Header Ads



பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் முக்கியத்துவமிக்க பேச்சு..!

''குற்றம் இழைக்கப்பட்டுள்ளதா என ஆராய்ந்து பார்க்குமாறே ஐ.நா கூறியுள்ளது” உண்மையை தெரிந்து பொறுப்புடன் செயற்படவேண்டும்;; ஜே.ஆர். ஜேயவர்தனவின் நினைவு தின நிகழ்வு கொழும்பு ஜெயவர்தன கலாசார நிலையத்தில் நடைபெற்றது. அமைச்சர்கள் முக்கியஸ்தர்கள் பலரும் கலந்து கொண்ட இந்நிகழ்வில் உரையாற்றும் போதே பிரதமர் இவ்வாறு தெரிவித்தார்.

சபாநாயகர் கரு ஜயசூரிய, பிரதி சபாநாயகர் திலங்க சுமதிபால, அமைச்சர்கள் கயந்த கருணாதிலக்க, விஜயதாச ராஜபக்ஷ ஜோன் அமரதுங்க உட்பட அமைச்சர்கள் பிரதியமைச்சர்கள் பலரும் கலந்து கொண்ட இந்த நிகழ்வில் தொடர்ந்தும் உரையாற்றிய பிரதமர்,

மாக்ஸிசவாத பொருளாதார நிலைமை இருந்த போது ஜே.ஆர். புதிய வர்த்தக பொருளாதாரத்தை அறிமுகப்படுத்தி இலங்கையை புதிய பாதையில் முன்னேற்றிச் சென்றார். அவர் மகாவலியை ஆரம்பித்த போது எமக்கு அரசியல் தன்னிறைவு காண முடிந்தது. அதேபோன்று இப்போதும் அளவுக்கு மிஞ்சிய அரிசி எம்மிடமுள்ளது. இவ்வாறு சமூக மாற்றம் ஏற்பட்டுள்ளதை குறிப்பிடவிரும்புகிறேன். தற்போது உலகில் முழுமையாக வர்த்தக பொருளாதாரமே நடைமுறையிலு ள்ளது. இதற்கிணங்க 38 வருடங்களின் பின்னர் நாமும் மாற்றங்களை ஏற்படுத்தி பொருளாதாரத்தை முன்னேற்ற வாய்ப்பு கிடைத்துள்ளது.

அபிவிருத்தி உலகில் நாம் விரைவாக முன்னேற வேண்டியுள்ளது. ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவும் நானும் நாட்டில் மாற்றத்தை ஏற்படுத்தி நாட்டை முன்னோக்கிக் கொண்டு செல்வதில் பாரிய செயற்பாடுகளை மேற்கொண்டு வருகிறோம். இத்தகைய சூழ்நிலையில் அரசியல் பற்றி குறிப்பிடும் போது நாம் ஜே.ஆரிடம் இருந்து பெற்றுக் கொண்ட அவரது முன்மாதிரிகையை நினைவு கூர வேண்டும் எனினும் அரசி யல் பலம் கிடைத்தால் அதனை வைத்துக் கொண்டு தனியாக அரசாங்கத்தை அமைத்திருக்கலாமே என்றும் சிலர் கூறுகின்றனர்.

1985 ல் பயங்கரவாத யுத்தம் ஆரம்பித்த போது சர்வதேச விசாரணை நடத்த வேண்டுமென கூறப்பட்டது. திருமதி குணநாயகமும் இது பற்றி கருத்துத் தெரிவித்திருந்தார். எனினும் ஜே.ஆர். அதற்கு இடமளிக்கவில்லை தேசிய விசாரணையே அவர் வலியுறுத்தினார்.

மனித உரிமை ஆணைக்குழுவுக்கு எமக்குள்ள சுயாதிபத்தியத்தை மாற்ற முடியாது என்பதை அவர் சுட்டிக்காட்டினார்.

ஜனாதிபதி பிரேமதாசவுக்கும் இதே போன்ற பிரச்சினை இருந்தது. அப்போது மஹிந்த ராஜபக்ஷ போன்றோர் சர்வதேச விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று கூறினர். எனினும் பிரேமதாச சர்வதேச விசாரணைக்கு இடமளிக்கப் போவதில்லை என்றே குறிப்பிட்டார். தேசிய ரீதியான விசாரணை நடத்த வேண்டுமென்பதே அவரது கோரிக்கையாக இருந்தது.

நாம் ஒருபோதும் சர்வதேச விசாரணைக்கு இணக்கம் தெரிவிக்கவில்லை.பின்னர் பாரிய பிரச்சினைகளை எதிர்கொள்ள நேரிட்டது. தேசிய ரீதியிலான விசாரணை, அதனையடுத்து கூட்டு அறிக்கை என தொடர்ந்தது. எதையும் சரி - பிழை என நான் குறிப்பிட முன்வரவில்லை. எனினும் இரு பிரதான கட்சிகளும் இணைந்து எம்மால் எதையாவது செய்ய முடியும் என்ற நம்பிக்கை உள்ளது.

எனினும் நாம் ஒன்றைக் குறிப்பிட வேண்டும் ஜெனீவா மனித உரிமை ஆணையாளரின் அறிக்கை முன்வைக்கப் படும் போது அதில் சர்வதேச விசாரணை பற்றி குறிப்பிடப்படவில்லை.

இந்த நிலையில் எமக்கு இன்னும் இரண்டு அறிக்கைகளை பெற்றுக் கொள்ள வேண்டியுள்ளதால் கடந்த அரசாங்கத்தினால் நியமிக்கப்பட்ட நல்லிணக்க ஆணைக்குழுவின் அறிக்கையும் மனித உரிமை ஆணைக்குழுவின் அறிக்கையும் பெற்றுக் கொள்ள வேண்டியுள்ளது. இவை கிடைத்ததும் நாம் எமது பதிலை அறிவிக்க முடியும்.

எனினும் தற்போது சர்வதேச நாடுகள் எமக்கு ஒத்துழைப்பு வழங்க முன்வந்துள்ளன. எமது அரசாங்கத்தின் மீது வைத்துள்ள நம்பிக்கை காரணமாக எம்மோடுகை கோர்த்துச் செயற்பட முன்வந்துள்ளன. இந்த நம்பிக்கையுடன் நாம் முன்னோக்கிப் பயணிக்க முடியும்.

இந்த நிலையில் நான் ஊடகங்களுக்கு ஒன்றைக் குறிப்பிட வேண்டும். உண்மையைத் தெரிந்து கொண்டு பொறுப்புடன் செயற்பட வேண்டும். ‘ஹைபிரிட்” என்றால் என்ன என்பதைத் தோண்டுவதை விடுத்து தேசியத்தைப் பாதுகாப்பதில் கவனமெடுங்கள்” என நான் கேட்டுக் கொள்கின்றேன்.

மீண்டும் இந்த நாட்டில் இனவாதத் திற்குத் தூபமிட வேண்டாம் என்பதை நான் வலியுறுத்திக் கூறுகின்றேன். சிலர் இன்டர்பிரிட்டி’ எனக் குறிப்பிடுகின்றனர். இன்டர்பிரிட்டி என்பது குற்றமிழைத்தவர்க ளுக்கு மன்னிப்பு வழங்குவது. நான் எழுப்பும் கேள்வி, ஐ.நா. அறிக்கை குற்றம் இடம்பெற்றுள்ளதா என்ற தொனியிலேயே வந்துள்ளது.

எனினும் நம்மவர்களோ நாம் குற்றமிழைத்துள்ளோம் எம்மைப் பாதுகாத்துக் கொள்ள சட்டம் கொண்டு வரப்பட வேண்டும் என்ற தொனி யில் கருத்துக்களை முன்வைக்கின்றனர்.

ஐ.நா. அறிக்கையில் எங்குமே குற்றம் இடம்பெற்றுள்ளது எனக்குறிப்பிடப் படவில்லை. யுத்தக் குற்றம் இடம்பெற்றுள்ளதாகவும் கூறப்படவில்லை. அவ்வாறு நடந்துள்ளதா என ஆராய்ந்து பார்க்கும் படியே கூறப்பட்டுள்ளது.

எனினும் சிலர் முந்திக்கொண்டு நாம் குற்றம் இழைத்துள்ளோம். மன்னிப்பளியு ங்கள் பாதுகாப்புத் தாருங்கள் எனக் கூற விளைகின்றனர். இவ்வாறு மோசமாக எழுதும் ஊடகங்கள் பற்றி என்ன சொல்வது நாட்டின் பாதுகாப்பை இல்லா தொழுக்கவா இவ்வாறு செயல் படுகின்aர்கள் எனக் கேட்க விரும்புகிறேன்.

இலங்கை - இந்திய ஒப்பந்தத்தின் போதும் இது போன்றே சிலர் செயற் பட்டனர். எவரும் இந்த நாட்டை மோசமான சூழ்நிலைக்கு இழுத்துச் செல்ல முயற்சிக்க வேண்டாம். முன்பு இது போன்று தெரிவிக்கவில்லை. இப்போது இதை அரசியலாக்க முனைகின்றனர். இதனை நான் ஊடகங்களுக்கு வலியுறுத்திக் கூற விரும்புகிறேன். ஜே. ஆர். ஜெயவர்தனவுக்கு செய்தது போன்று இப்போது செய்ய வர வேண்டாம். அனைவரும் நெருக்கடிக்குள் உள்ளாக்கி முன்னாள் ஜனாதிபதியையும் நெருக்கடிக்குள் தள்ளிவிட்டனர்.

நாம் இப்போது முழு நாட்டையும் காப்பாற்றி வைத்துள்ளோம். இந்த நாட்டை முன்னோக்கிக் கட்டயெழுப்ப ஊடகங்கள் எமக்கு முழுமையான பங்களிப்பை வழங்க வேண்டும்.

ஜே. ஆர். ஜெயவர்தன மிகுந்த பொறுமையுடன் செயற்பட்டவர் அனைத்துச் சேறு பூசல்களையும் தாங்கிச் செயற்பட்டவர் அவர். எனினும் எவரும் இனி தாய் நாட்டின் மீது சேறு பூச இடமளிக்கப் போவதில்லை.

எமக்கென்று தேசியம் இருக்குமானால் பாராளுமன்றத்தின் கொள்கைகள் இருக்குமானால் நாம் அதனைக் கொண்டு செயற்படுவோம். இதுவும் ஜே. ஆரிடம் இருநது கற்றுக்கொள்ள வேண்டியவை,

நாம் நாட்டை அடிமைப்படுத்த இடமளிக்க முடியாது. நம் நாட்டைப் பாதுகாத்து ஒவ்வொன்றிலிருந்தும் நாட்டிற்கான நன்மைகளை எப்படி வெற்றிக்கொள்வது என்பது பற்றி சிந்திப்போம். அதைவிடுத்து பண்டிதத் தனமாக செயற்படுவதை தவிர்ப்பது நல்லது என்றும் பிரதமர் மேலும் தெரிவித்தார்

No comments

Powered by Blogger.