Header Ads



ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி மைத்திரியினுடையதல்ல, எங்களுடையது - வாசுதேவ

மக்களின் அதிகாரத்திற்கமைய எங்கள் தலைவர் மஹிந்த ராஜபக்ச என நாடாளுமன்ற உறுப்பினர் வாசுதேவ நாணயக்கார தெரிவித்துள்ளார்.

அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளதாக சிங்கள ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.

ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி மற்றும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் உத்தியோகபூர்வ அதிகாரத்தை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கைப்பற்றியதாக கூறியதற்கு முன்னணியின் அதிகாரத்தை முழுமையாக அவரால் கைப்பற்றிக் கொள்ள முடியவில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.

நாங்கள் கட்சி என்ற ரீதியில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேவை எங்கள் தலைவராக நாங்கள் ஏற்றுகொள்ளவில்லை, மக்கள் அதிகாரத்திற்கமைய மஹிந்த ராஜபக்சவையே எங்கள் தலைவராக ஏற்றுகொண்டுள்ளோம் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

முன்னணியை கைவிடுவதற்கு நாங்கள் ஆயத்தம் இல்லை, முன்னணி எங்களுடையது, மைத்திரியினுடையதல்ல என அவர் தெரிவித்துள்ளார்.

அவர் ஐக்கிய தேசிய கட்சியின் வேட்பாளராகினார் தற்போதைய ஐக்கிய தேசிய கட்சி அவரை செயற்படுத்திகொண்டுள்ளது. ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியை ஐக்கிய தேசிய கட்சியில் சிக்க வைப்பதற்கே ஜனாதிபதி முயற்சிக்கின்றார் என அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

1 comment:

  1. It is time for You to be at home! MR has been rejected by the people. Do polítics on your LSSP!

    ReplyDelete

Powered by Blogger.