ரவூப் ஹக்கீமுக்கு, ஒரு கடிதம்
ரஊப் ஹக்கீம்
தலைவர்,
ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ்,
தாருஸ்ஸலாம், கொழும்பு
தேசியப்பட்டியல் + NFGG சுழற்சிமுறை
2015.08.17ம் திகதி நடைபெற்று முடிந்த பாராளுமன்ற பொதுத் தேர்தலைத் தொடர்ந்து பத்திரிகைக்கு என்னால் எழுதப்பட்ட அறிக்கை தொடர்பிலும் தேசியப் பட்டியல் பகிர்ந்தளிப்பு பற்றி கல்முனையில் தாங்கள் தெரிவித்த கருத்துத் தொடர்பிலும், மேலும் சில விடயங்களில் தங்களின் கவனத்தை குவிக்க விரும்புகிறேன்.
1. தேசியப் பட்டியல் நியமனமானது பொதுவாக புத்திஜீவிகளுக்கும் கட்சிகளின் பிரதிநிதிகளுக்கும் வழங்கப்பட்டு வந்திருப்பதை தாங்கள் அறிவீர்கள் 1994ம் ஆண்டு 'அரசியல் ஆலை' அஷ்ரப் அவர்கள் மு.கா.வுக்கு கிடைத்த 3 தேசியப்பட்டியல் நியமனங்களையும் முறையே லிபரல் கட்சியைச் சேர்ந்த அசித்த பெரேராவுக்கும், 'பாமிஸ்' இயக்கத்தைச் சேர்ந்த என்.எம்.சுஹைர் அவர்களுக்கும், புத்திஜீவியாகிய உங்களுக்கும் வழங்கியிருந்தார். மட்டுமல்லாது உங்களை பாராளுமன்றக் குழுக்களின் பிரதித் தலைவராகவும் நியமித்தார். உங்களின் தேசியப் பட்டியல் நியமனத்தினூடாகவும், அஷ்ரபின் அரசியல் வழிமுறையில் நின்றும் NFGG க்கு தேசியப்பட்டியல் நியமனம் வழங்குவதற்கான நியாயத்தை நோக்க வேண்டும்.
2. கூட்டுக் கட்சிகளுக்கும், புத்தி ஜீவிகளுக்கும் தேசியப் பட்டியல் நியமனம் வழங்கப்பட்டு வந்திருப்பதை விகிதாசார தேர்தல் முறை அறிமுகமான 1989ம் ஆண்டு தொடக்கம் UNP, SLFP போன்ற பிரதான அரசியல் கட்சிகளின் பாராளுமன்ற பிரதிநிதித்துவங்களை அவதானிப்பதன் மூலம் தெளிவாக அறிந்து கொள்ளலாம். இதனை தாங்களுக்கு ஞாபகமூட்டவோ, தெளிவூட்டவோ வேண்டிய அவசியமில்லை.
3. பெரும்பான்மை சிங்களக் கட்சிகளை விடுத்து சகோதர இனமாகிய தமிழ் மக்களின் பேராதரவினைப் பெற்ற கட்சியாகிய தமிழ் தேசியக் கூட்டமைப்பில் ITAK + EPRLF + PLOT + TELO போன்ற கட்சிகளும், இயக்கங்களும் அங்கம் வகிப்பதோடு தேசியப் பட்டியல் பாராளுமன்ற உறுப்புரிமையினையும் பங்கிட்டு வந்திருப்பதும் தாங்கள் அறிந்ததே. கொள்கைகளும் அரசியல் பாதையும் வேறானாலும் மக்களின் அரசியல் அபிலாஷைகளை வென்றெடுப்பதற்கு கட்சிகளுக்கிடையிலான கூட்டுணைவும், ஒற்றுமையும் அவசியம் அந்த அடிப்படையில் SLMC + NFGG கூட்டிணைவு தொடர்ந்தும் பேணப்படுவதற்கு பாராளுமன்ற உறுப்பினர் பதவி பங்களிப்புச் செய்தமைக்கான பகிர்தளிப்பாக அமைய வேண்டும்.
4. 2012ம் ஆண்டு கிழக்கு மாகாண தேர்தலுக்கு முன்னர் தனியாகச் செயற்பட்டு வந்த னுருயு (ஜனநாயக ஐக்கிய முன்னணி) ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரசுடன் இணைந்து கொண்டதும் பின்னர் அதன் தலைமை கிழக்கு மாகாண சபை முதலமைச்சராக செயற்பட்டு வருவதும் சகோதர கட்சிகளின் கூட்டிணைவு மூலமே சாத்தியமானது என்பதையும் இத்தகைய இணைவும் அதிகார பங்கீடும் கட்சியின் வளர்சிக்கும் மக்கள் மத்தியில் நம்பிக்கை கட்டியெழுப்பப்படுவதற்கும் பிரதானமானது.
5. 2004ம் ஆண்டு SLMC + dua க்கும் இடையில் செய்து கொள்ளப்பட்ட புரிந்துணர்வு உடன்படிக்கையின் பிரகாரம் ஐ.தே.கட்சி 4 தேசியப் பட்டியல் நியமனங்களை வழங்கியது. கட்சியின் சிரேஷட உறுப்பினர்கள் பலர் அதிருப்தி அடைந்த போதிலும் செய்து கொள்ளப்பட்ட புரிந்துணர்வு உடன்படிக்கையின் நம்பிக்கையினை காப்பாற்றும் விதமாக ருNP செயற்பட்டமையினையும் அதே போல் SLMC + NFGG புரிந்துணர்வு உடன்படிக்கையின் சாரம்சங்களை தாங்கள் கவனத்தில் கொள்வது அவசியம்.
6. 1989ம் ஆண்டு அல்லது 1994ம் ஆண்டு தலைவர் அஷ்ரப் அவர்கள் காத்தான்குடி மண்ணிலிருந்து சுழற்சி முறையில் பாராளுமன்ற உறுப்பினர் பதவி பகிர்ந்தளிக்கப்பட வேண்டுமென கண்ட கனவு அவரின் 15 ஆண்டு பிரிவின் பின்னராவது 'கபூலா' க்கப்பட வேண்டுமாயின் காத்தான்குடி மண்ணில் கருக்கொண்ட NFGG க்கு தேசியப் பட்டியல் நியமனத்தை வழங்க தாங்கள் தயக்கமின்றி முன்வர வேண்டும்.
7. வன்னி, திருமலையில் மு.கா. பிரதிநிதித்துவம் இழக்கப்பட்டும் மட்டக்களப்பில் மு.கா. பிரதிநிதித்துவம் காப்பாற்றப்பட தங்களை ஏணியாகவும், மெழுகாகவும் இணைத்துக் கொண்ட NFGG காத்தான்குடி நகரசபையில் கடைப்பிடித்துக் காட்டிய மீளழைத்தல் Recall System) நல்லாட்சித் தத்துவத்தினை முஸ்லிம் அரசியலில் அமுல்படுத்துவதற்கு தேசியப் பட்டியலின் முதல் பதவிக் காலத்தினை வழங்கி உரிய கால நிறைவில் இராஜினாமா செய்து காட்டுவதற்கு தாங்கள் களமமைத்துக் கொடுக்க வேண்டும்.
நன்றி.
வஸ்ஸலாம்.
றிபாஸ் LLB
சட்டத்தரணி,
மருதமுனை.
நாம் அறிந்த வரை நல்லாட்சிக்கான இயக்கமும் முஸ்லிம் காங்கிரசும் செய்து கொண்ட ஒப்பந்தப்படி நல்லாட்சி வேட்பாளர் ரஹ்மான் வெற்றி பெற்றால் அவர்களுக்கு ஒரு தேசிய பட்டியல் வழங்குவது என்பதே. மாறாக ரஹ்மான தோற்றாலும் தேசிய பட்டியல் தருவது என குறிப்பிடப்படவில்லை. அத்துடன் நல்லாட்சி இயக்கத்தினர் தாம் மு. காவுடன் செய்து கொண்ட ஒப்பந்தத்தை இன்று வரை ஊடகங்களுக்கு அதன் பிரதிய வழங்காததன் மூலம் இவர்கள் கள்ளத்தனம் புரிகிறது. இந்த நிலையில் தமது ஒப்பந்தத்தை மக்களிடம் தராமல் தேசிய பட்டியல் விடயத்தை ஊடகங்கள் மூலம் மக்களுக்கு சொல்வது முறையற்ற செயலாகும்.
ReplyDeleteபாமரத்தனமான கருத்துக்களை கண்டிருக்கின்றோம். இத்தனை பாமரத்தனமாகவும் ஒருவரால் கருத்து சொல்ல முடியும் என்பதை Aljazeera Lanka வின் கருத்திலுருந்து புரிகிறது.
ReplyDeleteஏனெனில், SLMC-NFGG க்கிடையிலான ஒப்பந்தம் பரவலாக சகல ஊடகங்களிலும் பிரசுரமாகியிருந்தது. மாத்திரமின்றி இதனை தனியான பிரசுரமாக அச்சிட்டு தாம் போட்டியிட்ட சகல பிரதேசங்களிலும் வீடுவீடாக வினியோகித்தது.அதில் தேசியப்பட்டியல் தொடர்பில் இவ்வாறு கூறப்பட்டுள்ளது ..
" பொதுத் தேர்தலைத் தொடர்ந்து ந.தே.மு வின் பாராளுமன்ற பிரதிநிதித்துவத்தை உத்தரவாதப்படுத்த வேண்டிய அவசியம் ஏற்படும் பட்சத்தில் அதனை ஸ்ரீ.ல.மு.கா பரிசீலித்து உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ளும். அதற்கேற்ற வகையில் ந.தே.மு வினால் பிரேரிக்கப்படும் ஒருவர் சமர்பிக்கப்படும் தேசியப் பட்டியலில் உள்வாங்கப்படுவார்."
இந்த எழுத்து மூலமான உடன்பாட்டினை SLMC மதித்து அமுல் படுத்த வேண்டியது SLMCயின் கடமையாகும்.