடைகளும் இல்லை என்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்ததாக தெரிவிக்கப்படுகின்றது. 

ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியை பிரதிநிதித்துவப்படுத்தும் நாடாளுமன்ற உறுப்பினர் 29 பேர், ஜனாதிபதியை  செவ்வாய்க்கிழமை (15) சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்தினர். இதன் போதே இவ்வாறு அனுமதியளிக்கப்பட்டதாக கட்சியின் பேச்சாளர் தெரிவித்தார். 

No comments

Powered by Blogger.