Header Ads



கலப்பு நீதிமன்றம் அமைக்க வேண்டும், சர்வதேச விசாரணை ஒன்று அவசியமாகின்றது - ஹுசேன்

இரண்டு தரப்புக்களுக்கும் போர்க்குற்றச் செயல்களில் ஈடுபட்டதாக ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையின் ஆணையாளர் சயிட் ஹல் ஹ_செய்ன் தெரிவித்துள்ளார்.

ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையினால் இலங்கை குறித்த விசாரணை அறிக்கையை வெளியிட்ட போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

இலங்கைப் போரின் போது மனித உரிமை மீறல்கள் மற்றும் போர்க் குற்றச் செயல்கள் இடம்பெற்றுள்ளன.

இந்தக் குற்றச் செயல்களை இரண்டு தரப்பினரும் மேற்கொண்டுள்ளனர்.

குற்றச் செயல்கள் தொடர்பில் விசாரணை நடாத்த விசேட ஹைபிரைட் நீதிமன்றமொன்று உருவாக்கப்பட வேண்டும்.

இந்த விசாரணைகளில் சர்வதேச நீதவான்கள் சர்வதேச சட்டத்தரணிகள் மற்றும் விசாரணையாளர்களின் பங்களிப்பும் உள்ளடக்கப்பட வேண்டும்.

விசாரணைகளின் மூலம் பாரதூரமான குற்றச் செயல்கள் இடம்பெற்றமை உறுதியாகியுள்ளது.

செல் குண்டுத்தாக்குதல், பாலியல் வன்கொடுமை, சிறுவர் போராளிகளை படையில் பலவந்தமாக இணைத்தல், பலவந்தமான காணாமல் போதல்கள் உள்ளிட்ட பல்வேறு குற்றச் செயல்கள் இடம்பெற்றுள்ளதாக தெரிவித்துள்ளார்.

பல்லின அங்கத்துவம் கொண்ட சர்வதேச பங்களிப்புடன் கூடிய விசாரணைப் பொறிமுறைமை உருவாக்கப்பட வேண்டியது அவசியமானது என அவர் குறிப்பிட்டுள்ளார்.

2

 போர்க்குற்ற விசாரணை நடத்த கலப்பு நீதிமன்றம் அமைக்க ஐ.நா வலியுறுத்தல்: ஆவணம் இணைப்பு

இலங்கையில் இடம்பெற்றதாகக் கூறப்படும் யுத்தக் குற்றச்சாட்டுக்களை நிரூபித்துக் கொள்ளும் நோக்கில் தேசிய, சர்வதேசம் இணைந்த கலப்பு நீதிமன்றம் ஒன்று அமைக்கப்பட வேண்டும் என ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவை வலியுறுத்தியுள்ளது.

இலங்கை போர்க்குற்ற விசாரணை அறிக்கை தொடர்பில் இடம்பெறும் ஊடக சந்திப்பில் ஐநா மனித உரிமை ஆணையாளர் செயித் அல் ஹுசேன் இதனை வலியுறுத்தியுள்ளார்.

இலங்கையின் தற்போதைய அரசாங்கம் சிறப்பான நடவடிக்கைகளை முன்னெடுத்து வருவதாகவும் இறுதிக்கட்ட யுத்தத்தின் போது இருதரப்பும் ஏராளமான பொதுமக்களை கொன்றது என்று ஐ.நா. மனித உரிமைகள் ஆணையகத்தில் இலங்கை தொடர்பாக இன்று வெியிடப்பட்ட அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

அத்துடன் இலங்கையின் நீதித்துறை போர்க்குற்றம் பற்றி விசாரிக்க இதுவரை தயாராகவில்லை என்றும் ஆகவே சர்வதேச விசாரணை ஒன்று அவசியமாகின்றது என்றும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

விசாரணைகளை மேற்கொள்வதற்கு உள்நாட்டு மற்றும் சர்வதேச நீதிபதிகள் அடங்கிய குழுவொன்று நியமிக்கப்பட வேண்டும் என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

போர் நடந்த காலம் இலங்கையின் இருண்ட காலம் என்றும் இலங்கை அரசு மற்றும் விடுதலைப் புலிகள் ஆகிய இருதரப்பும் போர்க்குற்றங்களில் ஈடுபட்டுள்ளன.

அத்துடன் தமிழர்களுக்கு எதிரான நடவடிக்கைகளை இலங்கை அரசு நிறுத்த வேண்டும் என்றும் அறிக்கயில் குறிப்பிடப்பட்டுள்ளது.

ஐ.நா மனித உரிமைகள் ஆணையகத்தின் 30வது கூட்டத் தொடர் ஜெனிவாவில் இடம்பெற்று வருகின்றது.

இந்த நிலையில் இலங்கை தொடர்பான அறிக்கை இன்று வௌியிடப்பட்டது.

இந்த அறிக்கையை ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளர் நாயகம் ஸெய்யித் அல் ஹுஸைன் அவையில் வாசித்தார்.

1 comment:

  1. நியாயமான தீர்ப்பு இரண்டு பக்கமும் குற்றம் உண்டு.உள்நாட்டு நீதிபதிகளும் பல்நாட்டு நீதிபதிகளும் விசாரணை மேட்கொல்வாது மிகவும் சிறந்த தீர்ப்புத்தான்.பக்க சார்பில்லாத தீர்ப்பு.

    ReplyDelete

Powered by Blogger.