Header Ads



வெலே சுதாவின் கையடக்க தொலைபேசியில், 84 சிறையதிகாரிகளின் தொலைபேசி இலக்கங்கள்!

ஹெரோயின் போதைப் பொருள் விற்பனையில் ஈடுபட்டதாக கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ள வெலே சுதா என்ற சமந்த குமார விதானகேவிடம் இருந்த தொலைபேசி இலக்கங்களில் சிறைச்சாலை அதிகாரிகளின் இலக்கங்களும் இருந்ததாக குற்றப் புலனாய்வுப் பிரிவினர் தெரிவித்துள்ளனர்.

வெலே சுதாவிடம் தொலைபேசியில் இருந்த 184 தொலைபேசி இலக்கங்கள் கண்டுப்பிடிக்கப்பட்டுள்ளன.

அவற்றில் 84 இலக்கங்கள் சிறைச்சாலை அதிகாரிகளுடையது என குற்றப் புலனாய்வுப் பிரிவினர் கூறியுள்ளனர்.

பாரியளவில் ஹெரோயின் போதைப் பொருளை விற்பனை செய்து பணம் சம்பாதித்த குற்றச்சாட்டில் வெலே சுதா கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ளார்.

இவருடன் அரசியல்வாதிகள், நடிகைகள் மற்றும் முக்கிய நபர்களுக்கு தொடர்பிருந்தாக தகவல்கள் வெளியாகியிருந்தன.

No comments

Powered by Blogger.