முஸ்லிம் சமய விவகார பிரதியமைச்சராக, பௌத்தர் நியமிக்கபட்டமைக்கு எதிர்ப்பு
முஸ்லிம் சமய விவகார பிதி அமைச்சுப் பதவி பௌத்தர் ஒருவருக்கு வழங்கப்பட்டமைக்கு எதிர்ப்பு வெளியிடப்பட்டுள்ளது.
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் முஸ்லிம் சம்மேளனத்தில் இவ்வாறு எதிர்ப்பு வெளியிடப்பட்டுள்ளது.
முஸ்லிம் சமய விவகார அமைச்சு முஸ்லிம் ஒருவருக்கு வழங்காது, பௌத்தருக்கு வழங்கியமை ஏற்றுக்கொள்ளக் கூடியதல்ல என தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த புதன்கிழமை கொழும்பு 7ல் அமைந்துள்ள பிரதி அமைச்சர் ஏ.எச்.எம்.பௌசீயின் இல்லத்தில் இது குறித்து பேசப்பட்டுள்ளது.
பைசர் முஸ்தபா, எம்.எல்.எம். ஹிஸ்புல்லா, எம்.மஸ்தான், உள்ளிட்ட முஸ்லிம் அமைச்சர்கள் நாடாளுமன்ற உறுப்பினர்கள் பலரும் இந்த சந்திப்பில் பங்கேற்றிருந்தனர்.
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பிரதேச அரசியல்வாதிகளும், சமூக செயற்பாட்டாளர்களும் இந்தக் கூட்டத்தில் பங்கேற்றிருந்தனர்.
முஸ்லிம் சமய விவகார பிரதி அமைச்சுப் பொறுப்பு கம்பஹா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துலிப் விஜேசேகரவிற்கு வழங்கியமை, முஸ்லிம்களுக்கு இழைத்த கடும் அநீதியாகும் என கருத்து வெளியிட்டுள்ளனர்.
இந்தப் பதவிக்கு முஸ்லிம் ஒருவரை நியமிக்குமாறு எதிர்வரும் நாட்களில் அரசாங்கத்திடம் கோரிக்கை விடுக்கத் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
Post a Comment