இனச்சுத்திகரிப்பு செய்யப்பட்ட, முஸ்லிம்களை மறந்துவிட்டார்கள் - றிசாத் பதியுதீன் ஆவேசம்
வடக்கிலிருந்து 1990 ஆம் ஆண்டு புலிகளினால் இனச்சுத்திகரிப்பு செய்யப்பட்ட முஸ்லிம்களை ஜெனீவாவில் எல்லாத் தரப்புகளும் மறந்துவிட்டதாக அமைச்சர் றிசாத் பதியுதீன் ஜப்னா முஸ்லிம் இணையத்திற்கு கூறினார்.
இதுதொடர்பில் அவர் மேலும் கூறியதாவது,
எதிர்வரும் ஒக்டோபர் மாதம் வடக்கிலிருந்து முஸ்லிம்கள் புலிகிளனால் இனச்சுத்திகரிப்பு செய்யப்பட்டு 25 வருடங்கள் நிறைவடைகிறது. அந்த முஸ்லிம்கள் இன்னும் பல பகுதிகளில் அகதி முகாம்களில் வாழ்ந்து வருகிறார்கள். இந்த முஸ்லிம்களின் துயர்துடைக்க என்னாலும், நான் வகித்த அமைச்சுப் பதவிகள் மூலமும் நடவடிக்கை மேற்கொண்டேன்.
வடக்கிலிருந்து இனச்சுத்திகரிப்பு செய்யப்பட்ட முஸ்லிம்களையும் அவர்களது தாயகத்தில் மீளக்குடியேற காத்திரமான நடவடிக்கைகளை இந்த அரசாங்கம் முன்னெடுக்க வேண்டும். இதில் தாமதிக்க கூடாது. இதற்கு சகல தரப்புகளுடனும் இணைந்து பணியாற்ற நான் தயாராக இருக்கிறேன்.
அதேவேளை நல்லாட்சியான இந்த அரசாங்கத்தில் வடக்கு முஸ்லிம்கள் குறித்த கவனத்தை ஈர்ப்பதற்காக எதிர்வரும் மாதம் கொழும்பில் மாபெரும் நிகழ்வொன்றையும் நடாத்துவது குறித்து பரிசீலித்து வருகிறேன். இதற்கு ஜனாதிபதி மைத்திரி, பிரதமர் ரணில் மற்றும் சந்திரிக்கா குமாரதுங்க உள்ளிட்டவர்களையும் அழைத்துவர ஏற்பாடு செய்து வருகிறேன்.
இப்போது ஜெனீவாவில் மனித உரிமைகள் குறித்த முக்கிய மாநாடு நடைபெறுகிறது. இதில் சிங்கள, தமிழ் சமூகங்களை பிரதிநிதித்துவப்படுத்தி பலர் பங்கேற்றுள்ளார்கள். சகலரும் தமது சமூகங்கள் பற்றி பேசுகிறார்கள். ஆனால் துரதிஷ்டவசமாக வடக்கு முஸ்லிம்கள் குறித்து பேச எவரும் இல்லை. வடக்கிலிருந்து 2 மணிநேர அவகாசத்தில் இனச்சுத்திகரிப:பு செய்யப்பட்ட முஸ்லிம்கள் குறித்தும் அங்கு பேசப்பட வேண்டும். பாதிக்கப்பட்ட ஒரு சமூகத்தின் பிரதிநிதி என்றவகையில் இதுகுறித்து உரிய தரப்பினரின் கவனத்தை ஈர்க்கவும், அந்த முஸ்லிம்களின் நலனுக்காகவும் என்னால் முடிந்த அத்தனை செயற்பாடுகளையும் துணிந்து மேற்கொள்வேன் எனவும் இதன்போது றிசாத் பதீயுதீன் ஆவேசமாக குறிப்பிட்டார்.
இடம் பெயர்ந்த முஸ்லிம்களுக்காக முஸ்லிம்களுக்கு மத்தியில் குரல் கொடுக்கும் நீங்கள் ஏன் ஜெனீவாவில் குரல் கொடுக்க வில்லை குறைந்தது அதற்கான முயற்சியையாவது செய்தீர்களா? ஜெனீவாகாரர்கள் ஒரு விசாரணையை செய்தார்கள் அந்த விசாரணயில் ஏன் உங்களால் இடம் பெயர்ந்த மக்களையும் பங்கு கொள்வதற்கான வசதியை ஏற்படுத்தி கொடுக்க முடியாமல் போனது? அந்த வேளையில் நீங்கள் ராஜபக்ச அன் கோ களுடன் ஹனீமூன் இல் இருந்தீர்கள் என்று நினைக்கிறோம்.
ReplyDeleteஎவ்வளவு காலத்துக்கு தான் இந்த இடம் பெயர்ந்த முஸ்லிம் மக்களை வைத்துக் கொண்டு இந்த அரசியல் வியாபாரம் செய்வீர்கள்?
முஸ்லிம் மக்களுக்கு ஏதாவது உருப்படியாக செய்ய வேண்டுமானால் நீங்களும் ஹக்கீமும் ஒற்றுமை பட்டு புத்தி ஜீவிகளின், சமூக ஆர்வலர்களின் ஆலோசனையையும் உள்வாங்கி உங்கள் அரசியலை முன்னெடுங்கள்.
ரணிலும் மைத்திரியும் சந்திரிக்காவும் சம்பந்தனும் சுமந்திரனும் பேசவுள்ளார்கள் அவர்கள் அப்படி பேசும் போது நீங்களும் ஹக்கீமும் ஒற்றுமையாக உங்கள் தரப்பையும் அந்த பேச்சில் பங்கு கொள்வதற்கு தயார் படுத்துங்கள் சகோதரரே.

இந்த ஆவேசம் அறிக்கை விடுவதில்தானா?
ReplyDeleteஉன்மையாகவே அக்கரை இருந்தால் ஜெனிவாவை பற்றி ஏற்கனவே சிந்தித்து செயற்பட்டிருக்கலாமே?
We hope Hon President Maithripala Sirisena will mention this in his UN Address...
ReplyDeleteSlmc oru katchiyaga irundu irundal power full aaha ellaam sadikka irunthathu thaaney eligator tear
ReplyDeleteபாதிக்கப்பட்டவனுக்குத்தான் இழப்பின் வலி தெரியும். தங்களது வாக்கு வங்கியை பலப்படுத்துவதற்காகவும் தேசிய பட்டியல் தேர்வுக்குமாக வடக்கில் வேர்விட்ட மரத்துப்போன கட்சிக்கோ அதில் கூடு கட்டி வாழும் குருவிகளுக்கோ புரிவதில்லை. மறைந்த தலைவர் அஷ்ரப் அவர்களுக்குப் பிறகு இடம் பெயர்ந்த வடபுல முஸ்லி்ம்களுக்காக சேவை செய்வது அமைச்சர் ரிஷாட் அவர்கள் தான் பெரும்பான்மைக் கருத்தாகும். ஊரார் பிள்ளையை ஊட்டி வளர்த்தால் தன் பிள்ளை தானே வளரும். வாக்கித்த மக்களுக்கு சேவை செய்தால் தன்கட்சி தானே வளரும்
ReplyDelete