'அல்லாஹ்வை சாட்சிவைத்து முறையிடுகிறேன், எங்களை இஸ்லாமியர்களாக மீட்டுத்தாருங்கள்'
-Firthous Fa-
உலமா சபை , தௌகீத் ஜமாஅத் , தப்லிக் ஜமாஅத் , ஜமாஅத் இஸ்லாமி, சுன்னத் வல்ஜமாஅத் , முஸ்லிம் அமைப்புகள் அனைத்துக்கும் அன்பான ஒரு வேண்டுகோள் எங்களை இஸ்லாமியர்களாக மீட்டு தாருங்கள்
நான் கிழக்கு மாகாணத்தில் பிறந்தவன் என்ற ரீதியில் எனது சமூகம் காலாகாலமாக பின்பற்றுகின்ற பெண்களிடம் வீடு வாங்கும் திருமண முறையை ஒழித்து ஆண்கள் வீடு கட்டி திருமணம் செய்யும் முறையை எங்களுக்குள் ஏற்படுத்தி தாருங்கள்
எங்கள் முன்னோர்கள் பின்பற்றிய இத்திருமண முறையானது, இஸ்லாத்திற்கு முற்றிலும் முரண் பட்டதும் சமூகத்தில் பல் வேறு வகையான சமூக சீரழிவுகளை ஏற்படுத்துவது மட்டுமன்றி பெண் வீட்டாரின் பொருளாதாரத்தை அடியோடு அழிக்கின்ற மிக மோசமான முறையாகவும் இருந்து வருகின்றது
எங்கள் சமூகம் கல்வி துறையிலும் மார்க்கத்திலும் தேர்ச்சி பெற்று நவீன கால வாழ்க்கை முறைக்குள் தங்களை உட்புகுத்தி கொண்டாலும் பெண்களிடம் வீடு வாங்கும் மோசமான சீதனத்தை இன்று வரை கை விடவில்லை
இதன் விளைவு உலமாக்கள் முதல் படித்த , பாமர மக்கள் வரை திருமணம் என்றால் பெண்ணுக்கு வீடு இருகின்றதா? என்ற கேள்வியுடன் தான் அவர்களின் அடுத்த கட்ட நகர்வுகள் மேற்கொள்ளபடுகின்றன
இது அல்லாஹ்வின் கட்டளைக்கும் நபி(ஸல்) அவர்களின் வாழ்க்கை முறைக்கும் எதிரானதும் ஹராமானதும் மான திருமண முறையாகும்
இத் திருமண முறையால் அதிகமான ஏழை பெண்கள் சிறிய வயதிலேயே நிர்பந்தத்தின் பேரில் வெளிநாடுகளுக்கு வேலைக்கு செல்கின்றனர் . இதன் மூலம் அவர்கள் சுமார் 17 மணி நேரம் வேலை செய்து பெரும் ஊதியமான (18000-20000) ரூபாய்வை கொண்டு தான் 10 அல்லது 12வருடங்களில் ஒரு சிறிய வீட்டை கட்டி கொண்டு திருமணம் பந்தத்தில் இணைகின்றனர் அப்போது அவர்களுக்கு 30 வயதையும் தாண்டி விடுகிறது .
அது மாத்திரமன்றி சில பெற்றோர்களுக்கு 2 பெண் பிள்ளைகள் இருந்து விட்டால் இரு வீடுகள் கட்ட வேண்டும் (ஒரு வீடு கட்டுவதற்கு 15-20 இலட்சம் )என்றால் இரு வீடுகள் கட்டுவதற்கு( 30-40 இலட்சம் ) தேவைபடும் இதனை சாதாரண தொழில் செய்யும் யாராலும் இலகுவாக பெற முடியாது
இருந்தும் சகல வலிகளையும் தாங்கி கொண்டு தனது மகள்களின் வாழ்வு நன்றாக அமைய வேண்டும் என்பதற்காக 18 மணி நேரம் ஓய்வின்றி வேலை செய்து தனது ஆயுள் முழுவதும் வெளிநாடுகளில் கழிக்கும் எத்தனை பெற்றோர்கள் (50 வயதை தாண்டியும் )
நிம்மதியை இழந்து வாழ் நாள் முழுவதும் கஷ்டத்தை மட்டுமே அனுபவித்து மகள்களின் திருமணத்தை முடித்து விட்டு இனியாவது நாட்டில் தன் மனைவியோடும் மகள்கலோடும் கடைசி காலத்தை கழிப்போம் என்ற ஆசையுடன் வரும் முதுமை கணவனுக்கு ஒரு அதிர்ச்சி காத்திருக்கின்றது .
என்னவென்றால் அவனுக்கும் மனைவிக்கும் அவன் கட்டிய 40 இலட்சம் பெறுமதியான வீட்டில் உரிமையின்றி அடுத்த மாதமே வீட்டை விட்டு வெளியேற்றப் பட்டு வாடகை வீடுகளில் உழைக்க முடியாத பருவத்தில் வாழ வேண்டிய சூழ்நிலை
இதை போன்று தான் ஓவ்வொரு வருடமும் புதிய புதிய யாசகம் கேட்கும் பெற்றோர்களை ஓவ்வொரு மணமகன்களும் உருவாக்கி கொண்டு இருகின்றனர். ? ?
இஸ்லாமிய வழிகாட்டிகளே அல்லாஹுக்கு பயந்து கொள்ளுங்கள். நீங்கள் தான் எங்களை வழி நடத்தும் தகுதியுடன் இருப்பவர்கள் மறுமையில் அல்லாஹ்விடம் பதில் சொல்ல வேண்டும் என்பதை மறந்து அலட்சியமாக இருந்து விட வேண்டாம்
ஒரு சாரார்(பெண் வீட்டார் )இன்னொரு சாராருக்கு (மணமகன் வீட்டார் )ருக்கு தனது முழு பொருளாதாரத்தை கொடுத்து விட்டு அநாதையாய் தெரிவில் நிற்கும் நிலையை இல்லாமல் ஆக்கி தாருங்கள்
கணவன் தானே மனைவிக்கு மஹர் முதல் , உணவு , உடை , வீடு கொடுக்க வேண்டும் இது தானே இஸ்லாமிய வழிகாட்டல் அப்படி இருக்கும் போது பெண்கள் ஏன் ? ? வீடு , பணம் கொடுக்க வேண்டும்
பள்ளிவாசல் கடிதம் இல்லாமல் திருமணம் செய்ய முடியாது என்று கட்டளை இட முடிந்த உங்களால் ஏன் ? ? ? பெண்களிடம் வீடு வாங்கி, திருமணம் செய்யும் எந்த திருமணத்தையும் நடத்தகூடாது என்று ஓவ்வொரு பள்ளிவாசல்களுக்கும் கட்டளை இடமுடியாமல் போனது..?
உலமாக்களே அல்லாஹ்வை சாட்சியாக வைத்து உங்களிடம் முறையிடுகிறேன் . நீங்கள் இவ்விடயத்தில் நீதமாக நடந்து கொள்ளுங்கள் பெண்களிடம் வீடு வாங்கும் திருமணத்திற்கு ஒரு முற்று புள்ளி வையுங்கள்
உலமாக்களே இது உங்களின் கவனத்திற்கு . . . . . . . . .
Very important request......but
ReplyDeleteNot only Aalims/ Ulama, every single muslim male/female should concern this and need to change their own life themselves in this matter.
All should concern to follow Al-Quraan & A-Hadeeth in this matter and try to live their life in pure Islamic way...then only can change this...
The north & eastern people can wake up....please..!!!
I think this greed make them this. All parent want to have Drs, Engineers, and other professionals as their sons in laws. and for that, they are ready to give any amount of money to buy them as sons in law? the result is this? so, it is Hindu culture and nothing to do with Islam. Youth, Clerics, mosques committee should be united to get rid of this. It is not difficult one. If all united this can be done. This is gone out of fashion among Muslims in other part of the country and soon it will be wiped out from East. but need some planing to do that.
ReplyDeleteNo, it is very hard to release the society from the cursing nature, the rich and land owners are in queue for buying the educated youths, the poor parents are agree with high amounts and properties, If some one got married without getting anything they insult him life long, respect and prestige comes from taking something is their motto, OK, one thing, the male already released from a family for marriage build houses for his sisters that goes to another male who had given his house to his sister.
ReplyDeleteThere are plenty of land and properties make the concept easy for about 15% rich and land owners but others suffer a lot as they copy the same style.
A man get married a girl after spent his time OL, AL and universities and the minimum age like 26 and above, he has no time to earn and build a house, but other regions of sri lanka muslims limited their studies and starts to earn from year 16 and 17. he can reserve anything for him and provide for parents also before he gets 26 and 27 of age.
I noticed there are many implications prevails in this issue and it will take many years and even now there are more changes, only calculating the housemaid salary into rupees not an example, the 30 years war made the people life more hard, it will be improved very soon.
MM
சீதனம் வாங்குவது இஸ்லாத்துக்கு முரணானது என்பதில் மாற்றுக்கருத்து கிடையாது. அது மாற்றப்படவும் வேண்டும். ஆனால் இந்த விடயத்தை ஊக்கிவிப்பவர்களில் பெண்களும் அவர்களை பெற்ற பெற்றோரும் பெரும் பங்கு வகிக்கிறார்கள் என்பதை மறுக்க முடியாது. கொடுப்பவர்கள் இருக்கப் போய்தான் வாங்குபவர்கள் உள்ளார்கள் என்பதையும் சுட்டிக்காட்ட விரும்புகிறோம். மித மிஞ்சிய பொருளாதாரத்தையும் மிதமிஞ்சிய வாழ்க்கை வசதிகளையும் கருத்தில் கொண்டு மாப்பிள்ளையை எதிர் பார்க்கும் பெண்களும் இந்த பிரச்சினையை ஊக்கப்படுத்துகிறது என்பதுவும் கவனத்தில் கொள்ளப்பட வேண்டும்.
ReplyDeleteMASHA ALLAH, GREAT NEWS FROM YOU BROTHER......
ReplyDeleteWE ARE ACCEPT AND FOLLOW INSHA ALLAH.
MASHA ALLAH, GREAT NEWS FROM YOU BROTHER......
ReplyDeleteWE ARE ACCEPT AND FOLLOW INSHA ALLAH.
youngsters of today must tell dowry hungry parents you are not a spineless coward to accept house as dowry to marry a woman. can you imagine the respect and love you will earn from your wife ? it will be bigger than anything in the world. try it. anyone want to enjoy your life to the fullest ? marry without a cent of dowry.
ReplyDeleteMay allah give them hidayath.n/e community
ReplyDelete99% of marrages happening to get & give dowry very simply because of selected b.groom so if they stop the selected job groom then only can stop.
ReplyDeleteஇஸ்லாத்தையும் முஸ்லிம்களையும் குறை கூறித்திரியும் la voix யசீர் போன்றவர்களின் பின்னூட்டம் எங்கே பொய் விட்டது.இவர்கள் யாரன்பது இப்பு முஸ்லிம்கள் விளங்கிக்கொள்ளுங்கள்.சீதனம் வாங்காத என்று சொல்பவர்களைத்தான் இவேர்கள் குறை கூறுவார்கள்.
ReplyDeleteமாஷாஅல்லாஹ் இதை எழுதிய சகோதரருக்கு அல்லாஹ் றஹ்மத் செய்வானாக. இதை செய்வதில் மிகவும் முக்கியமான பங்களிப்பு மணமகன், மணமகள் & பெற்றோரிடமும் தான் இருக்கிறது. அத்துடன் இவ்வாறு திருமணம் செய்ய தயாராகும் இளைஞர்களுக்கு உதவுவது சமூகத்தின் கடமையாகும். மேலும் யார் அல்லாஹ்வும் நபியும் கூரிய முறையில் அவர்கள் வாழ்க்கையை அமைத்துக் கொள்கிறார்களோ நிச்சயமாக அல்லாஹ்வின் றஹ்மத் அவர்களின் வாழ்க்கையில் ஏற்படும்.
ReplyDeleteதனது மகளுக்கு திருமணம் முடித்துக் கொடுக்க பணமில்லாமல் துடிக்கும் தாய்!
ReplyDeleteதனது மகனுக்கு பெண்ணெடுக்கும்போது நாமும் கொடுத்துத்தானே முடித்தோம்; வாங்கத்தானே வேண்டும் என்கிறாள்!
தனது சகோதரியை முடித்துக் கொடுக்க பல இன்னல்களை சந்திக்கும் ஆண்; தான் முடிக்கும்போது நாமும் கொடுத்துக் களைப்படைந்து விட்டோம் வாங்கத்தானே வேண்டும் என்கிறான்!
தனது மகளுக்கு சீதனம் இல்லாமல் அனுப்பிவைத்தால் அங்கு மாமியார் என்ன கொடுமைகளைச் செய்வாரோ என துடிக்கும் தாய்!
தனது மகன் சீதனம் இல்லாமல் கட்டிவரும் மருமகளை மனமுவந்து ஏற்கத் தயாரில்லை! இரண்டும் கேட்டான் நிலையில் கூலாக தந்தைமார். இறுதியில் தாயும் தந்தையும் மாட்டுக்கொட்டிலில். பொதுவாக கிழக்கில் பாதை வழியாக செல்லமுடியாது . வீதிக்கு வீதி பள்ளிவாயல்களில் ஏட்டிக்குப் போட்டியாக இஸ்லாமிய பயான்கள். அதிலும் மெளவிமார்கள் வீட்டிலும் சீதனம் அழகாய் அலங்கரிக்கப்படுவது கொடுமையிலும் கொடுமை! ஒரு ரூபாய் கடன் இருந்தால் பத்ருப் போரில் ஷஹீதான ஷுஹதாவுக்கும் சுவர்க்கம் போக முடியாதென்றால் பெண் வீட்டில் சீதனம் பெற்றவர்கள் இதனை திருப்பிக் கொடுக்காதவரை அல்லாஹ்விடம் தப்பமுடியாது - மறுமையிலும் சீதனம் பெற்றதற்கு மருமகனை மாமி வீட்டார் மன்னிக்கவா போகிறார்கள்! சுருக்கமாகச் சொன்னால் சீதனம் பெறுபவன் ஒரு விலைமாதுவை விடக் கேவலமானவன். காரணம் அவள் ஒருவனுக்கு இன்பத்தை வழங்கிவிட்டு பணம் பெறுகிறாள். அனால் இவனோ காலமெல்லாம் இன்பத்தையும் அன்பையும் அரவணைப்பையும் தருகிறவளிடம் பணம் வாங்குகிறான். என்னே ஒரு கேவலம்.........!!!
சீதனம் வாங்குபவன் எவனாக இருந்தாலும் அவன் மிருகத்தை விட கேவலம் கெட்டவந்தான்.சீதனத்தில் ஒவ்வொருவருக்கு ஒவ்வொரு விலை வைத்தியருக்கு ஒரு விலை இஞ்சினியருக்கு ஒரு விலை மாஸ்டருக்கு ஒரு விலை மவ்லாவிக்கி ஒரு விலை பாமரனுக்கு ஒரு விலை, மாடு ஆடு கோழி ஒவ்வொரு விலை போன்று இந்த ஈமானை திண்ட மாட்டுக்கும் ஒரு விலை(.எல்லோரும் இல்லை )ஒரு வைத்தியர் ஒரு பெண்ணின் கற்ப காலத்தை அறிந்தவர் இப்படிப்பட்ட அறிவு கெட்ட வைத்தியரும் ஒரு கோடிக்கு மேல் சொத்து சீதனம் வாங்குகிறான் அதே வேல சொந்த மாமிடஅழகான மகள் அடுத்த வீட்டில் கன்னியாக இருந்து பேரு மூச்சு விடுகிறாள் பணத்துக்காக அழகும் இல்லாத ஒருத்தியை பணமுடித்து காலமல்லாம் வைத்தியர் அடிமையாக வாழ்கிறார் பைத்தியமாக.
ReplyDelete