Header Ads



சவூதி அரேபிய மன்னருக்கு, ஜேர்மனியிடமிருந்து சவால்

ஜேர்மனியில் உள்ள இஸ்லாமிய அகதிகள் தொழுகை நடத்த 200 மசூதிகள் கட்ட நிதியுதவி அளிக்க தயார் என்ற சவுதி அரேபியாவின் அறிவிப்பிற்கு ஜேர்மனி அரசு பதிலடி கொடுத்துள்ளது.

ஜேர்மனியில் குடியேற வரும் அகதிகளின் எண்ணிக்கை நடப்பாண்டில் மட்டும் 80 ஆயிரத்திற்கும் அதிகமாக அதிகரித்து வருகிறது.

குறிப்பாக, சிரியா நாட்டிலிருந்து வரும் இஸ்லாமிய அகதிகளின் எண்ணிக்கை கடந்த ஆண்டுகளை விட கூடுதலாகவே உள்ளது.

இந்நிலையில், இஸ்லாமிய அகதிகள் தொழுகை நடத்துவதற்கு ஜேர்மனியில் 200 மசூதிகள் கட்டித்தர நிதியுதவி அளிக்க தயாராக உள்ளதாக சவுதி அரேபிய மன்னரான சல்மான் சில தினங்களுக்கு முன் அறிவிப்பு வெளியிட்டார்.

இந்த அறிவிப்பிற்கு ஜேர்மனி அரசியல்வாதிகள் கடும் கண்டனங்களை தெரிவித்துள்ளனர்.

சான்சலர் ஏஞ்சிலா மெர்க்கலின் கூட்டணி கட்சியில் உள்ள Andrea Scheuer என்பவர் வெளியிட்ட செய்தியில், ஜேர்மனிக்கு உதவி செய்கிறேன் என்ற பெயரில் இந்நாட்டை இழிவுப்படுத்த சவுதி முயற்சி செய்கிறது.

ஜேர்மனியில் 200 மசூதிகள் எழுப்புவதால் மட்டும் இஸ்லாமிய சகோதரத்தன்மையை ஏற்படுத்திவிட முடியாது. சவுதியின் இந்த அறிவிப்பு ஜேர்மனி நாட்டின் வெளியுறவு கொள்கைகளுக்கு எதிராக உள்ளது.

ஜேர்மனி நாட்டிற்கு உண்மையில் உதவி செய்ய சவுதி அரேபியா எண்ணினால், ஜேர்மனியில் உள்ள சிரியா அகதிகளில் ஒரு பகுதியினருக்கு அடைக்கலம் அளிக்க சவுதி மன்னர் முன்வர வேண்டும் என Andrea Scheuer தெரிவித்துள்ளார்.

ஸ்டீபன் மேயர் என்ற அரசு செய்தி தொடர்பாளர் கூறுகையில், சவுதி அரேபியா அரசிடமிருந்து நிதியை பெறும் நிலையில் ஜேர்மனி அரசு இல்லை என வெளிப்படையாக கருத்து தெரிவித்துள்ளார்.

குற்றவாளிகளின் கை, கால், தலைகளை வெட்டியும், சவுக்கடி மற்றும் கல்லால் அடித்து கொல்லும் கொடூர தண்டனைகளை விதிக்கும் சவுதி அரேபியா போன்ற நாட்டிடமிருந்து நிதியுதவி பெற வேண்டிய அவசியம் இல்லை என ஜேர்மனியில் வெளியாகும் பத்திரிகைகள் காரசாரமாக செய்திகளை வெளியிட்டுள்ளன.

4 comments:

  1. சரியான பதிலடி

    ReplyDelete
  2. இந்த கட்டுரையில் உள்ளவைகள் உண்மையென்றால் இஸ்லாத்தை பற்றி மாற்றுமதத்தினர் படும் கேவலமாக விமர்சிக்க வாய்ப்புள்ளது.
    1. முஸ்ஸீம்களின் கொலை வெறி தாக்குதல்களிலிருந்து தப்பித்துக்கொள்ள முஸ்ஸீம்கள் கிறிஸ்தவ நாடுகளுக்குள் தஞ்சம் புகுதல்.
    2. அகதிகளாக போகும் முஸ்லீமகளுக்கு அடிப்படை வசதிகளை ஏற்படுத்திக் கொடுக்கவேண்டியது கிறிஸ்தவ நாடுகளின் பொறுப்பு என்று உலக முஸ்லீம்கள் கருதுதல்.
    3. ஜேர்மனிக்கு போகும் முஸ்லீம்கள் பன்றி இறைச்சியை சாப்பிட்டு சாராயத்தை குடித்தாலும் பரவாயில்லை தொழுகைக்கு பள்ளிவாசல்களை மட்டும் சவுதி அரசு கட்டிக்கொடுக்கும்.
    4. ஐரோப்பாவுக்குள் இஸ்லாத்தை பரப்புவதற்காக சவுதி போடும் நாடகமா IsIs?
    5. இப்பொழுது நானும் ஷீஆக்காரன் என்ற பட்டத்தை பெறுவேனா என்று பொறுத்திருந்து பார்க்கிறேன்.

    ReplyDelete
  3. சபாஸ் Andrea Scheuer சரியான செருப்படி

    ReplyDelete
  4. May Allah Bless King Salaman for His Good Deeds Toward Spreading Islam

    ReplyDelete

Powered by Blogger.