Header Ads



நான் மேற்கொண்ட முயற்சிகளை கண்டுகொள்ளவில்லை - சுசில் பிரே­ம­ஜ­யந்த

எதிர்க்­கட்சித் தலை­வரை நிய­மிப்­பது தொடர் பில் சரி­யான நேரத்தில் சரி­யான முறையில் தீர்மா­னங்­களை எடுத்­தி­ருந்தால் தற்­போ­தைய நிலை­மையை விட சிறப்­பான நிலை­மையை ஏற்­ப­டுத்திக் கொண்­டி­ருக்­கலாம் எனத்தெரி­வித்­துள்ள அமைச்சர் சுசில் பிரே­ம­ஜ­யந்த தேசிய அர­சாங்கம் என்­பதை விட இணக்­கப்­பாட்டு அரசு என்­பதே பொருத்­த­மா­ன­தாகும் என்றும் அமைச்சர் தெரி­வித்­துள்ளார்.

தொழில்­நுட்பக் கல்வி மற்றும் தொழில் அமைச்­ச­ராக பத­வி­யேற்­றுள்ள அமைச்சர் சுசில் பிரேமஜயந்த வியா­ழக்­கி­ழமை அமைச்சில் கட­மை­களை பொறுப்­பேற்று பின்னர் ஊட­கங்­க­ளுக்கு கருத்து தெரி­வித்த போதே இவ்­வாறு தெரி­வித்­துள்ளார். அமைச்சர் இங்கு மேலும் தெரி­வித்­தி­ருப்­ப­தா­வது,

இரண்டு கட்­சி­க­ளுக்கும் மக்கள் பெரும்­பான்­மையை வழங்­க­வில்லை. தேசிய அர­சொன்று அமைக்­கப்­பட வேண்­டு­மென்­ப­தற்­கா­கவே மக்கள் இவ்­வா­றான தீர்ப்பை தேர்­தலில் வழங்­கி­னார்கள். எனவே கொள்­கை­யொன்றின் வரை­ய­றைக்குள் ஆட்­சி­யொன்றை ஏற்­ப­டுத்­தி­யி­ருந்தால் சிறப்­பாக அமைந்­தி­ருக்கும்.

தற்­போ­தைய ஆட்­சிக்கு தேசிய அரசு எனக் கூறு­வதை விட இணக்­கப்­பாட்டு ஆட்சி எனக் கூறு­வதே பொருத்­த­மா­ன­தாக அமையும். எதிர்க்­கட்சித் தலை­வரை நிய­மிக்கும் விட­யத்தில் சரி­யான நேரத்தில் சரி­யன முறையில் சரி­யான முடிவு எடுக்­கப்­பட்­டி­ருந்தால் இதனை விட சிறப்­பான நிலைமை ஏற்­பட்­டி­ருக்கும்.

2004 மற்றும் 2010 ஆம் ஆண்டு தேர்­தல்­களின் போது தேசியப் பட்­டியல் தொடர்­பாக எவ்­வி­த­மான குறை­பா­டு­களும் இருக்­க­வில்லை. குற்­றச்­சாட்­டு­களும் இருக்­க­வில்லை. ஆனால் இம்­முறை தேசியப் பட்­டியல் தொடர்பில் எனது பங்­க­ளிப்பு கிடை­யாது. எனவே என்­மீது எந்தக் குற்­றச்­சாட்­டையும் முன்­வைக்க முடி­யாது. ஐக்­கிய மக்கள் சுதந்­திர முன்­ன­ணியின் செய­லாளர் என்ற ரீதியில் நான் ஒரு தீர்­மா­னத்தை எடுத்தேன். தேர்­தலின் பின்னர் கட்­சி­யுடன் பேச்­சு­வார்த்­தை­களை நடத்தி எதிர்க்­கட்சி தலை­வ­ராக நிமால் சிறி­பால சில்­வாவை நிய­மித்து அது தொடர்பில் சபா­நா­ய­க­ருக்கு கடி­த­மொன்றை கைய­ளித்தோம்.

அப்­போது நாம் அரசின் பங்­கா­ளி­க­ளாக இருக்­க­வில்லை. பின்னர் நான் ஐ.ம.சு.முன்­ன­ணியின் செய­லாளர் பத­வி­யி­லி­ருந்து வெளி­யே­றினேன். வெளி­நாடு சென்றேன். பின்னர் திரும்பி வந்த போது அனைத்தும் மாற்­ற­ம­டைந்­தி­ருந்­தது.

எனக்­கெ­தி­ராக தடை­யுத்­த­ரவு அமுலில் இருக்கையில் சிலர் ஊடகவியலாளர்கள் மாநாடுகளை நடத்தினார்கள். தேங்காய் உடைத்தார்கள். நான் மேற்கொண்ட முயற்சிகளை கண்டுகொள்ளவில்லை. புரிந்து கொள்ளவும் இல்லை என்றார்.

No comments

Powered by Blogger.