Header Ads



ஐ.நா.வில் முதல் முறையாக பாலஸ்தீன கொடி - அமெரிக்கா, இஸ்ரேல் உள்ளிட்ட 8 நாடுகள் எதிர்ப்பு

ஐ.நா.வில் முதல் முறையாக வாடிகன், பாலஸ்தீன கொடிகள் பறக்கவிடப்படவுள்ளன.

 ஐ.நா.வில் இது தொடர்பான தீர்மானம் நிறைவேறியதைத் தொடர்ந்து, அனைத்து உறுப்பு நாடுகளின் தேசியக் கொடி போலவே, வாடிகன், பாலஸ்தீனக் கொடிகள் பறக்கவிடப்படுகின்றன.

 ஐ.நா.வின் உறுப்பு நாடுகளின் தேசியக் கொடிகள் வரும் செப். 30-ஆம் தேதி ஏற்றப்படும். அப்போது வாடிகன், பாலஸ்தீனத்தின் கொடிகளும் ஏற்றப்படவுள்ளன.

 பாலஸ்தீனக் கொடியேற்றுவது தொடர்பான தீர்மானத்தை அமெரிக்கா, இஸ்ரேல், கனடா, ஆஸ்திரேலியா உள்ளிட்ட 8 நாடுகள் எதிர்த்து வாக்களித்தன.

 இது போன்ற செய்கைகளால் இஸ்ரேல் - பாலஸ்தீனம் இடையே அமைதி ஏற்பட்டு விடாது என்று அந்த நாடுகள் தெரிவித்தன.

 ஜெர்மனி, நார்வே உள்ளிட்ட 45 நாடுகள் வாக்கெடுப்பைப் புறக்கணித்தன.

 தங்களைத் தனி நாடாக முறைப்படி அங்கீகரிக்க வேண்டும் என்னும் நெடு நாள் கோரிக்கைக்கு கொடியேற்ற நிகழ்ச்சி வலுசேர்க்கும் என்று பாலஸ்தீனம் கூறி வருகிறது.

 கொடியேற்ற நிகழ்ச்சியில் பாலஸ்தீன அதிபர் முகமது அப்பாஸ் கலந்து கொள்கிறார். மேலும் அந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ளுமாறு நூற்றுக்கணக்கான தலைவர்களுக்கு பாலஸ்தீனம் சார்பில் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

No comments

Powered by Blogger.