தமிழ் கவிதை எழுதுபவர்களின் கவனத்திற்கு..!
கொழும்பு பண்டாரநாயக்க ஞாபகார்த்த மண்டபத்தில் 18-09.2015 அன்று ஆரம்பமான கொழும்பு சர்வதேச புத்தகக் கண்காட்சி அமையப் பெற்ற வளாகத்தில் ஒரு பகுதியில் நிறுவப்ப்பட்டிருக்கும் கவிதைச்சுவரில் கண்காட்சி காண வரும் எவரும் தமக்கு விருப்பமான மொழியில் கவிதை எழுதி அச்சுவரில் பொருத்தி வரலாம்.
கடந்த இரண்டு வருடங்களாக வழமையாக அமைக்கப்பெறும் இக்கவிதைச் சுவரில் சிங்கள கவிஞர்கள் பெரும் தொகையினர் தம் கவிதைகளைப் பொருத்தி வருகிறார்கள். அக்கவிதைகளில் சிறந்தவை தெரிவுச் செய்து இலங்கை புத்தகப் பதிப்பகங்கள் சங்கம் அக்கவிதைகளை ஒரு நூலாக வெளிடுவது வழக்கம்.
நம் தமிழ்க் கவிஞர்களுக்கு அதையிட்டு பரவலான தகவல் கிடைக்கப் பெறவில்லை
அதன் காரணமாக இந்த அறிவித்தல்.
புத்தகக் கண்காட்சிக்கு செல்லும் தமிழ்ப் பேசும் கவிஞர்கள் தம் கவிதைகளை அஙகு பொருத்தி வரலாம். அவ்வாறாக பொருத்தி வரும். கவிஞர்கள் தம் கவிதைப் பிரதிகளில் அவர் தம் விலாசம், தொலைப்பேசி இலக்கம் போன்ற விபரங்களை ஆங்கிலத்தில் எழுதி வருவது நல்லது.
கடந்த இருவருடங்கள மேற்படி சுவரில் கணிசமான அளவில் சிங்கள கவிஞர்கள் எழுதி வருவதால் அக்கவிதைகளில் சிறந்த தேர்ந்தெடுத்து இலங்கை புத்தகப் பதிப்பாளர்கள் சங்கம் அக்கவிதைகளை ஒரு நூலாக வெளிடுவது வழக்கம். ஆனால் ஒரு நூலாக வெளியிடும் அளவுக்கு தமிழ்க்கவிதைகள் அச்சுவருக்கு சேர்வதில்லை என அச்சுவருக்கு பொறுப்பான இளஞர்கள்கள் எமக்கு தெரிவித்தார்கள்.
ஆகவே கண்காட்சிக்குச் செல்லும் தமிழ்க்கவிஞர்களே!
உங்கள் கவிதைக்காக அச்சுவர் காத்துக்கொண்டிருக்கிறது.
நன்றி. பெறுமதியான தகவல்.
ReplyDelete