பல அமைச்சுக்களில் மாற்றம், துறைகளை நிர்ணயிப்பதில் குழப்ப நிலை..!
முக்கிய பல அமைச்சுக்களின் துறைகளில் பாரியளவில் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
அமைச்சுக்களுக்கான துறைகளை வர்த்தமானியில் அறிவிப்பதற்கான ஆவணத் தயாரிப்பு பணிகள் பூர்த்தியாகும் நிலையை எட்டியுள்ளது.
இந்த ஆவணத்தின் அடிப்படையில் சில மிக முக்கியமான அமைச்சுக்களின் துறைகளில் பாரிய மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன.
நிதி, கொள்ளைத் திட்டமிடல், வெளிவிவகாரம், பெருந்தெருக்கள், விமான சேவைகள், பெருந்தோட்டத்துறை உள்ளிட்ட அமைச்சுக்களின் துறைகளில் பாரிய மாற்றம் செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
இந்த அமைச்சுக்களுக்கு கடந்த காலங்களில் வழங்கப்பட்டிருந்த துறைகளில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
அமைச்சுக்களுக்கான துறைகள் தொடர்பிலான வர்த்தமானி அறிவித்தல் கடந்த வாரமே வெளியிடப்படவிருந்த போதிலும் அந்த அறிவித்தல்கள் வெளியிடப்படவில்லை.
துறைகளை நிர்ணயிப்பதில் ஏற்பட்ட குழப்ப நிலைமை காரணமாக, துறைகளை நிர்ணயிக்கும் ஆவணத்தை தயாரிப்பதற்கு கால தாமதம் ஏற்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது.
எனினும் விரைவில் அமைச்சுக்களுக்கான துறைகளை அறிவிக்கும் விசேட வர்த்தமானி அறிவித்தல் வெளியிப்பட உள்ளது.
Post a Comment