கட்டார் வாழ் இலங்கையருக்கான, ஹஜ் பெருநாள் விளையாட்டுப் போட்டி..!
புனித ஹஜ் பெருநாளை முன்னிட்டு SLDC Qatar அமைப்பினால் மிகச் சிறப்பாக ஏற்பாடு செய்யப்பட்டுள்ள ஈத் விஷேட நிகழ்ச்சிகள் எதிர்வரும் வியாழக் கிழமை 24.09.2015 பி.ப 01.00 மணி தொடக்கம் ஆஐஊ விளையாட்டு அரங்கம், உம் சயிட் இல் சயிட் நடைபெறும்.
இந் நிகழ்ச்சி விளையாட்டு மற்றும் பொழுது போக்கு நிகழ்சிகளாக அமையும். சிறுவர்கள், பெண்கள், ஆண்கள் என வரையறுக்கப்பட்டு முற்றிலும் இஸ்லாமிய சூழலில் நிகழ்சிகள் பூத்து மணம் வீச இருப்பது குறிப்பிடத்தக்கது.
எனவே ஈகைத் திருநாளில் நமது தாய் நாட்டு சொந்தங்களுடன் சங்கமித்து வஞ்சம் மறந்து செஞ்சம் நிறைத்து விஞ்சி விளையாட உங்கள் பதிவுகளை முன்கூட்டியே 33448886 / 66802028 ஆகிய தொலைபேசி இலக்கங்களினூடாக உறுதி செய்து கொள்ளுங்கள்.
சிற்றுண்டிகள் மற்றும் இரவு உணவு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.
தகவல். யு.எல். அலி அஷ்ரஃப்
Post a Comment