கருணா சிக்குவாரா..?
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் சிரேஸ்ட பாராளுமன்ற உறுப்பினர் அமரர் ஜோசப் பரராஜசிங்கம் படுகொலை வழக்கில் முன்னாள் பிரதி அமைச்சரும், புலிகளின் முன்னாள் சிரேஸ்ட தளபதிகளில் ஒருவருமான விநாயகமூர்த்தி முரளீதரன் எனப்படும் கருணர் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
கருணாஇந்தப் படுகொலையை செய்திருக்கலாம் என சந்தேகம் வெளியிடப்பட்டுள்ளது. இது தொடர்பில் குற்றப் புலனாய்வுப் பிரிவினர் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.2005ம் ஆண்டு நத்தார் பண்டிகையன்று, நத்தார் ஆராதரனைகளில் கலந்து கொண்டிருந்த போது துப்பாக்கிச் சூட்டு சம்பவம் நடத்தப்பட்டிருந்தது.
எதிர்வரும் நாட்களில் கருணாவை குற்ற விசாரணைப் பிரிவிற்கு அழைத்து கொலை குறித்து விசாரணை நடத்தப்பட உள்ளது. கொலை செய்யப்பட்ட காலத்தில் உரிய முறையில் விசாரணைகள் நடத்தப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
தற்போது இந்த படுகொலை சம்பவம் தொடர்பில் முறையான விசாரணைகள் நடத்தப்பட்டு வருவதாக குற்றப் புலனாய்வுப் பிரிவு தெரிவித்துள்ளது. குற்றப் புலனாய்வுப் பிரிவின் விசேட காவல்துறைப் பிரிவு ஒன்று இந்த சம்பவம் குறித்த விசாரணைகளை ஆரம்பித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
கருணா சிக்குவாரோ இல்லையோ, தேசியப் பட்டியல் மூலம் எம்பி ஆகி பிரதியமைச்சர் ஆகாமல் இருந்தால் சரிதான்.
ReplyDeletems officer
ReplyDelete