'மகிந்த ராஜபக்சவுக்கு 3 வேளை உணவு கொடுத்து, பாராளுமன்றம் செல்லுதல்'
100 நாள் அரசாங்கத்தில் அமைச்சர் பதவிகளை பெற்றுக்கொண்ட ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் அலைந்து திரியும் ஆவிகளுக்கு சாப்பிடுவதற்கு மட்டுமே வாய்திறக்க முடியும் என்று கூறிய டி.பி. ஏக்கநாயக்கவுக்கும் ஐக்கிய தேசியக் கட்சிக்கு எதிராக வாய் திறக்க முடியாது என மக்கள் விடுதலை முன்னணியின் வடமேல் மாகாண சபை உறுப்பினர் நாமல் கருணாரத்ன தெரிவித்துள்ளார்.
தேசிய அரசாங்கத்தில் அமைச்சர் பதவியை பெற்றுக்கொண்டுள்ள ஏக்கநாயக்கவுக்கு தற்போது சாப்பிடுவதற்கும் கொட்டாவி விடுவதற்கும் மட்டுமே வாய் திறக்க முடியும். இவர்கள் இதுவரை நாடாளுமன்றத்திற்கு சென்றிருந்தாலும் இவை இரண்டையே செய்து வந்தனர்.
டி.பி ஏக்கநாயக்க, மகிந்தவை தோளில் சுமந்து கொண்டு சென்றார். மகிந்த தங்குவதற்கு வீடொன்றை கொடுத்தார். மகிந்த ராஜபக்ச மூன்று வேளையும் உணவை தானே கொடுத்ததாக ஊர் ஊராக சென்று கூறி, மகிந்தவின் தோளில் ஏறி நாடாளுமன்றம் சென்றார்.
இறுதியில் மகிந்தவை தனியாக விட்டு விட்டு, ஐக்கிய தேசியக் கட்சியுடனான கூட்டணி அரசாங்கத்தில் இணைந்து கொண்டார். இவர்கள் வாய் மூலம் பேசுகிறார்களா அல்லது வேறு வழியில் பேசுகிறார்களா எனவும் நாமல் கருணாரதன் கேள்வி எழுப்பியுள்ளார்.
Post a Comment