Header Ads



மைத்திரிக்கு உதவிய ஹூசெய்ன்

-gtn-

யுத்தக் குற்றவாளிகளின் பெயர் பட்டியலில் தற்போதைய இலங்கை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் பெயரும் உள்ளடக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையினால் இலங்கை தொடர்பிலான விசாரணை அறிக்கையில் யுத்தக் குற்றச் செயல்களில் ஈடுபட்டவர்களின் பெயர் விபரங்கள் முன்னதாக உள்ளடக்கப்பட்டிருந்தது எனத் தெரிவிக்கப்படுகிறது.

இந்தப் பெயர் பட்டியலில் தற்போதைய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் பெயரும் உள்ளடக்க்பபட்ட காரணத்தினால், பெயர் விபரங்கள் வெளியிடப்படவில்லை.

யுத்தக் குற்றச் செயல்களுடன் தொடர்புடைய 20க்கும் மேற்பட்டவர்களின் பெயர் விபரங்கள் அறிக்கையில் உள்ளடக்கப்பட்டிருந்ததாகத் தெரிவிக்கப்படுகிறது.

யுத்தக் குற்றச் செயல்களில் ஈடுபட்டவர்கள் அதற்காக கட்டளைகளை பிறப்பித்தவர்கள் பெயர் விபரங்கள் உள்ளடக்கப்பட்டிருந்ததாகத் தெரிவிக்கப்படுகிறது.

முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோதபாய ராஜபக்ஸ உள்ளிட்ட முக்கியஸ்தர்கள் பெயர்கள் இதில் உள்ளடக்கப்பட்டிருந்ததாகத் தெரிவிக்கப்படுகிறது.

இறுதிக் கட்ட யுத்தத்தின் போது மைத்திரிபால சிறிசேன பதில் பாதுகாப்பு அமைச்சராக கடமையாற்றியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்தக் காலப்பகுதியிலேயே அதிகளவான குற்றச் செயல்கள் இடம்பெற்றதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

மைத்திரிபால சிறிசேனவின் பெயர் உள்ளடக்கப்பட்டால் உள்நாட்டு ரீதியிலும் வெளிநாட்டு ரீதியிலும் ஏற்படக் கூடிய சிக்கல்களை தவிர்க்கும் நோக்கில் இரு தரப்பின் இணக்கப்பாட்டின் அடிப்படையில், பெயர்கள் நீக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

யுத்தக் குற்றச் செயல்களில் ஈடுபட்டவர்களின் பெயர் விபரங்கள் உள்ளடக்கப்படாமை குறித்து ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன வெளியிட்ட கருத்துக்கும், ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையின் ஆணையளார் சயிட் ஹல் ஹூசெய்னின் கருத்துக்கும் இடையில் முரண்பாட்டு நிலைமை காணப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

குற்றச் செயல்களுக்கு பொறுப்பு கூறுதல் மற்றும் நல்லிணக்கத்தை ஏற்படுத்தல் ஆகியவற்றில் புதிய அரசாங்கத்தின் முனைப்புக்கள் காரணமாக யுத்தக் குற்றச் செயல்களில் ஈடுபட்டவர்களின் பெயர் விபரங்கள் வெளியிடப்படவில்லை எனவும், முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ ஆட்சியில் இருந்திருந்தால் பெயர் விபரங்கள் வெளியிடப்பட்டிருக்கும் எனவும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்திருந்தார்.

யுத்தக் குற்றச் செயல்கள் மற்றும் மனிதாபிமான சட்ட மீறல்களில் ஈடுபட்ட தரப்பினர் தொடர்பில் விரிவாக ஆராய்ந்து அதற்கான தீர்வுகளை வழங்கும் நோக்கில் பெயர் விபரங்கள் வெளியிடப்படவில்லை என ஹல் ஹூசெய்ன் தெரிவித்துள்ளார்.

No comments

Powered by Blogger.