Header Ads



வசீம் தாஜூடீனின் ஜனாஸா, மீண்டும் நல்லடக்கம்

ரகர் வீரர் வசீம் தாஜூடீனின் சடலத்தை நல்லடக்கம் செய்ய நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.

கொழும்பு மேலதிக நீதவான் நிசாந்த பீரிஸ், புலனாய்வுப் பிரிவினருக்கு இந்த அனுமதியை வழங்கியுள்ளார்.

தாஜூடீனின் சடலம் குறித்த விசாரணைகள் பூர்த்தியாகியுள்ளதாகவும் நல்லடக்கம் செய்ய அனுமதிக்குமாறும் புலனாய்வுப் பிரிவினர் நீதிமன்றில் கோரியுள்ளனர்.

கடந்த மாதம் 10ம் திகதி தாஜூடீனின் சடலம் தோண்டி எடுக்கப்பட்டிருந்தது.

சடலத்தை எதிர்வரும் 18ம் திகதி மீளவும் நல்லடக்கம் செய்ய அவரது உறவினர்களிடம் ஒப்படைக்க புலனாய்வுப் பிரிவினர் தீர்மானித்துள்ளனர்.

தாஜூடீனின் மூத்த சகோதரி பாதிமா அயிசா தாஜூடீனிடம் சடலம் ஒப்படைக்கப்படவுள்ளது.

சடலத்தை நல்லடக்கம் செய்ய தேவையான வசதிகளை செய்து கொடுக்குமாறு பள்ளிவாசலிடம் நீதவான் கோரியுள்ளார்.

2 comments:

  1. Thajudeen valaku beach hotelalil thirppu ahivitathu r and m sandippu pavom muslimgal election drama end

    ReplyDelete
  2. கடந்த அரசாங்கத்தின் அதிக்க வெறிக்காக படுகொலை செய்யப்பட்டார் வசீம்.

    இந்த அரசாங்கத்தின் தேர்தல் வெற்றிக்காக பலிக்கடா ஆக்கப்பட்டது வசீமின் ஜனாஸா.

    ReplyDelete

Powered by Blogger.