ரணில் விக்கிரமசிங்கவுக்கு, எதிராக ஆர்ப்பாட்டம்
இலங்கை பிரதமரின் இந்திய வருகையைக் கண்டித்து தஞ்சாவூரில் பல்வேறு கட்சிகள், இயக்கங்கள் சார்பில் திங்கட்கிழமை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இலங்கையில் நடந்த இன அழிப்புப் படுகொலை குறித்தோ, தமிழர்களை அனாதைகளாக விரட்டி பாதுகாக்கப்பட்ட பகுதிக்கு வரவழைத்து கொத்துக் கொத்தாகக் கொன்றது பற்றியோ, தமிழர்களை முள்வேலி முகாம்களில் அடைத்து வைத்து அவர்களுடைய வாழ்விடங்களில் இராணுவ முகாம்களைச் சிங்களவர்கள் அமைத்தது குறித்தோ தற்போதைய இலங்கை பிரதமர் ரணில் விக்கிரமசிங்க அப்போதைய எதிர்க் கட்சித் தலைவர் என்ற முறையிலும் ஜனநாயக மனித உரிமை மீறல் என்றோ, தன்நாட்டு மக்கள்தான் தமிழர்கள் என்ற அக்கறை எதுவுமில்லாமல் வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தவர் என்பதாலும் இலங்கையில் தமிழர்களுக்கு எதிரான நிலைப்பாட்டைக் கடைப்பிடித்து வருவதாலும் அவர் இந்தியா வருவதைக் கண்டித்தும் முழக்கங்கள் எழுப்பப்பட்டன.
தமிழர் தேசிய முன்னணி பொதுச் செயலாளர் அய்யனாபுரம் சி.முருகேசன் தலைமை வகித்தார். இந்திய கம்யூனிஸ்ட் மாவட்டப் பொருளாளர் என். பாலசுப்பிரமணியன், தமிழ்த் தேசிய பேரியக்க மாவட்டச் செயலர் குழ பால்ராசு, இந்திய ஜனநாயகக் கட்சியின் மாவட்டத் தலைவர் கே. முத்துக்கிருஷ்ணன், தஞ்சாவூர் மாவட்ட மீத்தேன் திட்ட எதிர்ப்புக் கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளர் கோ.ஜய்சங்கர், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி எம்.எல்.ஏ., மக்கள் விடுதலை மாநிலக் குழு உறுப்பினர் இரா அருணாச்சலம் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். (தினமணி)
pawam
ReplyDelete